சாதனைகள் தொடர்வதற்கு ஒரு வழி!

கொழும்பு நகரில் ஒரு மையமான இடத்தில் ஒரு கடைத்தெரு. அது ஒரு மின் பொருள்களுக்கான கடை. ஓரளவு கூட்டம். கல்லாவில் முதலாளி. எதிர் இருக்கையில் நான். கடை உரிமையாளர் என் நண்பர் என்பதால் காணப் போயிருந்தேன்.

ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.
"ஹலோ"

சட்ரெண்டு சூடான நண்பர் "ஏய், வைடி போனை வியாபார நேரத்தில் கொஞ்சரா பெருசா .." பட்ரெண்டு போனை சாத்தினார்.

என்ன பேசியிருப்பார் என்பது நமக்கு பிடிபடாவிட்டாலும் கூட, யார் பேசினார்கள் என்பது பச்சைக் குழந்தைக்கும் புரிந்திருக்கும். திரைப்பட 'ஷூட்டிங்' மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள். காட்சி கட்.

அடுத்த காட்சிக்களம். அதே மின்பொருள் விற்பனையாளரின் வீடு. நாள் ஞாயிறு. மதியம் ஒரு மணி இருக்கும். அங்கேயும் நான். நண்பர் லுங்கியில்.. மதிய உணவு உன்ன வந்த விருந்தினர்களான நான்... அடுப்படியிலிருந்து சொதியின் குருமா மணம்.

இங்கும் ஒரு தொலைப்பேசி அழைப்பு. நண்பர் எடுக்கிறார். "யார் பேசுறீங்க ?"

"வைக்க சார் போனை. ஞாயிற்று கிழமை கூடவா பிசினஸ் பேசணும்? மனுசனை நிமதியா இருக்க விடுங்க சார்"

"சார் எவளவு பெரிய பிசினசா வேணுன்னாலும் இருக்கட்டும். நாளைக்குப் பேசுங்க. இன்னைக்கு வேணாம்" நண்பர் பட்ரெண்டு சாத்தினார் தொலைப்பேசியை.

தொழில் செய்யும் நேரத்தில் இவரால் ஒரு சிறந்த வியாபாரியாக இருக்க முடிந்ததே தவிர, ஒரு நல்ல கணவராக இருக்க முடியவில்லை.

அதேபோல், குடும்பத் தலைவராக இருக்கும் நேரத்தில் ஒரு நல்ல வியாபாரியாக இருக்க முடியவில்லை. அந்ததந்த நேரத்தில் அது அது முக்கியம் என்கிற இவரது கொள்கை வரவேற்க்கதக்கதே! ஆனால் இந்த விசயத்தில் இப்படி ஒரு உறுதிப்பாடு தேவையா என்ன?

என் நண்பரின் மனைவி, தம் கணவரைப்பற்றி இப்படி சொல்வார். "அவர் உடுப்பை (காவல் துறை)மாட்டிவிட்டால் ரொம்பக் கண்டிப்பான மனுசனா ஆகிடுவார். எனக்கே பயம்மாயிடும்னா என் புள்ளைங்களைப் பத்திக் கேட்கவே வேண்டாம்.?" ஏனையா காவல்துறை நண்பரே, உடுப்பை மாட்டிகிட்டா கணவன், தந்தைக்கிற உறவை ஊதாசினப்படுத்தனுமா என்ன?

வாழ்வில் பலருக்கும் பலவிதப் பொறுப்புகள் உண்டு. ஒன்றை ஏற்றால் மற்றவை உதறிவிட வேண்டும் என்பதில்லை. எந்தப் பொறுப்பை ஏற்றிருந்தாலும் ஒரு நிமிடமாவது உங்களுக்குள் உள்ள அந்த மாற்றுப் பொறுப்பையும் சரிவர எண்ணிப் பார்த்து, அந்த உலகத்திற்கு சென்று, சூழ்நிலை உணர்ந்து கடமையாற்றுங்கள்.

உங்கள் சாதனைகள் தொடர்வதற்கு இதுவும் ஒரு வழிதான்!.

source : லேனா



5 comments:

Unknown said...

//என் நம்பரின் மனைவி, தம் நனவரைப்பற்றி இப்படி சொல்லவார். "அவர் உடுப்பை (காவல் துறை)மாட்டிவிட்டால் ரொம்பக் கண்டிப்பான மனுசனா ஆகிடுவார். எனக்கே பயம்மாயிடும்னா என் புள்ளைங்களைப் பத்திக் கேட்கவே வேண்டாம்.?" ஏனையா காவல்துறை நண்பரே, உடுப்பை மாட்டிகிட்டா கணவன், தந்தைக்கிற உறவை ஊதாசினப்படுத்தனுமா என்ன?
//

ஒரு விதத்துல இது தொழில்ல நேர்மையா இருக்கிறதுக்கு உதவும்னு நினைக்கிறேன். உடுப்பைப் போட்டப்பறமும் குடும்பம் நட்புன்னு பாத்துட்டு இருந்தா அப்புறம் கண்டிப்பாய் இருந்து தப்பு செய்யிற நட்பு, சொந்தங்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாமப் போயிரும் இல்லையா?

Kolipaiyan said...

இதுவும் கூட ஒருவகையில் நன்மைபயக்கும் வழிதான் போல இருக்கு முகிலன். கருத்துக்கு நன்றிகள்.

Kolipaiyan said...

எழுத்துப்பிழைகளை கலையவைத்து ஹேமாவுக்கு நன்றிகள்.

நாமக்கல் சிபி said...

//கலையவைத்து//

களைய வைத்த

Kolipaiyan said...

எத்தனை எத்தனை பிழைகள். :(

என் தமிழ் எழுத்துப்பிழையை 'களைய' வைத்த உங்களுக்கு நன்றிகள் சிபியாரே.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top