அவகோடா பழம் சத்தானதும் சுவையானதுமாகும். இதில் நார்ச்சத்தும், இரத்தத்தில் LDL கொலஸ்ட்ரோல் அளவைக் குறைக்க உதவும். இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல காலை நேர உணவாக கூட இதனை எடுத்துக்கொள்ளலாம். எல்லா பழக்கடைகளிலும், சூப்பர் மார்கெட்களிலும் இது கிடைக்கிறது.
சரி.. சரி இதனை கொண்டு அவகோடா சப்பாத்தி செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.
Thanks : Maalaimalar
சரி.. சரி இதனை கொண்டு அவகோடா சப்பாத்தி செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :-
அவகோடா பழம் - 6,
கோதுமை மாவு - 1 கப்,
சீரகத்தூள் - அரை ஸ்பூன்,
பச்சை மிளகாய் - சிறிதளவு,
கொத்துமல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:-
- ஒரு பாத்திரத்தில் அவகோடா 2 ஆக கட் செய்து அதன் தோல்,கொட்டையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் அவகோடா பழத்தின் சதை, கோதுமை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர் இந்த மாவை சப்பாத்திகளா உருட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- சுவையான, சத்தான அவகோடா சப்பாத்தி ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
Thanks : Maalaimalar
0 comments:
Post a Comment