இந்தியா கடன்கார நாடு ?!

இந்தியா கடன்கார நாடு என்று தயவுசெய்து இனி சொல்லவேண்டாம். கடன்கார நாட்டில் வெளிச்சத்திற்கு வரும் லஞ்சம் பற்றி ஒரு தகவல் தான் இது.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். லஞ்சம் வாங்கியதற்காக நாட்டின் மிக உயர்ந்த அமைப்பின் தலைவர் கைதாவது இதுவே முதல்முறை.

அந்த உத்தமனை தான் கீழே நீங்கள் பார்ப்பது. அவன் முகத்தை பாருங்களேன்.... இஞ்சி தின்ன குரங்கு மாதிரி. டேய் மவனே .... (sensored)


தனியார் கல்லூரிகளிடம், கேதன் தேசாய் தனக்கென சில எம்.பி.பி.எஸ்.(MBBS), இடங்களை கேட்டுப் பெற்றுள்ளார். அந்த இடங்களை ஆண்டு தோறும் விலை பேசி விற்று அதன் மூலமாகவும் பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

கேதன் தேசாய் வீடுகளில் இருந்து, ரூ.1801 கோடி ரொக்கம் (Cash) மற்றும் 1500 கிலோ(1.5 டன்) தங்க நகைளை (Gold) சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு தனி மனிதன் லஞ்சம் வாங்கியே இத்தனை ஆயிரம் கோடிகள் வைத்திருப்பான் என்றால், நம் நாட்டு அரசியல்வாதிகளிடம் எத்தனை லட்சம் கோடிகள் கள்ள பணம் இருக்கும்?!.

கையாலாகாத இந்திய அரசியல்வாதிகள் + சட்ட அமைப்பு + அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றால் அவர்கள் இஸ்டத்துக்கு லஞ்சம் வாங்கி குவிப்பது. மாட்டிக்கொண்டால் ஒரு சில வாரத்தில் விடுதலை ஆவது.

இது போன்ற லஞ்ச பேய்களை நடுரோட்டில் நிற்கவைத்து சுட்டுத்தள்ளனும். சட்டங்கள் மிக மிக கடுமையாக்கப் படவேண்டும். அப்போது தான் வேறு எந்த ஒருவனும் இது போல செய்ய யோசிக்கணும். இது போல அரசியல் அமைப்பை கொண்டுவர இந்திய அரசியல்வாதிகள் தயாரா?.9 comments:

Anonymous said...

we've to have a separate wing which should handle these kinda guys. he shouldn't have done it as a single man. there should be a great network behind him. it has to uprooted and treat them without any mercy.

Kannan said...

லஞ்சம் லஞ்சம் ...லஞ்சம் எங்குபார்த்தாலும் ஒரே லஞ்சம்... இவனுங்க மாதிரியான அடிகளை இனியும் விட்டு வைத்தால் இந்தியாவை வெளிநாடுகாரன் விரைவில் ஆளுவான் நம்மையே ...

ராம் said...

//இந்தியா கடன்கார நாடு என்று தயவுசெய்து இனி சொல்லவேண்டாம். கடன்கார நாட்டில் வெளிச்சத்திற்கு வரும் லஞ்சம் பற்றி ஒரு தகவல் தான் இது.//

100 சதம் சரியே. இவங்கள திருத்தமுடியாது...

Kannan said...

திருத்தமுடியாது

ரவிஷா said...

இந்தியா, இந்த மாதிரி “கடன்கார நாய்கள்’ இருக்கும் நாடு!

"1800 கோடி ரூபாய் ரொக்கமாக"! யம்மாடி! இவனுங்களுக்கெல்லாம் எப்படித்தான் தூக்கம் வந்ததோ?

Kolipaiyan said...

நடுத்தர மக்களிடம் அரசியல்வாதிகள் + சட்டம் + அதிகாரிகள் காட்டும் கண்டிப்பு எங்கே போயிற்று ...?


இது போன்ற ஈனப்பிறவிகள் இந்தியாவில் வந்து ஏன் தான் பிறந்தான்களோ ? இவர்களை பெற்ற தாய் இப்போது வருத்தபடுவாள்.

Kolipaiyan said...

@ரவிஷா
நன்றி ரவிஷா

Kolipaiyan said...

@ராம்

நன்றி ராம்

saravanan said...

manaivi kuzhanthaikalutan ithu bontra naykalai natu roattil pitchai etuththu vazha vita ventumappti seythal ethirkalaththil entha oru naayum thu pontra seyalil etupatathu

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top