சார் ஒச்சாரு (2013) தெலுங்கு பட விமர்சனம்

தெலுங்கில் சென்ற வருடம் இறுதியில் ரிலீசாகி ஹிட்டான படம் ‘சார் ஒச்சாரு’. ரவிதேஜா ஹீரோ, காஜல் அகர்வால், ரிச்சா கங்கோபாத்யாய இருவரும் அவருக்கு ஜோடி. பரசுராம் என்பர் டைரக்ட் செய்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக். ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த முக்கோண காதல் கதை.

இப்படம் ‘சார் வந்தாரா’ என்று பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு திரைக்கு வந்துள்ளது.

படத்தோட கதை என்னனா ...

வழக்கமான சினிமா பாணியில், காதல் ஜோடியை துரத்திக்கொண்டு ஒரு கும்பல் வருகிறது. ஆனால் சற்று வித்தியாசமாக இதில், நாயகனுக்குப் பதில், நாயகனின் நண்பனும் அவனது காதலியும் அந்த கும்பலிடம் சிக்குகிறார்கள். பெண்ணின் மாமா சில ரவுடிகள் மூலம் விரட்டி தாக்கும்போது, உள்ளே புகுந்து நாயகன் ரவிதேஜா பின்னி எடுக்கிறார். பின்னர் நண்பனின் காதலை சேர்த்து வைக்கும் ரவிதேஜா, அவர்களுக்கு திருமணமும் செய்து வைக்கிறார்.

பிறகு வெளிநாடு செல்லும் அவர் அங்குள்ள இன்னொரு நண்பனின் காதலையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். அப்போது நண்பன் காதலிக்கும் பெண்ணின் தோழியான காஜல் அகர்வால் அவரை பார்க்கிறார். கண்டதும் காதல் என்ற இலக்கணத்தின் மீது நம்பிக்கை இல்லாத காஜலுக்கு, ரவிதேஜாவை பார்த்ததும் ஏனோ மனதிற்குள் பட்டாம் பூச்சி பறக்கிறது. காதல் வயப்பட்ட காஜல், ரவிதேஜாவை தன் வசம் ஈர்க்க முயற்சிக்கிறார். ஆனால் ரவிதேஜாவோ அவரை கேலி, கிண்டல் செய்து அவருக்கு நோஸ் கட் செய்கிறார்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ரவிதேஜாவும், காஜல் அகர்வாலும் இந்தியாவுக்கு வர நேரிடுகிறது. இருவரும் ஒன்றாகவே விமானத்தில் வருகிறார்கள். இந்தியாவுக்கு சென்றடைவதற்கு முன்னதாகவே ரவிதேஜாவை தன்னை காதலிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காஜல் பயணிக்கிறார்.

பல வழிகளில் காஜல் முயற்சி எடுத்து தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ரவிதேஜா அதை மறுத்து விடுகிறார். ஏன் என்று காஜல் கேட்கும் பொழுது ‘நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். என் மனைவி ரிச்சாவை விவாகரத்து செய்யத்தான் நான் இந்தியாவுக்கு வருகிறேன்’ என்று கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடையும் காஜல், மிகவும் வருத்தமடைகிறார். இருப்பினும் அவரிடம் பேசிக் கொண்டு அவருடைய திருமணத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

இறுதியில் காஜலின் காதல் ஜெயித்ததா? ரிச்சாவை ரவிதேஜா விவாகரத்து செய்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ரவிதேஜா vs காஜல் அகர்வால்

நாயகன் ரவிதேஜா, ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் என கலக்குகிறார். நாயகி காஜல் அகர்வால் அழகு பதுமை. நடிப்பதற்கு அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக ரவிதேஜாவிடம் தன் காதலை சொல்ல முயற்சிக்கும் போதும் நான் ரொம்ப அழகு என்று சீன் போடும் காட்சிகளிலும் காஜல் அருமையாக நடித்திருக்கிறார்.

ரிச்சா

வெகுளித்தனமாகவும் படு சுட்டியாகவும் காஜலின் கதாபாத்திரம் அமைந்து காட்சிகளுக்கு மெருகேற்ற... மற்றொரு கதாநாயகி ரிச்சாவோ கவர்ச்சியிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார். மீண்டும் இவரை தமிழ் படங்களில் பார்க்கலாம் என நம்புவோம்.


தேவிஸ்ரீ பிரசாத்

படத்தில் பாடல் வரிகளை விட தேவிஸ்ரீ பிரசாத்தின் இசைதான் மேலோங்கி இருக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். படத்தின் பாடல் காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒளிப்பதிவு செய்த விதம் அருமை.

இயக்குனர் பரசுராம்

கல்யாணத்திற்கு முன் உள்ள காதலையும், கல்யாணத்திற்கு பின் உள்ள காதலையும் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பரசுராம். முன்பாதியில் தேவையற்ற சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். காதல் பெரியதா? கல்யாணம் பெரியதா? என்ற திரைக்கதையை ரசிக்கும்படியாக எடுத்திருக்கிறார்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் "சார் ஒச்சாரு" - சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top