2011-ல் கலக்கிய நடிகைகள்!!!

தமிழ் படங்களில் 2011-ல் இளம் நாயகிகள் ஆதிக்கம் பலமாக இருந்தது. முன்னணி நடிகைகளாக இருந்த நயன்தாரா, திரிஷா, சினேகா, ஸ்ரேயா, தமன்னா போன்றோர் பின்தங்கியுள்ளனர். நயன்தாரா திருமணத்துக்கு தயாராகி நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.

திரிஷா தெலுங்கில் கவனம் செலுத்துகிறார். அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, அஞ்சலி, காஜல் அகர்வால் என பல புது நாயகிகள் இவ்வாண்டில் கலக்கினார்கள்.


அனுஷ்கா வானம், தெய்வத்திருமகள் படங்களில் வந்தார். ரஜினி, கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் இவரை நெருங்குகிறது. முன்னணி ஹீரோக்கள் அனுஷ்காவுடன் நடிக்க விரும்புகிறார்கள்.

சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாகவும், செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாகவும் தற்போது நடிக்கிறார்.

ஹன்சிகா மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இருக்கிறார்.

சிம்புவுடன் வேட்டை மன்னன், உதயநிதி ஸ்டாலினுடன் "ஒரு கல் ஒரு கண்ணாடி" படங்கள் கைவசம் உள்ளன. அமலாபாலுக்கு தெய்வத் திருமகள் படம் திருப்பு முனையாக அமைந்தது. மாதவன், ஆர்யாவுடன் வேட்டை, பழைய நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

டாப்ஸி, ஆடுகளம், வந்தான் வென்றான், என இருபடங்களில் வந்தார்.


காஜல் அகர்வாலுக்கு இவ்வாண்டில் படங்கள் இல்லை. ஆனாலும் பெரிய நடிகர்களான ஆர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி படங்களில் நடிக்கிறார்.

லட்சுமிராய், மெகா ஹிட்டான படங்களான காஞ்சனா, மங்காத்தா படங்களில் வந்தார்.

திரிஷாவும் மங்காத்தா படத்தில் இருந்தார். ஸ்ரேயாவுக்கு ரௌத்திரத்துக்கு பிறகு படங்கள் இல்லை.

சிறுத்தை, வேங்கை படங்களுக்கு பிறகு தமன்னாவிடம் தமிழ் படங்கள் இல்லை.


ஸ்ருதி, 7ஆம் அறிவு படம் மூலம் பேசப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக '3' படத்தில் நடிக்கிறார். அஞ்சலி, கார்த்திகா, அனன்யா, ரிச்சா, ஓவியா, 'கோ'வில் வந்த கார்த்திகா போன்றோரும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருந்தனர்.

வரும் 2012 ஆண்டில் இவர்கள் அனைவரது பங்களிப்பும் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே, இந்தப் புதிய நட்சத்திரங்களது எதிர்காலம் அமையும். அது ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பும். கோலிவுட் உலகுக்கு இவர்கள் அனைவரையும் கைதட்டி வரவேற்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top