புசு புசு கீரை இட்லி

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியில் பல விதமான வகைகள் உண்டு.

அவற்றில் சில: செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி & குஷ்பு இட்லி. இந்த வரிசையில் இப்போது கிராமத்து இட்லி அதாவது கீரை இட்லி.

ஆரோக்கியமான சுவையான கீரை இட்லி செய்வது எப்படி? இதோ உங்களுக்கான செய்முறை...


தேவையானப் பொருள்கள்:
இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
  • இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள்.

  • கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.

மல்லிகைப்பூ இட்லி

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

எப்படீனு கேட்கிறீங்களா...!?
புழுங்கலரிசி - 2 கப்
முழு உளுத்தம் பருப்பு - அரை கப்,
உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

இப்படி தயாரித்த மாவின் இட்லி சுட்டு சாப்பிட்டு பாருங்க... அப்புறம் தெரியும் உங்கள் கை பக்குவம் என்னவென்று!

Tips :-
இட்லி, தோசைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும் போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் கமகமவென்று மணமாக இருக்கும்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top