உழைக்கத் தயாராக இருப்பவரிடம் ஒருபோதும் தோல்வி கிட்டே நெருக்குவதில்லை. முதுமை அவர்கள் உடலில் இடம் கேட்பதில்லை. 'திருச்சியின் அழகிய கிழவர்' பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ?
அவர்தான் முத்தமிழ்க் காவலர் அமரர் கி.ஆ.பெ. விசுவநாதன். நெடிய உருவம். அழகிய உருவம். 80 வயதிலும் மிடுக்கான நடை. கம்பீரமான பிசிறில்லாத குரல். தடுமாற்றம் இல்லாத பேச்சு.
ஒரு விழாவுக்கு சென்னை வந்த அவரை, ரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துபோக வந்திருந்தார் ஒரு நண்பர். பயணக்களைப்பே இல்லாமல் ரயிலில் இருந்து வந்து இறங்கினார். கையில் ஒரு சிறிய பெட்டி. மரியாதை நிமிர்த்தமாக அதனை வாங்க நண்பர் கை நீட்டிய போது, " விடு ...பெட்டியை பிறரிடம் கொடுத்துத் தூக்க சொல்லுமளவு எனக்கு வயதாகவில்லை." என்று கூறிவிட்டு விடுவிடுவென நடந்தார். அப்போது அவருக்கு வயது 80.
80 வயதிலும் பிறர் உழைப்பை, உதவியை எதிர்பாக்காத பெருட்செல்வம் அவர் மனதில் இருந்தது. அதனால் தான் அவர் 'திருச்சியின் அழகிய கிழவர்' எனப் பெயர்பெற்றார்.
அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் ஒரு நாள் நிதானமாக தமது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அதன் அழகை ரசித்துகொண்டிருந்தார். அவர்தான் வெளியில் போக இருந்த புகழ் பெற்ற பதவியாளர் ஒருவர் அங்கு வந்தார்.
அப்போ உங்க இளமையின் ரகசியம் என்ன? இவரை போலவா? இல்லை ...
உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்கள் சோம்பேறிகள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பவர்கள் ஒருவகையில் பிட்சைகாரர்களே!
நன்றி : வெற்றி நிச்சயம்
உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

"பிறர் உழைப்பை எதிர்பாக்காதே" இது அவரது இளமையின் ரகசியம்.
அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் ஒரு நாள் நிதானமாக தமது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அதன் அழகை ரசித்துகொண்டிருந்தார். அவர்தான் வெளியில் போக இருந்த புகழ் பெற்ற பதவியாளர் ஒருவர் அங்கு வந்தார்.
லிங்களின் செயலை கண்டவர் அதிர்ச்சியானார். "என்ன மிஸ்டர் லிங்கன்...உங்கள் ஷூவுக்கு நீங்களே பாலிஷ் போடுறீங்க..? " என்று கேட்டார்.
"ஏன்... நீங்கள் வேறு யார் ஷூவுகாவது பாலிஷ் போடுவீங்களா ?" என்று கேலியாகக் கேட்டார் லிங்கன். வந்தவர் ஒருநிமிஷம் ஆடிபோனார்.
அப்போ உங்க இளமையின் ரகசியம் என்ன? இவரை போலவா? இல்லை ...
உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்கள் சோம்பேறிகள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பவர்கள் ஒருவகையில் பிட்சைகாரர்களே!
நன்றி : வெற்றி நிச்சயம்
உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!
0 comments:
Post a Comment