நகரத்து இயந்திரங்களோடு ஒன்றிநாமும் இயந்திரமாகி விட்டாலும்
மஞ்சள் சரடு சுற்றிய மண்பாநையும்
சாணம் தெளித்து கோலமிட்ட
மண்தரையும் மங்கலம் நிறைந்த
மஞ்சள் குலையும் வீடும்
வீதியுமாய் அலங்கரித்த தோரணமும்
குமரிகளும் கிழவிகளும் போடும்
கும்மாளமும் வாசலில் வைத்த காய்
கனியும் "பொங்கலோ பொங்கல்"
என்ற மகிழ்ச்சிக்குரலும்
கேட்காமல் இருந்தாலும்
கேஸ் அடுப்பிலாவது
பொங்கல் வைத்து வாழும்
தமிழனாகி விட்டோம் என்றாலும்
இன்னும் கிராமங்களிலாவது பொங்கல்
பொங்கும் ஓசை கேட்கிறதே
அது வரையில் சந்தோஷம் தான்
நீ சூரியனுக்கு பொங்கல் வைத்தாய்
நிலவு ஏங்கிக் கொண்டிருக்கிறது!
கரும்பும்
சக்கரை பொங்கலும்
எதற்கு ?
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டு
போதும்!
உன் பார்வைகாகத்தான்
வழுக்கு மரத்தில் ஏறினேன்.
நீ பார்த்த பார்வையில்
வழுக்கி விழுந்தேன்!
கோல போட்டியில்
உனக்குத்தான் முதல் பரிசா?
உன்னை வரைத்த
உன் அம்மாவுக்கே கொடுத்திருக்கலாம்?
கோலங்கள் இல்லாத தமிழர் இல்லமா?. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளில் விதவிதமான கோலமிட்டு,அறுவடைத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.
உங்களுக்காக என் அலுவலகத்தில் வரையப்பட்ட கோலம் ....
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
படம், கவிதை தேடி தந்த நண்பர்களுக்கு நன்றிகள் !!!
17 comments:
very good kannan
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு.
உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)
ஷாகுல், சங்கவி, சுந்தர & கலையரசன் - உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
முகம் காட்டாத நண்பனுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
எனது இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
Dr.எம்.கே.முருகானந்தன் உங்கள் வருக்கைக்கும் பதிலுரைக்கும் என் நன்றிகள்.
நன்றி ரங்கு.
Hi kannan,
Wish you a happy pongal.
kavithai is very good.
உங்களுக்கும் எனது இதய பூர்வமான தமிழர் திருநாட்களாகிய போகி, வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், சங்கராந்தி வாழ்த்துக்கள்.
நன்றி உத்தமபுத்திரா.
நன்றி ஷிணி.
Post a Comment