2011 ம் ஆண்டு என்னை கவர்ந்த 10 கதாநாயகிகள்!

2011-ம் ஆண்டு வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில், ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்த போதும், ஒரு சிலரே கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருந்தனர். இந்த வருடம் மட்டும் தமிழில் 57 ஹீரோஸ் & 52 ஹீரோயின்ஸ் அறிமுகம் ஆனார்கள்.

52 பேர் ஹீரோயின்களில் என்னை கவர்ந்த சில கதாநாயகிகள்...

1. ரிச்சா கங்கோபாத்யாயா (மயக்கம் என்ன & ஒஸ்தி)


செல்வராகவனின் நாயகிகள் போலவே தைரியமான வலிமையான தீர்க்கமான கதாப்பாத்திரம். இரண்டாம் பாதியில் தனுஷோடு போட்டி போட்டிகிறார் நடிப்பில்.

2. ஸ்ருதி ஹாசன் (7ஆம் அறிவு)

கமல்ஹாசன் நிச்சயம் பெருமைபட்டு கொள்ளலாம்.


எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று..! அதனை உணர்த்துவது போல் அழகான அளவான நடிப்பு. குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது. Welcome Shuruthi!

3. டாப்ஸி (ஆடுகளம்)

ஆடுகளம் படத்தின் மூலம் வெள்ளாவிப் பெண்ணாக தமிழ்நாட்டு இளசுளை கலங்கடித்திருகிறார் டாப்ஸி.


டாப்ஸியின் கன்னங்களும் கவலைக்குரியதாக மாறும் போலிருக்கிறது இருக்கிற நிலைமையை பார்த்தால். கதையில் இவருக்கு அதிக நடிப்பு வேளையோ தனியே டுயட்டோ இல்லை இருந்தாலும் இவருடைய வேலையை கச்சிதமான நடித்திருக்கிறார்.

4. கார்த்திகா (கோ)

பழம்பெரும் நாயகியான ராதாவின் மகள்தான் கார்த்திகா.


நடிகையாக கார்த்திகா ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார் இந்தப் படத்தில். முகத்தில கொஞ்சம் கூட உணர்ச்சியே காட்டாமல் வந்துபோகிறார்.

5. பிரணீதா (உதயன்)

நல்ல முகபாவங்கள், நேர்த்தியான முகம், ஒல்லியான உடல்வாகு என்று செம கியூட்டாக தெரிந்தார் இவர். ஒரு துறுதுறுப்பான கல்லூரி பெண் பாத்திரத்தில் நன்றாக நடித்து இருந்தார். ஆகையால் இந்த படத்தில் இவரை பார்க்கவே சென்றேன்.


முதல் பார்வையிலே, தன் மனதை பறிகொடுத்துவிடுகிறார்! ஒல்லியான பெண்கள் தமிழில் நிலைப்பது அரிதே. ஆனால் இவர் திறமையான ஒரு நடிகை. அதே சமயம் 'தெறம' காட்டும் நடிகையும் கூட. பார்க்கலாம்.

6. நித்யா மேனன் (நூற்றெண்பது)

சித்தார்த் மீது நித்யா மேனனின் காதலும் மிகவும் யதார்த்தம். குறிப்பாக நித்யா மேனன் சித்தார்த்திடம் I Love You சொல்லும் போது ஏதோ நம்மைப் பார்த்து சொல்வது போன்ற ஒரு பிரமை. அந்த அளவிற்கு நித்யா மேனன் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.


நித்யா மேனனின் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு காரமும், இனிப்பும் கலந்த சேட்டு பலகாரம் போல இருக்கிறது. சேச்சி ஓடி வரும் போதெல்லாம் அவரோடு சேர்ந்து தியேட்டரும் குலுங்குகிறது!

7. பிந்து மாதவி (வெப்பம்)


அழகிய கண்ணும், பழகிய முகமும், எளிய உடையும், ஏஞ்சல் போல் உருவமும் போல ஒரு பெண் அறிமுகமானால், மழை கூட வெப்பமாக இருக்கும். அப்படி தான் "வெப்பம்" படத்தில் அறிமுகமான பிந்து மாதவி.

8. யாஸ்மின் (ஆரண்ய காண்டம்)


சுப்புவாக யாஸ்மின் பொன்னப்பா.. ஆரம்பத்தில் பார்க்கும் போது பரிதாபப்பட வைக்கிறார். சுப்புவுக்கும் சப்பைக்குமான திடீர் காதலும், காமமும் அதிர்ச்சியென்றால் பின்னால் நடக்கும் காட்சிகள் அட போட வைக்கின்றன.

9. ஜனனி அய்யர் (அவன் இவன்)


'அவன் இவன்’ படத்தில் போலீஸ் 'பேபி’யாக ஆர்யாவை முட்டிக்கு முட்டி தட்டியவர்! ஆசைப்பட்ட மாதிரியே சினிமாவில் என்ட்ரி கொடுத்து முதல் படத்திலேயே மோதிரக் கை ஆசியும் கிடைச்சிருச்சு.

10. இனியா (வாகை சூடவா )

சரண்யா பொன்.வண்ணனுக்கு தென்மேற்கு பருவக்காற்று, ப்ரியாமனிக்கு பருத்திவீரன், பார்வதிக்கு பூ…! தொடரும் இந்த வரிசையில் தற்போது இனியாவுக்கு வசப்பட்டிருக்கிறது வாகை சூடவா!


பெயரை மாற்றிக்கொண்ட நேரமோ என்னவோ, களவாணி இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் உருவான வாகை சூடவா படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பாராட்டுகளை அள்ளியிருக்கிறார் இனியா. வாகை சூடவா படத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத குக்கிராமத்தில் டீக்கடை பெண்ணாக ‘மதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



வரும் ஆண்டில் இவர்கள் அனைவரது பங்களிப்பும் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே, இந்தப் புதிய நட்சத்திரங்களது எதிர்காலம் அமையும். அது ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பும். கோலிவுட் உலகுக்கு இவர்கள் அனைவரையும் கைதட்டி வரவேற்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top