ஹனி (HONEY) - ஹாலிவுட் படவிமர்சனம்

'பெண்டச்டிக் போர்', 'குட் லக் சக்' போன்ற பல படங்களிலும் நடித்தவர் ஜெஸ்ஸிகா அல்பா (Jessica Alba). அமெரிக்கா டிவி சீரியலில் நடித்த இவர் ஹாலிவுட்திரைப்படத்தில் முதல் முறையாக நடித்த படம் ஹனி(HONEY) (HONEY). நான்கு 'டீன் சாய்ஸ் அவார்ட்ஸ்' விருதுகளை 2003ல் அள்ளிய இந்த படத்தை பற்றிதான் இன்றைய விமர்சனம் அல்லது அறிமுகம்.

படத்தோட கதை என்னனா ...

தன் தாயார் நடத்து டான்ஸ் கிளப்பில் இளைனர்களுக்கு டான்ஸ் சொல்லித்தரும் டீச்சர் நாயகி ஹனி டேனியல்ஸ் (Jessica Alba). தனக்கு டான்சில் பல திறமைகள் இருந்தும் ஜெயிக்கமுடியாமல் பகுதி நேர வேலையாக ஷாப், பார்-ளையும் வேலைசெய்கிறார்.

ஒரு நாள், பார்லில் வேலை முடித்துவிடு திரும்பும் போது, இவளுக்கு பிடித்த ஹிப்பாப் (hip pop)டான்ஸ் ஆட, அதனை ஒருவன் படம் பிடிக்க, அந்த பாரில் அன்று ஆடவேண்டியவள் இவளிடம் சண்டை இட ஒருவழியாக பாரைவிட்டு வெளியே வருகிறாள். பென்னி & ரெமென்ட் இருவரும் சகோதர்கள். இவர்களின் டான்ஸ் பார்த்து வியந்துபோகிறாள் ஹனி. தனது டான்ஸ் கிளப் வந்து டான்ஸ் கற்றுக்கொள்ள அலைகிறாள். இவளை தங்கள் சகோதரி போல பாவிகிறார்கள் இருவரும்.

மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பிரபல டைரக்டர், ஹனி ஆடிய டான்சை பார்த்து இவளுக்கு வாய்ப்பு தருகிறார். வித்தியாசமான டான்சை எதிர்பார்க்கும் டைரக்டர் மைகேல் எல்லிஸ் (David Moscow) இவளிடம் வேறு சில புதிய டான்சை எதிர்பார்க்க, சட்டென்று இவளுக்கு தன் நண்பன் 'சாஸ்'(Mekhi Phifer) நினைவு வர, அவனது கூடைபந்து விளையாட்டில் அவனின் அணுகு முறையை வைத்து டான்ஸ் அமைகிறாள். வீடியோ ஆல்பம் சூப்பர் ஹிட்.

ரேமன்ட் அவனது சகோதரனின் நடன அசைவுகள் சிலவற்றை இவளது நடத்தில் பயன்படுத்தி அல்பங்களை செய்கிறாள். தனது டான்ஸ் கிளப்பில் இருக்கும் சிறுவர்களை அடுத்த அல்பத்தில் பயன் படுத்த முயற்சி எடுக்கிறாள்.

டைரக்டர் ஓகே சொல்ல சந்தோசத்தில் தன் பெற்றோரிடம் தன் டான்ஸ் கிளப்பை பெரிய அவளவு பிரபலபடுத்த நினைப்பதை தெரிவிக்கிறாள். அதற்காக ஒரு இடமும் பார்த்து வைதிருபதாக சொல்ல, அதனை வாங்க இவளிடம் போதிய பணம் இல்லை. ஆல்பம் மூலம் வரும் பணத்தைகொன்டு அந்த இடத்தை வாங்க பிளான் பண்ணுகிறாள்.

ஒரு நாள், டைரக்டர் இவளை அழைத்து கொண்டு ஒரு பாட்டிக்கு போகிறார். அங்கே இவளிடம் தவறாக நடக்க முயற்சிக்க - மோதல் - சமாதானம். அதன் பின்னர் இவளின் நடன அசைவுகள் இவனுக்கு பிக்காமல் போகிறது. இவளை தனது அல்பத்திலிருந்து வெளியேற்ற, தன் மாணவர்களுடன் ஏமாற்றத்துடன் திருப்புகிறாள்.

இவளின் புதிய கட்டிட ஆசை நிறைவேற்ற, புதிதாக ஒரு டான்ஸ் ஷோ ஒன்றை தயாரிக்கிறாள். அதனை அவளது நண்பனுடன் தனக்கு தெரிந்த படி விளம்பரபடுத்தி வருகிறாள். இந்நிலையில், அவளின் ஷோ நடந்துதா..? அந்த இடத்தை அவள் வாங்கினாளா ? டைரக்டர் என்ன ஆனார்? என்பது தான் மீதி கதை.

ஒரு கட்டத்தில், ஹனி தன் கண்ணில் காண்பதை டான்சாக வடிவமைக்கும் இடம் சபாஸ். இவளின் டான்ஸ் + அசைவுகள் அட அட...நம்மையும் டான்ஸ் ஆட வைக்கிறாள். ரப்பர் போல வளைந்து ஆடும் போது நானும் சேந்து ஆடுகிறோம்.

ரேமன்ட் பற்றி சொல்லியே ஆக(ட) வேண்டும். குட்டி பயல் சும்மா பின்னிஎடுத்திருப்பான் நடிப்பிலும் டான்சிலும்.

ஹனி இருந்த இடத்தில் புதிதாக வந்தவளிடம் அந்த டைரக்டர் ரும் தயாரிப்பாளரும் சந்திக்கும் இடம் சிரிப்பலை.

பின்னணி இசையும் கேமிராவும் டான்சர் உடனே பயணிக்கும் அற்புதம் இங்கே நீங்கள் பார்க்கலாம். இசை ஆல்பம் தயாரிக்கும்போது நடக்கும் சில விசயங்களையும் நீங்கள்அறியலாம்.

ஹனி படத்தின் ட்ரைலர் / கண்ணொளி இங்கே.

HONEY - டான்ஸ் பிரியர்கள் பார்க்கவேண்டிய படம் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!2 comments:

angel said...

seems to be a nice introduction

Kannan said...

Really its good movie for music lovers.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top