உட்கார்ந்து எழுந்து, கையை காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா. யோகாவில் பல நிலைகள் இருகின்றன. அவைகள் ...
இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது வஜ்ராசனம் பற்றி தான்.
1. வஜ்ராசனம்
வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள். பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து, பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டு பாகம் தெரியும். இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள். அப்பகுதியை சாதாரணமாக கோடாரியால் வெட்டுவதும், உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம். அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும். நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது.
செய்முறை விளக்கம் :
எச்சரிக்கை :
உங்களுடைய முழங்கால்கள் காயமுற்று இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
செயல்முறை கண்ணொளி இங்கே(Watch this video)
பயன்கள்:
இந்த ஆசனத்தில் மலச்சிக்கல் எத்தனை வருட பிரச்சனைகளாக இருந்தாலும் குட்பை சொல்லி சென்று விடும். தொந்தி. தொப்பை. பெருவயிறு போய்விடும். பேதி மாத்திரை சாப்பிட்டு மலம் போகவில்லை என்றால் கூட இந்த வஜ்ராசனத்தை செய்து பாருங்கள் பிறகு நீகளே மற்றவர்களுக்கு இதன் தன்மை பற்றி சொல்வீர்கள்.
நன்றி. மீண்டும் வருக!!!
- யாமா (விதிகள் / வரையறைகள்)
- நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
- ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
- ப்ராணாயமா (மூச்சுப்பயிற்ச்சி)
- ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
- தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
- தியானா (தியானம்)
- சாமாதி (தீர்வு)
இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது வஜ்ராசனம் பற்றி தான்.
1. வஜ்ராசனம்
வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள். பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து, பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டு பாகம் தெரியும். இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள். அப்பகுதியை சாதாரணமாக கோடாரியால் வெட்டுவதும், உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம். அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும். நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது.
செய்முறை விளக்கம் :
- முதலில் இடது முழங்கை முட்டியையும், பிறகு வலது முழங்கை முட்டியையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக பின் பக்கத் தரையில் வைக்கவும்.
- மெதுவாக உடலை பின் பக்கமாகச் சாய்த்து - முதுகையும், பிறகு தலையையும் தரையில் வைக்கவும். கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நேராக வைக்கவும்.
- தோள்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையிலும், முழங்கால் முட்டிகள் இரண்டும் அருகருகே சேர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். புதிதாகத் துவக்குபவர்கள் கைகள் இரண்டையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளலாம்.
- இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்றதும், இரண்டு கைகளையும் மேல் நோக்கி மடக்கி - கத்தரிக்கோல் போன்ற நிலையில் தோளுக்குக் கீழ் - வைத்துக்கொள்ளவும்.
- வலது கை இடது தோளுக்குக் கீழும், இடது கை வலது தோளுக்குக் கீழும், மடங்கிய கைகளுக்கு இடையில் தலை இருக்குமாறும் நிலைகொள்ள வேண்டும்.
- பழைய நிலைக்குத் திரும்ப முதலில் கைகள் இரண்டையும் ஒவ்வொன்றாக எடுத்து, உடலின் பக்கவாட்டிற்கு கொண்டு வந்தப் பிறகு, ஆரம்பத்தில் செய்த்தைப் போல முழங்கைகளால் ஊன்றிக் கொண்டு வஜ்ராசன நிலைக்கு வரவும்.
எச்சரிக்கை :
உங்களுடைய முழங்கால்கள் காயமுற்று இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
செயல்முறை கண்ணொளி இங்கே(Watch this video)
பயன்கள்:
இந்த ஆசனத்தில் மலச்சிக்கல் எத்தனை வருட பிரச்சனைகளாக இருந்தாலும் குட்பை சொல்லி சென்று விடும். தொந்தி. தொப்பை. பெருவயிறு போய்விடும். பேதி மாத்திரை சாப்பிட்டு மலம் போகவில்லை என்றால் கூட இந்த வஜ்ராசனத்தை செய்து பாருங்கள் பிறகு நீகளே மற்றவர்களுக்கு இதன் தன்மை பற்றி சொல்வீர்கள்.
இஸ்லாமியர்கள் இரவு 12 மணிக்கு பிரியாணி சாப்பிட்டால் கூட காலை ஜீரணமாகி விடுகிறது. இஸ்லாமியர்கள் அவர்களை அறியாமலேயே ஐந்து வேளை தொழுகை செய்யும் போது இயற்கையாகவே ஜீரண உறுப்புகள் வலிமை அடைந்து விடுகின்றன. எவ்வளவு ஹெவியாக கடினமான சாப்பாட்டை சாப்பிட்டாலும் ஜீரணிக்கப்பட்டுவிடுகிறது.
சிலர் சைவ சாப்பாடு வெறும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விட்டு வயிறு சரியில்லை(?!). வயிறு மந்தம். வயிறு உப்புசமாக இருக்கிறது என்பார்கள். ஏன்னா இவர்கள் இந்த யோகாசன நிலையை செய்வதில்லை.
நன்றி. மீண்டும் வருக!!!
0 comments:
Post a Comment