'கொலைவெறி' பாடல் புதிய சாதனை!

எங்கு பார்த்தாலும் கொலைவெறியாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவிப் போய்க் கிடக்கிறது.

தங்கிலிஷ் என்று சொல்லப்படுகின்ற தமிழ் கலந்த ஆங்கிலத்திலும் ஆங்கிலம் கலந்த தமிழிலும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

கூகுளே சர்ச்-இல் அதிகம் தேடப்பட்ட வீடியோ/பாடல் என்ற பெருமையை அனிருத் ரவிசந்தர் இசையில் தேசிய விருது பற்ற நடிகர் தனுஷ் பாடிய 'why this கொலைவெறி டி' பாடல் தட்டிசென்றுள்ளது. இது அவரது மனைவியும் சூப்பர் ஸ்டார்ட் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஹீரோயினாக நடித்திருப்பது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. தனுஷ் மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார்.


அந்த பாடலை கேட்டு மகிழ ....

Why This Kolaveri Di - Dhanush


குவியும் விருதுகளும் சிறப்புகளும்


YouTube-இல் அதிக பேர் தேடிய பாடலுக்கான முதல் பரிசான 'தங்க மெடலை' தட்டிசென்றுள்ளது இந்த 'கொலைவெறி' பாடல்.



இந்த பாடல் புகழ் பெற என்ன காரணம்...?


  • சோனி நிறுவனத்தில் அதிகபடியான தொழில்முறை மார்க்கெட்டிங் உத்தியுடன் வெளிவந்த படப்பாடல். உலகஅளவில் வாசகர்கள் அதிகம் வந்து செல்லும் குறிப்பாக Facebook, Twitter போன்ற வலைதலகளில் இந்த படப்பாடலை ஒளிபரப்பியது.

  • அதிகாரப் பூர்வ பாடல் அறிவிப்பு தினத்தில் அதிகபேர் தேடிய பாடல் இது.

  • ஒரே வாரத்தில், 6 கோடி பேர் YouTube-இல் தேடிய வீடியோ பாடல் இது.

  • ஒரே வாரத்தில், Facebook-இல் அதிக பேர் பங்கிட்டுக்கொண்ட (10 millian shared) தகவல் இது தான்.

  • நேசனல் மியூசிக் சேனல் MIV India-இல் முதல் முறையாக இடம்பெற்ற தமிழ் பாடல் இது தான். இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ள இந்த அசுர வெற்றியைக் கண்டு எம்.டி.வி. இந்தப் பாடலை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.

  • புகழ் பெற்ற கைபேசி நிறுவனம் 'டெக்சோன்(TechZone)' புள்ளிவிவரப்படி அதிகபேர் தரவிறக்கம் (download) செய்த பாடல் என்ற பெருமையும் சேருகிறது.

  • பிரபல இந்திய நடிகர் அமிர்த்தாபட்சன் தனது Twitter வலைதளத்தில் இந்த பாடல் பற்றி தனது கருத்தினை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
    “Just heard #Kolaveri after much talk on it ... it's so original and catchy...congrats Dhanush and Aishwarya (Rajni's daughter) .. love(sic)”

  • தங்கிலீஷ் வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட இந்த பாடலை பல மொழிகளில் பாடி அவரவர் விருப்பதிற்கேற்ப எழுதியும் பாடியும் இணையத்தில் உலாவிடிருப்பதும் இதற்கு கிடைத்த வெற்றியே!.

  • பிற நாட்டுவார்கள் இந்த பாடல் மூலம் தமிழ் பாடல்களை கேட்ட துவங்கியுள்ளதை மறுக்கமுடியாது. மேலும், 'கொலைவெறி' என்றால் என்ன என்று கூகுளே-இல் அதிகள் பேர் தேடியுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.


"ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடனமிடுகின்றன" என்று தனது பிளாக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் அமிதாப்!.

டிஷும் டிஷும்..

நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம்.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு இன்னொரு பெருமையும் சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அது ரஜினிகாந்த் இந்தப் பாடலில் தோன்றலாம் என்ற செய்தி.

ஒரு தமிழனின் பாடலுக்கு இவளவு பெயர், புகழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே!. ஆனால் இது தமிழ் பாடலா என்ற கேள்வி தான் என்முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த பாடலுக்கு கிடைத்த வெறியின் மூலம் இனி தமிழ் மெல்ல விரைவில் சாகும். வளர்க தமிழனின் புகழ் வான்வரை!!!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



5 comments:

Kolipaiyan said...

See this link below

http://www.tamilcnn.com/moreartical.php?newsid=9076

Kolipaiyan said...

தனுஷின் Why This கொலவெறி பாடலுக்கு யூடியூப் இணையதளம் தங்க மெடல்!

Suthershan said...

// மேலும், 'கொலைவெறி' என்றால் என்ன என்று கூகுளே-இல் அதிகள் பேர் தேடியுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.//

//இந்த பாடலுக்கு கிடைத்த வெறியின் மூலம் இனி தமிழ் விரைவில் சாகும்.//

முரண்பட்ட கருத்துக்கள்... ஆனால் இரண்டும் உண்மை..

Kolipaiyan said...

@Suthershan : வருகைக்கு நன்றி நண்பரே!

100+ ways to earn said...

மேலும் விவரங்களுக்கு இந்த ப்ளாக் பார்க்கவும்
-- kolaveri di blog

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top