இனிப்புகளில் லட்டு மிகவும் சுவையானது. அனைவராலும் விரும்பப்படுவது. வீடுகளில் சிறிய அளவில் சுவையான தேங்காய் லட்டு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
தேவையானப் பொருட்கள்:-
- தேங்காய் - ஒன்றரை மூடி
- கடலைமாவு - அரை கிலோ
- சர்க்கரை - 800 கிராம்
- முந்திரி - 25 கிராம்
- ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
- தே.எண்ணெய் / நெய் - தேவையான அளவு
செய்முறை:-
- சர்க்கரையை கெட்டிப்பதத்தில் பாகு காய்ச்சுங்கள்.
- இரண்டு மூடி தேங்காயை துருவி பால் எடுங்கள்.
- அந்தப் பாலில் கடலைமாவை கரைத்து தேங்காய் எண்ணெயில் பூந்தியாக போட்டு, பாகின் சூடு ஆறுமுன்னே அதில் கொட்டுங்கள்.
- அரைமூடித் தேங்காயை சிறுசிறு பற்களாக வெட்டி, அதையும் முந்திரியையும் தனித்தனியாக தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பாகில் சேருங்கள்.
- ஏலக்காயை உரித்து விதைகளையும் அதில் போட்டு அனைத்தையும் கெட்டியாக பிசைந்து உருண்டை பிடியுங்கள்.
- தேவைப்பட்டால் வறுத்த லவங்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். சுடச்சுட சுவையான தேங்காய் லட்டு ரெடி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
3 comments:
sweet and nice...
@இராஜராஜேஸ்வரி
Thanks Rajeswari :)
அன்பின் கோழி பையன் - நல்லாவே இருக்கு தேங்கா லட்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment