திரு திரு துரு துரு - திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவே. சமீபத்தில் வெளிவந்த ஒரு படம். திரு திரு துரு துரு. இதனை இயக்கியவர் ஒரு பெண், நந்தினி. சத்யம் சினிமா தியேடர்காரங்க தயாரித்த இந்த படம், சினிமா ரசிகர்களின் ரசனைக்கேற்ப தந்திருகிறார்கள்.

படத்தோட கதை என்னனா :

இயக்குநர் மௌலியின் விளம்பர கம்பனியில் வேலை பார்க்கும் நமது ஹீரோ அஜ்மல். மெளலிக்கு பிள்ளைகள் இல்லாததால் செல்லப் பிள்ளையாய் அஜ்மல் இருக்கிறார். அவனுடன் வேலை பார்க்கும் பெண் நம்ப ஹீரோயினி ரூபா. ஹீரோவின் அஜாக்ரதையினால் ஒரு பெரிய ப்ராஜெக்ட் கை நழுவி போக - அதை இழுத்து பிடிக்க இருவரும் முயற்சிகிறார்கள்.


அது ஒரு குழந்தைகளுக்கான ப்ராஜெக்ட். இவர்கள் தேர்வு செய்த குழந்தை உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வேறு ஒரு குழந்தையை இவர்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய ஹீரோ தேடும் போது ஒரு அழகான குழந்தையை பார்க்கிறான். அந்த குழந்தையின் தாயிடம் அனுமதி கேட்டு... துரத்த... அவள் ஒரு ஆட்டோவில் அடிபட்டு மயக்கமாக - ஹாஸ்பிடலில் சேர்த்து - குழந்தையுடன் ஷூட்டிங் வந்துவிட்டு திரும்பி சென்று பார்க்க - அவள் இல்லை. அதன் பிறகு குழந்தை ஹீரோவிடம்.

மௌலியிடம் சொல்லாமல் குழந்தையை இவனுடன் வைத்திருந்த விஷயம் நாயகியிடம் சொல்ல - உதவிக்கு இவளும் இவனுடன் தங்கி - ஷூட்டிங் தொடர்கிறார்கள். குழந்தையின் பெற்றோர் அக்ரீமென்ட் பேப்பரில் கையெழுத்து போட்டு தரவேண்டும் என்று விளம்பர கம்பெனிகாரர்கள் கேட்ட - அதன் பின்னர் கதை வேறு ஒரு பாதையில் பயணிக்கிறது.

குழந்தையின் பெற்றோரை தேடி பிடிக்க இருவரும் குழந்தையுடன் பயணிகிரார்கள். இதனிடையில் இவர்கள் இருவர்க்கும் இடையில் மெல்லிய காதல் வளர ஆரம்பிகிறது.

காணாமல் போனவள் குழந்தையை திருடிவிற்கும் பெண் என்று தெரிய வர - இன்னொரு பக்கம் அந்த குழந்தையின் உண்மையான பெற்றோர் தேடி அலைய - ஹீரோவின் தேடுதல் அறிந்த திருட்டு கும்பல் - அவனிடம் இருந்து குழந்தையை கடத்த முயற்சிக்க - இவர்களிடம் இந்த குழந்தை என்ன ஆனது? ஹீரோ அந்த ப்ரொஜெக்டை சக்சஸ் ஆகினரா என்பது தான் மீதி கதை.

படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

  • ஒளிப்பதிவாளர் சுதிர் பாராட்ட பட வேண்டியவர். துல்லியமான ஒளிப்பதிவு + கலர்.

  • படத்தின் மிக பெரிய பிளஸ் இதன் டைரக்டர் நந்தினி. ரசிக்கும்படியான நல்ல ஒரு காமெடி படத்தை எடுத்த இவருக்கு என் பாராட்டுக்கள்.

  • குழந்தை - குழந்தையை பார்த்து தான் படத்துக்கு பெயர் வைத்தார்களோ ..? அவளவு அழகு.

  • அஜ்மல் - பொறுப்பில்லாத இளைஞனாய் அலட்டிகொள்ளாமல் நடித்துள்ளார். காமெடியும் நன்றாக வருகிறது. ரூபாவுடன் அவர் செய்யும் செயல்கள் யாவுமே அருமை.

  • ரூபா - முதலில் ஒரு மாதிரி இருக்கிறார். படம் போக போக நம்மையும் அவர் மேல் காதல் கொள்ள வைக்கிறாள்.

  • மெளலி - ஒரு அற்புதமான நடிகர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். அவரது கம்பெனி வேலையாட்களின் பெயர்களை மாற்றி சொல்லி சொல்லி நம்மை சிரிக்க வைக்கிறார். டென்ஷனான நேரத்திலும் ஜோக்கடித்து கொண்டே, முகத்தில் மட்டும் டென்ஷனை காட்டும் காட்சிகள் அருமையான நடிப்பு.

  • இசை மணி ஷர்மா - சுமார். தீம் மியூசிக் - படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது.

திரு திரு துரு துரு - குடும்பத்தோடு பார்க்க கூடிய படம்

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



4 comments:

gulf-tamilan said...

படம் வந்து தியெட்டரை விட்டு போனபின்(இன்னும் ஓடுகிறதா?) விமர்சனமா??? :))))

ஷாகுல் said...

என்னது காந்தி செத்துட்டாரா?

Kolipaiyan said...

கல்ப் தமிழன் & ஷாகுல் - உங்கள் வருகைக்கும் & கருத்துகளுக்கும் நன்றிகள்.

Kolipaiyan said...

ஷாகுல் நண்பரே,

படம் பார்க்க ரொம்ப நாளாச்சு. அட பார்த்த படத்த பத்தி சொல்லறது தப்பிலையே!

மொக்க படத்த எல்லாம் எழுதறத விட ஒரு நல்ல படத்த பத்தி எழுதுவது ஒன்றும் தப்பில்லை. அதற்குபோயி இப்படியா வறுத்தெடுப்பது.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top