ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ்

பிரைடு ரைஸ் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

நண்பர் கீரை பிரைடு ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார்.

ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.


தேவையானப் பொருட்கள்:-

 • பாஸ்மதி அரிசி - 250 கிராம்
 • முளைக்கீரை - 1 கட்டு

 • பட்டை - ஒரு டீஸ்பூன்
 • கிராம்பு - ஒரு டீஸ்பூன்
 • ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்

 • கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன்
 • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • நெய் - 50 கிராம்
 • கடுகு & உளுத்தம்பருப்பு - தேவையான அளவு
 • பச்சை மிளகாய் - 2
 • வரமிளகாய் - 2

 • பூண்டு - 5
 • துவரம்பருப்பு - ஒரு கப்
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

 • முளைக்கீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

 • பாஸ்மதி அரிசி 200 கிராம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

 • பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் எடுத்து வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

 • குக்கரில் 50 கிராம் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

 • பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். இத்துடன் அரைத்த பொடிகள் சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும்.

 • வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
Source : http://www.dinakaran.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!4 comments:

Kumaran said...

படிக்கவே நா ஊறுகிறது..ருசி அருமையாக இருக்கும் என நினைக்கிறேன்..நேரம் பார்த்து சமைத்திட வேண்டியதுதான்..மிக்க நன்றி.
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

JZ said...

உங்கள் சமையல் பதிவுகள் அருமை, நண்பா.. இப்படிப்பட்ட ருசியான ப்ரைட் ரைஸை நானெல்லாம் சமைக்கப் போனால் எவ்வளவு மோசமாக வருமென்று நினைத்துப் பார்க்கும்போதுதான் பயமாக இருக்கிறது!

ஆமினா said...

நல்லா இருக்குங்க

வீடு K.S.சுரேஸ்குமார் said...

அன்புடைய நண்பரே! உங்களுடைய பதிவினை ரசித்து! உங்களுக்கு சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை என் வலைதளத்தில் வழங்கியுள்ளேன் தாங்கள் ஏற்றுக்கொண்டால் எனக்கு மிக மகிழ்ச்சியிளிக்கும் உங்களை அன்புடன் எதிர்பார்த்து

அன்புடன்
வீடு K.S.சுரேஸ்குமார்

"விருதுகள் எனும் ஊக்கமருந்து!

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top