CASH - ஹாலிவுட் பட விமர்சனம்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருள் "பணம்". நம்மில் பலரும் பணம் அதிக பணம் சேர்க்க/சம்பாதிக்க வேண்டும் அன்ற ஆசை உண்டு. நமக்கு கொஞ்சம் பணம் வழியில் கிடைத்தால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பையில் போட்டுகொண்டு சென்று விடுவோம் அல்லது அதனை உரியவரிடம் தர முயற்சி செய்வோம். அதுவே கொஞ்சம் அதிகமான பணம் என்றால்... நம் மனது உடனே அதனை உரியவரிடம் தர ஒரு நிமிடம் யோசிக்கும். இதே போன்ற மைய கருத்தை சொல்லும் ஒரு ஹாலிவுட் படம் 'CASH'.


படத்தோட கதை என்னனா ...

அதே போலதான் இங்கே ஒரு நடுத்தர குடும்ப ஹீரோ காரில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு கார் அவனை முந்தி செல்கிறது. ஒரு பாலத்தின் மீது ஏறும்போது ஒரு பொருள் இவனது காரின் முன்பகுதியில் வந்து விழுகிறது.

காரை நிறுத்தி பார்த்தால் அது ஒரு 'சூட்கேஷ்'. போட்டவனை திட்டிவிடு, அதனை தூக்கி எறிதவனுக்கு - ஒரு சின்ன எதிர்பார்ப்பு. அதனை திறந்து பார்த்தால்... ஒரே பணமயம். இடைவெளி இல்லாத அளவு பணம் நிரம்பிவழிந்து இருக்கிறது. அதனை எடுத்துக்கொண்டு தன் இல்லம் வருகிறான்.

தன் மனைவியிடம் காட்ட, இருவரும் சேர்ந்து வீட்டுக்கு தேவையான பொருள்கள், டிவி, சோபா, கார், சேவிங் என்று தங்கள் விரும்பிய வழியில் அந்த பணத்தை செலவு செய்ய ஆரம்பிகிறார்கள்.

இந்நிலையில், பணத்தை தொலைத்த வில்லன் (Sean Bean) அந்த பணத்தை எடுத்த ஹீரோவை கண்டுபிடித்து வந்துவிட பிரச்னை ஆரமிகிறது. ஹீரோவை தொலைத்த பணத்தை முழுமையாக வேண்டும் என்று கேட்டு மிரட்டி ஹீரோவிடம் இருக்கும் பணத்தை எல்லாம் பெறுகிறான்.

மீதி பணத்திற்கு ஹீரோகாரை விற்று- பாங்கில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து - மீதி பணத்திற்கு ஹீரோ + அவன் மனைவி + வில்லன் சேர்த்து சிறு சிறு இடங்களில் கொள்ளை அடித்து - கடைசியில் ஒரு வங்கியில் முடிகிறது.இவர்களை சிகாகோ போலீஸ் தேடும் நிலையில் அவர்கள் அங்கிருந்து வேறு நகருக்கு காரில் பயணிக்கும் போது நம்ப ஹீரோ வில்லனுக்கு தரவண்டிய பணம் போக மீதி இருக்கும் பணத்தை ஹீரோ நாடு ரோட்டில் வீசி எறிகிறான்.

இந்நிலையில் ஹீரோ வில்லன் இடையே சிறு மோதல் காரிலேயே. துப்பாக்கியை எடுக்கும் வில்லன் ஹீரோவால் சுட்டு இறக்க - வில்லனின் சகோதரன் ஜெயிலில் இருந்து வெளிவர படம் முடிகிறது.

இந்த படத்தின் ட்ரைலர்'Black Death, Lord of the Rings' போன்ற படங்களில் நடித்தவர் Sean Bean. கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான் 'அவர்ட்' பெற்றவர் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டியிருப்பார். நம்ம ரகுவரன் போல சும்மா மனசர் அலட்டிக்காமல் நடித்திருப்பார் .

Chris Hemsworth - வில்லனிடம் மாட்டிகொண்டு படும் அவஸ்தை + திருடும் போது கிடைக்கும் சுகம் + வெற்றி என் பன்முக நடிப்பு. சபாஸ்.

Stephen Millburn Anderson- திரைக்கதையும் வசனமும் அழகு. கதாநாயகி ஒரு 'ரெஸ்டாரென்ட்'-ல் திருடிவிட்டு ஹீரோவிடம் "உன்னைவிட நான் அதிகம் திருடிவிட்டு வந்திருக்கேன் பாருன்னு" பெருமையா சொல்லும் இடம் அழகு .

பின்னணி இசையும் கேமிராவும் குறிப்பிடும் படி இதில் விளையாடி இருக்கும்.

CASH - டைம் பாஸ் மூவி

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!4 comments:

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல பதிவு. பார்க்க முயல்கிறேன்.

Kolipaiyan said...

உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு என் சிரம் தாழ்த்த நன்றிகள் Dr.எம்.கே.முருகானந்தன்.

மகா said...

i will see if i have CASH....

Kolipaiyan said...

All the best MAGA. If time permit, try to watch this movie. You feel something after watch this movie.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top