அமைதி படை படம் பார்த்திருப்பீர்கள் என்றால் சற்றேண்டு நினைவுக்கு வருவது அம்மாவாசை தாயம்மாவுக்கு "அல்வா" தரும் சம்பவம். இந்த கதை நமக்கு எதற்கு...
இன்று ஆபீசில், எனது நண்பி பிரெட் அல்வா செய்து எடுத்து வந்து தந்தாள். சும்மா செம taste!. சும்மா நெய் சொட்ட... சொட்ட ...நானே பாதி பாக்ஸ் காலிசெய்தேன். சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் இந்த "பிரெட் அல்வா" செய்வது எப்படி என்று தான் பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள் :
செய்முறை :
குறிப்பு :-
ஒரு வேண்டுகோள்...!
இன்று ஆபீசில், எனது நண்பி பிரெட் அல்வா செய்து எடுத்து வந்து தந்தாள். சும்மா செம taste!. சும்மா நெய் சொட்ட... சொட்ட ...நானே பாதி பாக்ஸ் காலிசெய்தேன். சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் இந்த "பிரெட் அல்வா" செய்வது எப்படி என்று தான் பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள் :
நெய் - 1 கப்
பிரெட் - 1 பக்கெட்
ஏலக்காய் - 6
பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை :
- பிரெட்டின் நான்கு ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு மீதி இருக்கும் பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்..
- முக்கால் கப் நெய்யை எடுத்து வாணலியில் சூடுசெய்யவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் பிரெட்டை செய்தது பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
- ஏலக்காய் எடுத்து ஓன்று இரண்டாக உடைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- பாலை சூடுசெய்து அதனுடன் சர்க்கரை செய்தது நன்கு கலக்குங்கள். பால் நன்கு கொதித்து பாகு நிலை வரும் வரை சூடு செய்யுங்கள்.
- அதனுடன் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். மிதமான சூட்டில் இதனை செய்யவேண்டும்.
- இந்த பால் பாகுடன் கொஞ்சம் பாதாம் + முந்திரி சேர்த்து வறுத்து வைத்த பிரெட்டை கலந்து கிளறுங்கள்.
- மீதம் இருக்கும் நெய்யை இதனுடன் சேர்த்து கிளறுங்கள். மிதமான சூட்டில் இந்த கலவையை நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறுங்கள்.
- அல்வா பதம் வந்தவுடன் அதனை இறக்கி வைத்து, அதன் மேல் பாதாம் + முந்திரி கொண்டு அலங்காரம் செய்யவும். இதனை உடனேவும் பரிமாறலாம் அல்லது பிரிஜில் வைத்தும் பரிமாறலாம்.
குறிப்பு :-
சூடான நிலையிலும் சரி ஆறின நிலையிலும் இந்த பிரெட் அல்வா மிக மிக சுவையாக இருக்கும்.
ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!
செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
3 comments:
yaaruuku kodukkalam yendru ninaikireeen
நான் தரலாம்னு இருந்தேன். ஆனா ..!
Why da 1 Bucket Bread venuma? Un vaayila kottava or Un thalaila kottavaa da?
Post a Comment