பேய் இருக்கிறதோ இல்லையோ ஆனால், பேய்ப் படம் எடுப்பதற்குள் பித்து பிடித்து விடும். அந்தளவுக்கு இடியாப்ப சிக்கல் நிறைந்த ஜானர் இது.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கென்று என்ன டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதற்குள் தான் விளையாட முடியும். திரைக்கதை அமைப்பும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான். பயமுறுத்தும் கேமரா கோணங்களும், காட்சி அமைப்புகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஸோ, இதற்குள் இருந்தபடிதான் கபடியோ, கிரிக்கெட்டோ ஆட முடியும்.
தொடக்கத்தில் ஆங்கிலத்தில்தான் இந்தப் படம் ரிலீசானது. அதுவும் சில திரையரங்குகளில் தான். ஆனால், கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு மடமடவென்று தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். இதே நிலைதான் உலகெங்கும் என்பதுதான் இந்தப் படத்தின் பலம்.
கதையாக பார்க்கும்போது எல்லாமே ஒன்று போல் தெரியும். ஹாரர் ஜானர் அப்படி. ஆனால், இந்த ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பார்க்கும்போதுதான் திரைக்கதைக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள், காட்சிகளை எப்படி விவரித்திருக்கிறார்கள், அதன் வழியாக ரசிகனின் நாடி நரம்புகளில் எப்படி அச்சத்தை ஊட்டியிருக்கிறார்கள் என்பது புரியும்.
பாருங்கள்... பயப்படுங்கள்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Dinakaran
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கென்று என்ன டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதற்குள் தான் விளையாட முடியும். திரைக்கதை அமைப்பும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான். பயமுறுத்தும் கேமரா கோணங்களும், காட்சி அமைப்புகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஸோ, இதற்குள் இருந்தபடிதான் கபடியோ, கிரிக்கெட்டோ ஆட முடியும்.
The Conjuring
அப்படி இந்த வருடமும் பலர் விளையாடியிருக்கிறார்கள். அதில் முதன்மையானது ‘The Conjuring’. லோ பட்ஜெட். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ஒட்டுமொத்தமான எதிர்பார்ப்பையும் நிறைவேற்றிய படம். இதற்கு ஒரே உதாரணம், தமிழகம் தான்.தொடக்கத்தில் ஆங்கிலத்தில்தான் இந்தப் படம் ரிலீசானது. அதுவும் சில திரையரங்குகளில் தான். ஆனால், கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு மடமடவென்று தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். இதே நிலைதான் உலகெங்கும் என்பதுதான் இந்தப் படத்தின் பலம்.
Dark Skies
புறநகர் பகுதியில் ஒரு குடும்பம் வசிக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை. யார் கண் பட்டதோ எல்லாமே தலைகீழாகிறது. ஆவி ஒன்று அவர்களை பழிவாங்க முற்படுகிறது. இதிலிருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள் என்பதுதான் ‘Dark Skies’.Dark Circles
நரகமயமாகிவிட்ட நகரத்தில் தங்கள் குழந்தையை வளர்க்க விரும்பாத இளம் தம்பதி, ஒதுக்குப்புறமான இடத்துக்கு வாழ வருகிறது. வந்த இடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் ‘Dark Circles’.Insidious: Chapter 2
தங்கள் பால்யகாலம் எப்படி ஆன்மிகத்துடனும், ஆவிகளுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதிலிருந்து மீள முயலும் இளைஞர்களின் போராட்டம்தான் ‘Insidious: Chapter 2’.கதையாக பார்க்கும்போது எல்லாமே ஒன்று போல் தெரியும். ஹாரர் ஜானர் அப்படி. ஆனால், இந்த ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பார்க்கும்போதுதான் திரைக்கதைக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள், காட்சிகளை எப்படி விவரித்திருக்கிறார்கள், அதன் வழியாக ரசிகனின் நாடி நரம்புகளில் எப்படி அச்சத்தை ஊட்டியிருக்கிறார்கள் என்பது புரியும்.
பாருங்கள்... பயப்படுங்கள்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Dinakaran
0 comments:
Post a Comment