சமையல் குறிப்பு : கிரீன் மசாலா சப்பாத்தி

கண்ணுக்கு குளுமையான, பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தலை - 1 கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
  1. அரைக்க எடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து, அரைத்துகொள்ளுங்கள்.

  2. கோதுமை மாவுடன் அரைத்த விழுதுகளை சேருங்கள்

  3. அதனுடன், நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்ந்தது நன்கு மென்மையாக
    பிசையுங்கள்.

  4. பிறகு, சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சப்பாத்தி கட்டையால் உருட்டி கொள்ளுங்கள்.

  5. தோசை கல்லில்/ தவாவில் எண்ணெய் - நெய் கலவையை சேர்த்து வேகவிட்டு எடுங்கள்.

  6. கண்ணுக்கு குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



7 comments:

Anonymous said...

நம்பி இறங்களாமா களத்தில்...ஹஹ்ஹ்ஹா

Kolipaiyan said...

செய்து பார்த்துட்டு வந்து உங்கள் பதிலை சொல்லுங்க தமிழரசி. வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//நம்பி இறங்களாமா களத்தில்...ஹஹ்ஹ்ஹா//
தமிழ்,

நீங்க என்ன சப்பாத்தியா செய்யப் போறீங்க? யாராவது செஞ்சி வெச்சா சாப்பிடப் போறீங்க! அதுக்கு இத்தனை பில்ட் அப்பா?

நாமக்கல் சிபி said...

//செய்து பார்த்துட்டு வந்து உங்கள் பதிலை சொல்லுங்க தமிழரசி. வாழ்த்துக்கள்//

செய்து பார்த்துட்டு மட்டும்தான்! (சாப்பிட்டு பார்த்துட்டு அல்ல, சாப்பிட்டு பார்த்தா ஆவியாதான் வந்து பதில் சொல்ல முடியும்)

Kolipaiyan said...

என்ன சிபியாரே, உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லையா.

முதலில் சப்பாத்தியை செய்து நீங்கள் சாப்பிட்டு பாருங்கள். பிறகு சொல்லுங்கள் எப்படி இருந்தது என்று....!?

நாமக்கல் சிபி said...

//முதலில் சப்பாத்தியை செய்து நீங்கள் சாப்பிட்டு பாருங்கள். பிறகு சொல்லுங்கள் எப்படி இருந்தது என்று....!?//

குசும்புக்கு இப்படி ஒரு தண்டனையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

cheena (சீனா) said...

அன்பின் அபிநயா

செஞ்சிடுவோம் - வூட்ல சொல்லிட்டேன் - சாப்பிட்டுப் பாத்துட்டு மறுபடியும் இங்எ வரேன் - எழுதறேன் - சரியா

நல்வாழ்த்துகள்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top