பெண்கள் கபடி- இந்திய அணி உலக சாம்பியன்!!!

இந்திய பெண்கள் "சர்கிள்' கபடி அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது.


பஞ்சாப்பில் உலக கோப்பை "சர்கிள்' கபடி போட்டி நடக்கிறது. இதன் பெண்கள் பிரிவு பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்தித்தது. இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 49-21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் "ஹாட்ரிக்' சாம்பியன் பட்டம் வென்றது.

உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, ரூ. 1 கோடி பரிசாக கிடைத்தது. நியூசிலாந்துக்கு ரூ.51 லட்சம் கிடைத்தது.


சிறந்த வீராங்கனைகள் விருது பெற்ற ராம் பட்டேரி, அனு ராணிக்கு கார்கள் பரிசளிக்கப்பட்டது.

3–வது இடத்திற்கான ஆட்டத்தில் டென்மார்க் 34–33 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த 3–வது இடத்திற்கான மோதலில் அமெரிக்கா 62–27 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆண்களில் யாருக்கு பட்டம் என்பதை நிர்ணயிக்கும் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top