2013–ல் கலக்கிய நடிகைகள்

2013–ல் புதுமுக நடிகைகள் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் அவர்கள் காணாமல் போயினர். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.

நயன்தாரா

நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் கதாநாயகியாகவே இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் ரசிகர்கள் அவரை ஒதுக்கவில்லை.

ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன.


காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலை கடந்த வருடம் ரிலீசான ‘துப்பாக்கி’ படம் முன்னணி நடிகையாக்கியது. ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யுடன் மீண்டும் ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.


அனுஷ்கா

அனுஷ்கா நடித்து இந்த வருடம் ‘அலெக்ஸ் பாண்டியன்‘, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ படங்கள் வந்தன. இதில் ‘சிங்கம் 2’ அதிக வசூல் குவித்தது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’, பாஹுபலி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை.

ஹன்சிகா

ஹன்சிகாவுக்கு இந்த வருடம் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘சிங்கம் 2’ படங்கள் கைகொடுத்தன.
கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படமும் இந்த மாதத்திலேயே ரிலீசாக உள்ளது. வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான் கராத்தே, உயிரே உயிரே என நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

அமலாபால்

அமலாபாலுக்கு தலைவாவில் விஜய் ஜோடியாகும் வாய்ப்பு கிட்டியது. ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் நடிக்கிறார்.

திரிஷா

திரிஷாவுக்கு ‘சமர்’ படமும் டாப்சிக்கு ஆரம்பம் படமும் இவ்வருடம் வந்தன. ஜீவாவுடன் திரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படம் இந்த மாதத்திலேயே வருகிறது. ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்திலும் நடித்து வருகிறார்.

தமன்னா, பிரியாமணி, சமந்தா போன்றோருக்கு தமிழில் இந்த வருடம் படங்கள் இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top