எங்கேடா அந்த 'துளசி'...?!

ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களுக்கு சென்றால் துளசித் தீர்த்தம் கொடுப்பார்கள். நம்பில் பலரும் அதனை ஏதோ ஒரு பக்தி பொருளாய் தான் பார்க்கிறோம். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்.எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்களுக்காக.

1. துளசிச் செடியை ஆராக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

2. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

3. நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

4. துளசி இலையை போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

5. கோடை காலம் வரப்போகிறது. வியரவை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா...? உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க.

6. தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரி இரண்டையும் துளசி இலையால் குணமைடயச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா ? துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

7. சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று சாப்பிடலாம். இதனால் சர்க்கரைஅளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாதை இந்த அருமருந்தான துளசி செய்து விடும்.

8. சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடேவ உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்னை சரியாகும்.


துளசியில் கிருஷ்ண துளசி, நாய்த்துளசி, கருந்துளசி, காட்டுத்துளசி, இராம துளசி எனப் பல வகைகள் இருக்கின்றன.

நம் நாட்டில் 22 வகை துளசி இருக்கிறது. துளசி 22 விதம் இருப்பினும் நாம் அதிகமாக பயன்படுத்துவது 'இராம துளசி என்ற வெண்துளசியும், 'கிருஷ்ணதுளசி' என்ற நீலத்துளசியுமாகும்.


நம்ப வேதிகாவும் கூட இந்த துளசியின் பயன் தெரிந்து என்னமா பூஜை பண்றங்கோ...

இனி துளசியை கண்டால், விடாதீங்க...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!3 comments:

துளசி கோபால் said...

ஏன் இப்படிக் கோவமாக் கேக்கறீங்க?

நான் இங்கேதான் (பதிவுலகில்) ஒரு ஆறு வருசமா இருக்கேன்!

23வது வகை ஒன்னும் இருக்காம், கோபால் துளசின்னு:-)

துளசி கோபால் said...

ஃபார் ஃபாலோ அப்

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி துளசி கோபால்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top