சுடச்சுட சுறா - திரை விமர்சனம்

.
நானும் 'சதம்' அடித்துவிட்டேன்.....!!!!

நானும் எழுத வந்து ஒன்பது மாதம் இன்றோடு முடிவடைகிறது. காலம் கடந்து செல்வது உணர முடியவில்லை. இதுவரை 99 பதிவுகள் எழுதிவிட்டேன். எனக்கே ரொம்ப ஆச்சரியம் + அதிர்ச்சி. என்னாளும் தொடந்து எழுத முடிகிறது என்று!

என்னோட பதிவையும் ரசித்து படித்து + கருத்து சொல்லி + வோட் போட்டு நல்ல பதிவை அங்கிகரித்த உங்களுக்கு என் சிரம் தாழ்த்த நன்றிகள். ஏதேனும் குறை இருப்பின் மன்னிக்க.

இதோ என்னோட 100வது பதிவு. உங்கள் ஊக்கமும் கருத்துகளும் வரவேற்கிறேன். மீண்டும் என் நன்றிகள்.

நட்புடன்
கோழிபையன்.



விஜயின் 50வது படம் சுறா. தமன்னாவுடன் விஜய் நடிக்கும் முதல் படம். சன் பிச்சர் வாங்கி வெளியிடும் விஜயின் 2-வது படம். ஏற்கனேவே சுறா பாடல்களை நிமிசத்திற்கு ரெண்டு தடவை ஒலிபரப்பு செய்து வெற்றி பெற வைத்த சன் நெட்வொர்க் வாழ்க. இன்று சுறா படம் பார்த்தேன். அதன் விமர்சனம் சுடச்சுட இதோ....


படத்தோட கதை என்னனா ...

மீனவ குப்பத்தை காலிசெய்து அதில் தீம் பார்க் ஒன்றை கட்ட நினைக்கும் 'ரவுடி' மந்திரி குப்பத்தை தீவைத்து கொளுத்த அதில் ஹீரோவை சிக்கவைத்து இறந்துவிட்டதாக நம்பவைத்து குப்பத்து மக்களை வேறிடம் சென்று தங்க ஏற்பாடு செய்யும் வேளையில் தீயிலிருந்து ஹீரோ வெளிவருகிறார்.

அதன் பிறகு வில்லனுடன் நேரடியாக நேரிடியாக ஹீரோ மொத ... வில்லன் செய்யும் சின்ன சின்ன சித்துவேலைகளை ஹீரோ எப்படி அதிரடியாய் முறியடித்து வெற்றிகொல்கிறார் என்பது தான் சுராவின் கதை.



படத்துல என்னை பதம் பார்த்தவைகளில் சில...

  • ஒளிபதிவு மிக அருமை. மனுசர் ரொம்ப மேனகேட்டிருக்கிறார்.

  • சண்டை காட்சிகள் அருமை. சபாஸ் கனல் கண்ணன். நீங்கள் தான் படத்தின் ஹீரோ.

  • ஹீரோ அறிமுகம் இதுவரை எந்த படத்திலும் வராத மாதிரி அமைத்திருகிறார்கள். எப்படி..?

    கடலுக்கு மீன் பிடிக்க சென்ற படகுகள் ஐந்து நாளாகியும் கரை திரும்பவில்லை. குப்பத்து மக்களும் போலீஸும் அதிகாரிகளும் ஒரே டெண்சினா இருக்க தூரத்தில் படகில் மீனவர்கள் வர மொத்த குப்பமும் சந்தோசத்தில். ஆனால், ஒருவன் மட்டும் வரவில்லை. அவன் தான் ஹீரோ 'சுறா'. அதிகாரிகள் செய்வதறியாமல் திகைக்க தூரத்தில் நடுகடலில் இருந்து டைவ் அடித்து ஹீரோ வெளிவந்து அறிமுகம் செய்கிறார்.

  • முதல் பாதியில் ஏழை குப்பத்து மீனவானா வரும் ஹீரோ இரண்டாம் பாதியில் வில்லனின் கடத்தல் சரக்கை ஹீரோ விற்று காரில் வந்து வில்லனுடன் மோதுகிறார். முதல் பாதியில் விறு விறுப்பு கொஞ்சம் குறைவு. இரண்டாம் பாதி ஓகே ரகம்.

  • பாடல்களில் ரசிகர்கள் வெளியே சென்ற வர இருந்தார்கள். பின்னணி இசை பரவாயில்லை. சில இடங்களில் ஒரே தலைவலி.

  • திரும்ப திரும்ப ஒரே மாதிரியான கதையை விஜயிடம் பார்த்து பார்த்து அலுத்து போச்சு. சன் பிச்சர் படம்னாவே இனி குவாலிட்டி இருக்காது என்பதற்கு இந்த சுறா படமும் ஒரு உதாரணம்.

  • பெருசா சொல்லிகிறமாதிரி திரைகதை இல்லை. இந்த உங்க லிஸ்டில் படம் படத்தோட பதினொன்னு அவளவு தான். சாரி டைரக்டர் சார். கதையை மட்டும் இனி நம்பி பெரிய திரைக்கு வாங்க. ஹீரோ + ஹீரோயினி நண்பி இனியும் தமிழ் சினிமா நகர ரெடியா இல்லை.

  • வழக்கமான விஜய், பாடல்களில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். டான்சில் பட்டையை கிளப்புகிறார். மற்றபடி ஓவர் பில்ட் அப் தான். அரசியலுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள ரெடியாகிவிட்டார். ஒரே செண்டிமெண்ட் டயலாக் பேசியே படுத்துகிறார். விஜய் புதுசா ஏதாவது செய்யுங்கள்.

  • தமன்னாவுக்கு இந்த படத்தில் ஒன்றுமே வேலை இல்லை. ஆனா இவள் தான் ஹீரோயினி. என்ன கொடுமை சார் இது. நாய் காணாத போனதால் தற்கொலை செய்ய கடலுக்கு வரும் பணக்கார பெண். ஹீரோ காப்பாத்துகிறார். காதலும் வந்துவிடுகிறது. பாடல்களில் குட்டை குட்டை டவுசரு போட்டு பாப்பா கொஞ்சம் ஆடியிருக்கு. வேறு சொல்லும் படி ஒண்ணுமில்லை.

  • வடிவேலு தான் முதல் பாதி ஹீரோ. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மற்ற இடங்களில் கடுப்பை கிளப்புகிறார். மனுசருக்கு உடம்பு போட்டு பார்க்கவே பயமா இருக்கார்.


சுறா - பார்க்க போறவங்க அதுக்கு இரை.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



38 comments:

வால்பையன் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

சீக்கிரம் தியேட்டரை விட்டு ஓடி போயிரும்னு இவ்ளோ சீக்கிரம் போய் பார்த்திங்களா?

Kolipaiyan said...

நன்றி வால்பையன். விரைவில் வெளியேறிவிடும் என்பதில் ஐயமில்லை. கடிவாங்கின எனக்குத் தான் தெரியும் அந்தந வலி. எவளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே உட்காந்திருகிறது தியேடரில்.

Sanjai Gandhi said...

டபுள் வாழ்த்துகள்.. :)

Kolipaiyan said...

ஏலே சஞ்சய் காந்தி... ஏதாவது உள்குத்து இதில் இருக்கா?

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

உங்க நூறாவது பதிவு இப்படி பரிதாபமா அமையணுமா? (சுறா படத்துக்கு விமர்சனம் நேர்ந்த அவலத்தைச் சொன்னேன்). என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Kolipaiyan said...

ஓ கடவுளே.... என் 100வது பதிவில் டக் அவுட் ஆயிடேனே...! :(

MUTHU said...

உங்களுக்கு மட்டுமா விஜய்க்கும் தான் 50 வது படம் பப்படம்:
100 க்கு வாழ்த்துக்கள்

raja said...

முதல்ல தமிழ்ல டைப் பண்ண கத்துகிட்டு வா அப்புறம் பதிவை எழுதலாம் சரியா.......

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி ராஜா & முத்து.

நல்ல தமிழில் எழுத இன்னும் கொஞ்சம் கத்துகிறேன். கோவித்துகொள்ளதிர்கள் நண்பரே .

Kannan said...

கதைதான் ரீமேக் என்றால் பாடல்களுமா என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

சுறா - பார்க்க போறவங்க அதுக்கு இரை.
பஞ்ச் ! :)

இடி முழக்கம் said...

சுறா-வீடியோ இணைப்பு
http://idimulhakkam.blogspot.com/2010/04/blog-post_7536.html

க ரா said...

சதம் அடித்ததுக்கு வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

100க்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். வேறு இடுகை இட்டிருந்தால் இன்னமும் சிறப்பாயிருந்திருக்கும்!

பிரபாகர்...

Kolipaiyan said...

@ தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை
@ இராமசாமி கண்ணண்
@ இடி முழக்கம்
@ பிரபாகர்

உங்கள் வாழ்த்துக்களுக்கு சிரம் தாழ்த்த நன்றிகள். உங்கள் ஊக்கமும் ஆதரவும் தேவை. தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் கோழி.

Kolipaiyan said...

@பிரபாகர்


நீங்கள் சொல்வது சரிதான்... என்ன செய்யா,... எனது நூறாவது பதிவு ஒரு மொக்க படத்துக்குன்னு ஆயிடாது.

INDIA 2121 said...

visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

நாகராஜன் said...

100 அடித்ததுக்கு வாழ்த்துக்கள்.இந்த படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் telugu படத்தின் ரீமேக்.... telugu Billa,Ashok and samba படத்தின் ரீமேக்....

Kolipaiyan said...

@நாகராஜன்

கதைதான் ரீமேக் என்றால் பாடல்களுமா என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது நாகராஜன். :(

ஜெயந்த் கிருஷ்ணா said...

செல்லம்... I LOVE YOU
என் ரத்தமடா நீ..., அடகு வைத்து படம் பார்த்ததில்.
கடைசியில் வட போச்சே ......

ஜெயந்த் கிருஷ்ணா said...

@Kolipaiyan

//

இந்த அளவு மொக்க படம் இன்னும் எந்த மொழியிலும் வரவில்லை,
சோட்டா மும்பை படத்திலிருந்து ஒரு சின்ன காட்சி கூட இந்த படத்தில் இல்லை.
சோட்டா மும்பை ஒரு நல்ல படம், அதோட கம்பேர் பண்ணாதிங்க

Kolipaiyan said...

@வெறும்பய

கண்ணுல காதுல
வாயில வயித்துல
மூக்குல ....னு
எல்லா இடத்திலும்
ஒரே ரத்தம் ரத்தம் ரத்தம் ...

பேசாம சுராவால் நிம்மதி இழந்தோர் சார்பா ஒரு கேஸ் போடணும் போல இருக்கு. கண்ணா மூடினா விஜய் அறிமுகம் தான் நினைவுக்கு வருது. மறக்க ஒரு வழி சொல்லுங்க நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பேசாம சுராவால் நிம்மதி இழந்தோர் சார்பா ஒரு கேஸ் போடணும் போல இருக்கு. கண்ணா மூடினா விஜய் அறிமுகம் தான் நினைவுக்கு வருது. மறக்க ஒரு வழி சொல்லுங்க நண்பா..

///


ஒரு வலிய மறக்க இன்னொரு வலி,
வேற வழியே இல்ல, வேட்டைக்காரன் படத்த இன்னொரு தடவ பார்க்க வேண்டியது தான்.
எல்லாம் அடகு வச்சு படம் பாவத்துக்கு ......

Kolipaiyan said...

கொஞ்சம் ஆறுதலா இருக்கு மிஸ்டர்.வெறும்பய.

Mathivanan said...

Read "Sura" review in Hindu, Review starts with "It would be wise to leave your brain behind at home", another excerpt , "the heroine, who is such a birdbrain, that she attempts suicide when her dog goes missing, gets rescued by Sura and falls in love with him"-- Classic I say, hehe..

Kannan said...

@Mathivanan

Waste of time to watch this movie.

செ.சரவணக்குமார் said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.

Kolipaiyan said...

@செ.சரவணக்குமார்
Thanks Mr.செ.சரவணக்குமார்.

Muruganandan M.K. said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
இதைப் பார்க்க வேண்டியதில்லை என நினைத்திருந்த எனக்கு உங்கள் பதிவினால் நிச்சயமாகப் போகத் தேவையில்லை

Kolipaiyan said...

@Dr.எம்.கே.முருகானந்தன்

Thanks for your wishes Dr.Sir.

I saved your money and body health bcs of this aware. Keep on reading!

Suriya Kumar P said...

முதலில், உங்களின் நூறாவது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.

எனக்கு தெரிந்தவரை, விஜய் நடிக்க முயற்சி செய்த படங்களில், காதலுக்கு மரியாதை ஒன்றுதான், நல்ல முயற்சி. அப்பொழுது நான் அந்த படத்தை பார்த்து நல்ல நடிக்கராறேன்னு நெனச்சேன். அதுக்கு முன்னாடி வந்த படங்களெல்லாம் பார்க்க சஹிக்காத பலான படம் போலிருக்கும். சங்கவி அவர்கள் இல்லை என்றால் இன்றைய விஜய் இல்லவே இல்லை. பாவம் இந்த Heroingal, அவர்களின் சதையை மூலதனமாய் வைத்தே முக்கால் வாசி படங்கள் வெளிவருகின்றன. அதுவும் தற்போது வெளிவரும் படங்களில், அவர்களுக்கு டூயட் பாடுவது, கதாநாயகன் எனப்படுபவன், எவனாக இருந்தாலும் அவனை காதலித்து தொலைப்பது இதை தவிர வேறு வேலையே இல்லை.

விஜய் அதற்க்கு விதி விலக்கல்ல. என்னை பொறுத்தவரை, விஜய் தன் routine (ஒரு intro song with lots of punch, one kutthu song, one or few duet songs, few fights, a one liner all over the film, and lot more punch) மாற்றி கொள்ளாதவரை அவரால் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியாது.

சன் pictures நிறுவனம் மக்களை, அடி முட்டாள்கள் என்ற நினைப்போடிருக்கிறது. ஆயிரம் தடவை சொன்னாலும் பொய் பொய்யேதான். உண்மையாகாது. அவர்களின் அணைத்து படைப்புகளும் மக்களை முட்டாளாக்கும் முயற்சியாகவே உள்ளது. எனவே அவர்களின் போக்கை அவர்கள் மாற்றிக்கொள்ளதவரை, அவர்களின் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள கூடாது.

Kolipaiyan said...

@P.Suriya Kumar Priya

Great P.Suriya Kumar Priya

Unknown said...

சுறா படத்தை பார்ப்பதற்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை நீங்க யோசிச்சிருக்கணும்

நூறாவது பதிவிற்கு, வாழ்த்துக்கள்

Kannan said...

@Igu

What to do?!

nellai அண்ணாச்சி said...

சுறா ,புறா ஆயிடிச்சு

Kannan said...

@DR.KVM No dialog.... only action. :(

Vediyappan M said...

நல்ல விமர்சணம், வாழ்த்துக்கள்

Kannan said...

@Discovery book palace


Thanks Discovery book palace.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top