ஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்

இன்றைய தேதியில் தயா‌ரிப்பாளர்கள் பயமில்லாமல் அணுகக் கூடிய இயக்குனர் ராஜேஷ் எம். சிம்பிளான பட்ஜெட்டில் அதைவிட சிம்பிளான கதையை ஜாலியாக எடுப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. கதை இருக்கிறதோ இல்லையோ கல்லா நிறைவது கன்ஃபார்ம்.

சிவா மனசுல சக்தியை தொடர்ந்து இவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழகமெங்கும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி விஷயத்தில் கை தேர்ந்தவர் என்பதால் தனது திரையுலக பிரவேசத்துக்கு உதயநிதி ஸ்டாலின் இவரைத்தான் தேர்வு செய்திருக்கிறார்.

ராஜேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ஒரு கல் ஒரு கண்ணாடி. துணைப் பெயர், ஓகே ஓகே.


ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நா.முத்துகுமார் அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார்.

உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நட்சத்திரம் சந்தானம் நடித்துள்ளார்.

ஆர்யா, ஆண்ட்ரியா, சினேகா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்கள்.

பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.01. அடடா ஒரு தேவதை வந்து போகுதே...

வழக்கமான கார்த்திக்கின் மென்மையான குரலில் ஒலிக்கும் பாடல். சில இடங்களில் கவினரின் வரிகள் அருமை.

கோவில் படத்துல வரும் 'சிலு சிலுவென' பாடலை கொஞ்சம் நியாபகம் படுத்தும் பாடல் இது. கிடார் மற்றும் பிற இசை கருவிகள் கொண்டு புதிய இசை கோர்வை தந்து ஒரு வழியாக சமாளித்து இருக்கிறார்.
இவள் யாரிவள் இந்திரன் மகனா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா

02. அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே...

மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல

03. அழகே அழகே அழகின் அழகே நீயடி...

குட் லவ் பீல் சாங். முகேஷ் மற்றும் ஸ்ரீமதுமிதா குரலில் ஒரு மெல்லிய சோகம் வந்து குடிகொள்ளும் பாடல் இது.

பாடல் வரிகளை கேட்ட கேக்க பட விசுவலை பார்க்க மிக ஆசையா இருக்கு. எல்லாம் ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம் கையில் இருக்கு..... பார்ப்போம் என்ன செய்திருக்கிறார் என்று....
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!


04. காதல் ஒரு பட்டர்ப்ளை போல வரும் ...

Fall in love at first sight.

காதல் மெலடி..... எனக்கு பிடித்த பாடல் இது.

பாடல் வரிகளில் இடை இடையே கிடார் ஜாலம் செய்கிறது..... 'என்னமோ ஏதோ..' பாடிய ஆலாப் ராஜு மீண்டும் ஒரு ஹிட் பாடலை பாடியிருக்கிறார். இவர்களுடன் ஹேமச்சந்திரன் + சுனிதா சாரதி இருவரும் தங்களில் பங்களிப்பை மிக சிறப்பாக செய்திருகிறார்கள். பாடல் மிக அருமையா இருக்கு கேக்க.

05. வஞ்சரம் மீனு வவ்வாலு.. கெடைச்சா கெளுத்தி விராலு...

'Beware of girls'....

மீண்ட நாளுக்கும் பிறகு ஒரு கானா + சரியான குத்து பாடல். எனக்கு பிடித்த பாடல் இது.

காதல் + பெண்களிடம் எப்படி எல்லாம் ஆண்கள் மாட்டி தவிகிரார்கள் என்று சொல்லும் பாடல். வாரணம் ஆயிரம் படத்து வந்த 'அவ என்ன என்ன....' பாடல் நினைவு படுத்தும் பாடல்.

'கானா புகழ்' வேல்முருகன் சும்மா பட்டையை கிளப்பியிருக்கிறார். இவருடன் நரேஷ் ஐயர் ஜோடி சேர்ந்து மேலும் பாடலுக்கு அழகு சேர்த்து இருக்கிறார். முத்துகுமாரின் பாடல் வரிகள் மிக அருமை.
கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கன்னுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

Source : Paadalvarigal.com

'காதல் ஒரு பட்டர்பிளை + வஞ்சரம் மீனு வவ்வாலு ' எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். மொத்தத்தில் காதல் + நட்பு + சோகம் என அனைத்து உணர்வுகளையும் வெளிபடுத்தும் படம் தொகுப்பு இந்த பட பாடல்கள்.

பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!3 comments:

தமிழ்மகன் said...

பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

ஹாலிவுட்ரசிகன் said...

கொஞ்ச நாட்களாக எனது ப்ளேலிஸ்டிலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் பாடல்கள் இவை தான். ஹாரிஸுக்கு மட்டுமே ஒரே ட்யுன் செட்டப் வைத்து இப்படி பாட்டு கொடுக்க முடியும்.

cheena (சீனா) said...

அன்பின் கோழி பையன் - விமர்சனம் நல்லாவே இருக்கு - ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top