2013–ல் கலக்கிய ஹீரோக்கள்!

2013ல் ஹீரோக்களின் ரேஸ் பலமாகத்தான் இருந்தது. சிலர் ஓடி ஜெயித்தார்கள், சிலர் தடுக்கி விழுந்தார்கள். சிலர் விழுந்து எழுந்து ஓடினார்கள். இந்த சுவாரஸ்மான ரேஸ் பற்றி பார்ப்போம்.

ரஜினி:

இந்த ஆண்டும் ரஜினி படம் வெளிவரவில்லை. நவம்பர் 12ல் அவரது கோச்சடையான் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். கடைசியில் ஆடியோ கூட வெளிவராதது ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றம். கோச்சடையானை மெருகேற்றுகிறோம், மெருகேற்றுகிறோம் என்று சொல்லியே 2 வருடத்தை ஓட்டிவிட்டார்கள். 2014ம் ஆண்டிலாவது கோச்சடையான் வெளிவரும் என்று நம்புவோம்.

கமல்:

சில அமைப்புகளின் அச்சுறுத்தல்கள், அரசின் தடைகள், வெளிநாட்டுக்கு ஓடுவேன், டிடிஎச்சில் வெளியிடுவேன் என்ற கமலின் அறிவுப்பு என பல தடதடக்களை தாண்டி ரிலீசானது விஸ்வரூபம். இந்த பரபரப்புகள் தந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியே விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்கிறது. அதே வேகத்தில் விஸ்வரூபத்தில் மீதமிருக்கம் காட்சிகளோடு இன்னும் சில காட்சிகளை சேர்த்து விஸ்வரூபம் 2 தயாராகிக் கொண்டிருக்கிறது.

விஜய்:

தலைவா என்ற தலைப்பே விஜய்யின் அரசியல் அச்சாரம் என்று பரபரப்பை கிளப்பியது. அதே பரபரப்பில் படம் வெளியாக இருந்த நேரத்தில் விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகளை தலைவாவும் சந்தித்தது. அரசு தடை, விஜய் உண்ணாவிரத அறிவிப்பு, தயாரிப்பாளரின் கண்ணீர் பேட்டி என அடுத்தடுத்த திருப்பங்களுடன் பத்து நாட்களுக்கு பிறகு தலைவா ரிலீஸ் ஆனது. விஸ்வரூபத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி உதவியதைப்போல தலைவாவுக்கு உதவவில்லை.

அஜீத்:

பெயர் குழப்பத்தில் ஆரம்பித்த ஆரம்பம். தடதடவென ரிலீசாகி. அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தலயின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், நயன்தாராவின் அக்மார்க் கிளாமர். ஆர்யா டாப்ஸியின் ரொமான்ஸ் என பக்குவம் சரியாக சேர ஆரம்பம் ரசிகனுக்கு நல்ல விருந்தாக அமைந்து விட்டது.


சூர்யா:

சிங்கிள் படம் தந்தாலும் சூர்யாவின் சிங்கம் 2 பாய்ச்சல் முதல் பாய்ச்சலைவிட அதிகமாக இருந்தது. முதல் பாகத்தில் "ஓங்கி அடிச்சா ஒண்ணறை டன் வெயிட்" என்றவர் இரண்டாம் பாகத்தில் "பாய்ந்தடிச்சா பத்தரை டன் வெயிட்"னு புரூப் பண்ணினார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் தயாரிப்பாளரின் கேஸ் பாக்சை நிரப்பிய விதத்திலும் சிங்கத்தின் கர்ஜனை பலமாக இருந்தது.

விக்ரம்:

விக்ரம் நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் டேவிட். சதா தண்ணியடித்து அலையும் அந்த கோவா டேவிட் வேடம் விக்ரமின் இமேஜை கோவா கடலுக்குள் தூக்கி போட்டது. ஐ வந்து கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆர்யா:

சேட்டையும், இரண்டாம் உலகமும் ஆர்யாவை அமுக்கியபோதும் ராஜாராணி கை தூக்கிவிட்டது. இரண்டாம் உலகத்தின் இரண்டு வருட உழைப்பு வீணாகி ஆர்யாவுக்கு அது இன்னொரு நான் கடவுள் ஆகிப்போனது. சேட்டையில் சந்தானத்துடன் நடித்த பாத்ரூம் காமெடிகள் கண்டு ரசிகர்கள் முகம் சுழித்தார்கள்.

தனுஷ்:

மரியானும், நய்யாண்டியும் தமிழ் நாட்டில் மழையில் நனைந்பட்டாசாய் நமத்துப்போக இந்தி ராஞ்சனா ராக்கெட் வானத்தில் வண்ணம் கூட்டியது. பாலிவுட்டில் சுள்ளானின் கணக்கை 2013 துவக்கி வைத்தது.

கார்த்தி:

அலெக்ஸ் பாண்டியனும், அழகுராஜாவும் கார்த்தியை கைவிட பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் தெம்பானார். கதை தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை 2013ல் கற்றுக் கொண்டார்.

ஜீவா:

டேவிட் அவுட் கொடுக்க என்றென்றும் புன்னகையில் மெல்ல சிரித்தார். தொடர் தோல்விகளுக்கு அரைப்புள்ளி வைத்தார்.

சசிகுமார்:

குட்டிப்புலி மீடியாக்களுக்கு பிடிக்கவில்லை. ஏ செண்டர் மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் பி அண்ட் சியில் அள்ளியது கலெக்ஷனை. சசிகுமார் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சித்தார்த்:

தமிழ்நாட்டுக்காரராக இருந்தாலும் இவர் ஆந்திரத்து சிம்பு. இப்போதுதான் தமிழ்நாட்டு பக்கம் வெற்றிகளை பார்க்கிறார். உதயம் என்.எச் 4 ஆக்ஷன், தீயா வேலை செய்யணும் குமாரு காமெடியென சித்தார்த்துக்கு 2013 சிரிப்பு ஆண்டுதான்.

ஜெயம்ரவி:

இவருக்கு இது சோகமான ஆண்டு இரண்டு வருடங்கள் அமீருடன் இணைந்து, கடுமையா உழைத்த ஆதிபகவன் மட்டும் ரிலீசானது. அவர் மிகவும் எதிர்பார்த்த ஆதிபகவன் அவரை கைவிட்டது.

விஷால்:

சமர் தராத வெற்றியை பட்டத்து யானை தரும் என்று நம்பினார். அது கீழே தள்ளியது. விழந்தவரை காப்பாற்றியது பாண்டிய நாடு. சொந்தப் படம் என்பதால் பாண்டியநாட்டு கலெக்ஷனை வைத்து பட்ட கடன்களை அடைத்து விட்டு உற்சாகமாகிவிட்டார்.

சிவா:

தில்லுமுல்லு வெற்றியுடன் 2013 ருசிக்க ஆரம்பித்தவருக்கு அடுத்து வந்த சொன்னா புரியாது, வணக்கம் சென்னை இரண்டும் தில்லுமுல்லு செய்து திக்குமுக்காட வைத்து விட்டது.
(அடுத்து வருகிற மூன்று பேரும்தான் 2014 ரேஸில் முன்னால் ஓடக்கூடியவர்கள். போட்டியும் இவர்களுக்குள்தான்)

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதியின் தொடர் விஜயத்தின் வரிசையில் இந்த ஆண்டு கணக்கில் சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும். இரண்டுமே துட்டு, ஹிட்டு இரண்டையும் சந்தித்து சாரின் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டது.

சிவகார்த்திகேயன்:

இந்த வருடம் ஹாட்ரிக் ஹிட் அடித்த ஒரே ஹீரோ. கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் தொட்டதெல்லாம் பொன்னானது சாரி... நடிச்சதெல்லாம் ஹிட்டானது. முதல் படத்துக்கு 5 லட்சமும், அடுத்து படத்துக்கு 50 லட்சமும் சம்பளம் வாங்கியவர் இப்போது வாங்குவது 5 கோடி.

விமல்:

நிகழ்கால ஜெமினி கணேசன் இவர். இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் இவர்தான். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, ஜன்னல் ஓரம், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மூன்று பேர் மூன்று காதல் என மொத்தம் 5 படங்கள். கே.பி.கி.ர, தேசிங்கு ராஜா ஹிட் படங்கள். ஜன்னலோரம், மூன்று பேர் மூன்று காதல் ஆவரேஜ். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு பிளாப் என வெரைட்டி ரைஸ் பரிமாறினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google & Dinamalar0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top