1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் "3 நின்ஜாஸ்" (3 Ninjas). குழந்தைகளை குறிவைத்து எடுத்த காமெடி கலந்த சண்டை படம் இது.
படத்தோட கதை என்னனா ...
மோரி - 'நிஞ்சா' என்ற ஜப்பானிய கலையை நன்கு திறமையாக பயின்றவர். இவளது மகளை எப்.பீ.ஐ (FBI) என்கின்ற உளவு அமைப்பில் இருக்கும் ஒரு அதிகரிக்கும் திருமணம் செய்துவைக்கிறார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் (ராக்கி, கோல்ட் & டும்-டும்).
ஒவொரு வருடமும் பள்ளி விடுமுறை/கோடைகாலத்தில் இந்த குழந்தைகள் தன் தாத்தா மோரியை பார்க்க வருவார்கள். அவர்களுக்கு அந்த கலையை மிகவும் கண்டிப்புடன் சொல்லி தருகிறார்- அவர்களது தத்தா.
இந்நிலையில், எப்.பீ.ஐ(FBI) அதிகாரி, தன் சாமர்த்தியத்தால், ஒரு ஆய்த பரிமாற்றத்தை கண்டுபிடிக்கிறார். வில்லன் சாமர்த்தியமாக தப்புகிறான். கதைக்கு இப்போ ஒரு வில்லன் ரெடி.
கோடை முடிந்து வீட்டிற்கு வரும் அந்த மூன்று குழந்தைகளும் பள்ளிக்கு செல்கின்றார். அவர்களை கடத்தி அதிகாரியை பழிவாங்க துடிகிறான் அந்த வில்லன். அதற்காக மூன்று அடி ஆட்களை அனுப்ப ... அவர்களை அந்த மூன்று குழந்தைகளும் சும்மா புரட்டி புரட்டி சும்மா புரட்டி புரட்டி (repeat) எடுக்க... வில்லனின் வீரம் பொங்க ... ஒருவழியாக அந்த குழந்தைகளை கடத்திவிடுகிறான் அந்த வில்லன்.
இதனை அறிந்த FBI அதிகாரி, அவர்களை மீட்ட முயற்சி செய்யும் வேளையில், அந்த தாத்தா வருகிறார். குழந்தைகளை தான் மீடுவருவதாக சொல்கிறார். ஆனால், முதலில் FBI அதிகாரி மறுக்கிறார். பின்னர் ஒப்புகொள்ள...
வில்லன்களை எதிர்த்து மோத தாத்தா ரெடி. வில்லன்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறார். தாத்தா அந்த மூன்று குழந்தைகளையும் காப்பாற்றினாரா ? FBI அதிகாரி என்ன செய்தார் அன்பதனை பிறகு நடந்ததை நல்ல டிவிடி(DVD) மூலம் பார்த்து தெரிந்து கொள்க.
படத்துல என்னை கவர்த்தவைகள் பல...
கேமிராமேனை சும்மா சொல்ல கூடாது... சும்மா சந்து போந்து என்று விளையாடி இருக்கு. நல்ல தரமான பதிவு.
அடிப்படை பயிற்சி செய்ய அந்த மூன்று குழந்தைகளும் படும் பாடு, தன் குருவான தாத்தாவிடம் காரை மறித்து சண்டைஇடும் போதும் அசத்தியிருப்பார்கள்.
தாத்தாவாக நடித்தவரின் நடிப்பும் ஒரு கலையை சொல்லித்தரும் பாங்கும் அழகு. இறுதியில் வீரம் பொங்க அவர் கிளம்பும் போது - நல்ல நடிப்பு.
குழந்தைகளை குறிவைத்து எடுத்த படம் இது. குழந்தைகளை விவேகத்துடனும் வீரத்துடனும் வளர்க்க வேண்டும் அன்ற செய்தியும் ஒன்றினை சொல்லி செல்கிறது இந்த படம்.
3 நிஞ்சா - பெரியவர் முதல் குழந்தைகள் வரை பார்க்க கூடிய காமெடி கலந்த சண்டை படம்.
நன்றி. மீண்டும் வருக!!!

0 comments:
Post a Comment