ரஜினியை தேடிய லண்டன் போலீஸ்

விடுதலை படத்துக்காக சிவாஜிசார், ரஜினி, நான், விஷ்ணுவர்த்தன் எல்லோரும் லண்டன் போயிருந்தோம். சிவாஜிசாரை மட்டும் வேறொரு ஹோடலில் தங்க வச்சுட்டு, நாங்க மூணு பேரும் இன்னொரு ஹோட்டல தங்கியிருந்தோம். இருபது நாள் தொடர்ந்து லண்டன்ல ஷூட்டிங் நடந்துச்சு.

ஒவ்வொரு நாள் ராத்திரியும் நாங்க மூணுபேரும் ஹோடேலேயே இருக்கமாட்டோம். லண்டன்னோட இண்டு இடுக்கு சுத்தி பார்க்கிறது தான் எங்க வேலை ... இப்படியே இருபது நாளும் கழிந்தது.

கடைசியா ஷூட்டிங் முடிந்து ஊருக்கு கிளம்பு ஏர்போர்ட்டுக்கு வந்தோம். அப்பப் படத்தோட தயாரிப்பாளர் பாலாஜி சார் படபடப்போடு வந்து, "ஏம்பா ரஜினி... உன்னையும் விஜயகுமாரையும் விஷ்ணுவர்த்தனையும், லண்டன் போலீஸ் தேடுறதா பேப்பர்ல வந்திருக்கே... என்னப்பா தப்பு செய்தீங்க..?"னு கேட்டாரு. அதோடு பேப்பரையும் விரிச்சி காண்பித்தாறு.

முதல் பக்கத்துல, நாங்க மூணு பேரும் இருக்கிற மாதிரி, பெரிய போட்டோவும் போட்டு "இவர்களை லண்டன் போலீஸ் தேடி வருகிறார்கள்..." என்ற செய்தி வெளியிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததுமே ரஜினி திக்பிரமை பிடிச்ச மாதிரி ஆயிட்டாரு. எங்களுக்கும் அதே பிரமை தான்.

எங்களோட அதிர்ச்சியைப் பார்த்து கொஞ்ச நேரம் ரசித்த பாலாஜி சார், திடீர்ன்னு கட கடன்னு சிரிக்க ஆரம்மிசிடாறு. எங்க கையை பிடிச்சு ஏற்போர்டுல இருக்கிற பேப்பர் கடைக்கு அழைச்சிட்டு போனாரு. அங்கே உள்ள பேப்பர்ல
முதல் பக்கம் மட்டும் 'ப்ளாங்கா' இருக்க... மத்த பக்கத்துல நியூஸ் இருக்குமாம். பப்ளிக் யாரவது தங்களை பத்தி நியூஸ் வரணும்னு ஆசை பட்டு பணம் கொடுத்தா போதும் ... உடனே முதல் பக்கத்துல அவங்களை பற்றி நியூஸ் போட்டு, உடனே ப்ரிண்டும் பண்ணி தருவார்களாம்.

லண்டன்ல இருக்கிறவங்க தங்களை கிண்டல் பண்ணுவதற்காக ராணி எலிசபத் ராணியை சந்தித்த மாதிரி எல்லோரும் விளையாட்டா, படத்தோட நியூஸ் போட்டுக்குவாங்காலாம்.
அப்படிதான், எங்க போட்டோவை அந்த பேப்பர் கடையில கொடுத்து, பிரிண்ட் பண்ண வட்சிருக்கரு பாலாஜி சாரு.... அந்த திகில் காமெடியா இப்ப நினைத்தாலும் சிரிப்பாதான் இருக்கும்.." என்று நம்ப நாட்டாமை விஜயகுமார் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி சொன்ன ஒரு தகவல் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பாலாஜி,,, தி பாஸ்...,

பாலா said...

பாலாஜி......தி பாஸ்

Kolipaiyan said...

நன்றி பழனி சுரேஷ் & negamam.

டக்கால்டி said...

சுவாரசியமான வெளிவராத தகவல் அண்ணே இது...
பகிர்ந்தமைக்கு நன்றி...

Kolipaiyan said...

வாங்க டக்கால்டி அண்ணே...

முதல் முறையா வந்து விமர்சனம் செய்தமைக்கு என் நன்றிகள்.

Anonymous said...

நீங்க மட்டும் எப்படி இப்படி பட்ட செய்திகளை கொடுக்கறீங்க கண்ணன் சார்.

Kolipaiyan said...

கண்ணா... உங்கமுகம் காட்ட முடியாமல் போனது ஏனோ? என்ன பயமா?

நாமக்கல் சிபி said...

உங்களைக் கூட சிபி ஐ ல தேடுறாங்களாம்!

Kolipaiyan said...

அதே இடத்துல இருந்தபோது தானே சிபி..? அப்படினா அது பெரிய பொய்'னு எனக்கும் தெரியும்.

cheena (சீனா) said...

அன்பின் கோழி

தகவல் பகிர்வினிற்கு நன்றி

நல்வாழ்த்துகள்

Kolipaiyan said...

வருகைக்கும் உங்கள் வாழ்த்துரைக்கும் நன்றிகள் சீனா & செந்தில்குமார்

நாடோடித்தோழன் said...

வித்தியாசமான செய்தி.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..
நாமும் இது மாதிரியான சேவையை தொடங்கலாமா...

Kolipaiyan said...

வாருங்கள் நாடோடித்தோழரே... தொடங்குங்கள் உங்கள் செய்வையை.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top