இரண்டு குட்டிகதைகள்

சிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைகள்.

1. முல்லாவின் திருமணம்

முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்

"ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன்"

அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் "இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? "

"பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது" என்றார் முல்லா.

பெண்ணின் தந்தை : ???????????2. ஒரு நல்ல செய்தி

அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தி ஒன்றை சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது அவரின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

ஒருநாள், அவர் சந்தைகூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஓர் இடத்தில் நின்றுக்கொண்டு "அன்பார்ந்த பொதுமக்களே, உங்களுக்கு சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள்" என்று கூச்சல் போட்டார்.

முல்லா ஒரு செய்தியினை சொல்கிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்று நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை அவரிடம் கொடுத்தார்கள்.

அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்ட முல்லா மக்களை நோக்கி "அன்பார்ந்த பொதுமக்களே, நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லாவாகியா நான் ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறேன்" என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

Source : முல்லாவின் கதைகள்5 comments:

என்.ஆர்.சிபி said...

//இந்த முல்லாவாகியா நான் ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறேன்//

இது நிஜமாவே நல்ல செய்திதானே! இதுல என்ன ஜோக்கு?

Kolipaiyan said...

என்.ஆர்.சிபி : ஜோக்கு எதுவும் இல்லை. கோபபடவேண்டாம்.

igu said...

@Kolipaiyan

முல்லாவுக்கு மட்டும் தான் அது நல்ல செய்தி. SO மக்களுக்கு அது ஏமாற்றம்.

Kannan said...

Message : Public should be aware...

என்.ஆர்.சிபி said...

//முல்லாவுக்கு மட்டும் தான் அது நல்ல செய்தி. SO மக்களுக்கு அது ஏமாற்றம்.//

முல்லாவுக்குக் குழந்தை பிறந்ததுலே மத்தவங்களுக்கு எப்படி ஏமாற்றமாகும்?

அளாவிலா ஐயத்துடன்,
என் ஆர் சிபி

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top