குட்டி - திரைவிமர்சனம்

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் ஆரியா. அதன் தமிழாக்கம் தான் இந்த குட்டி. உண்மையான காதல் வெற்றிபெறும் என்ற ஒரு வரி கதை தான் படத்தின் கரு. அதன் திரைவிமர்சனம் பற்றி தான் இங்கே நாம் பார்க்க இருகிறோம்.



படத்தோட கதை என்னனா ...

ஸ்ரேயா ஒரு கல்லுரி மாணவி. அவளின் அழகில் மயங்கிய பலரும் காதலை சொல்லி தோற்றுவிட, அதே கல்லுரி மாணவன் சமீர். தான் காணும் அழகான பெண்களை விருப்பும் பணக்கார + அரசியல்வாதி ராதாரவியின் மகன். அவனும் அதே கல்லூரியில் படிக்கிறான். ஸ்ரேயாவை கண்டதும் பிடித்துவிடுகிறது. தன் காதலை சொல்ல - அவள் மறுக்க - கல்லுரிமீது ஏறி கீலேவிழுந்துவிடுவேன் என மிரட்டி ஒருவழியாக அவள் சம்மதம் சொல்லு நேரத்தில் -



நம்ப ஹீரோ தனுஷ் என்ட்ரி. தனுஷுக்கும் இவளை பார்த்ததும் பிடித்துவிடுகிறது. இவள் சமீர்-இன் காதலி என்று தெரிந்தும் விடாமல் அவளிடம் தன் காதலை வித்தியாசமான முறையில் தினமும் சொல்லிவர - ஒரு கட்டத்தில், இவனின் செயலை பார்த்து சமீர் கோபம் வந்து தன் தந்தையின் உதவியை நாட - வின்சென்ட் செல்வா மூலம் தனுசை அடித்து போட்டுவிட்டு செல்கிறான்.

பிழைத்து வந்து மீண்டும் தன் காதலை வெளிபடுத்த, சமீரிடம் "இருவரும் அவளை காதலிக்கிறோம். அவளுக்கு யார்மீதான காதல் உண்மையானதா இருக்கோ அவர்களுக்கு அவள் கிடைப்பாள்" என்று சொல்லிவிட்டு செல்கிறான். இருந்தும் பல நேரங்களின் சமீர் தோற்கிறான். அதனால் ஆவேசப்படும் அவன், ஒரு புகைபடம்மூலம் ஷிரேயா மனதில் தனுஷ் பற்றிய எண்ணம் மாறுகிறது.

ஒருநாள், அமீர் தன் தந்தையிடம் சிரேயாவை அறிமுகம் செய்துவைத்து தன் காதல் பற்றியும் அவரிடம் சொல்ல, அவர் மறுக்க - வீட்டு காவலில் சமீர். தனுஷ் சமீரை அங்கிருந்து வெளிக்கொண்டுவந்து - அவர்களை வின்சென்ட் ஆட்கள் தொரத்த - ஷிரேயாவுடன் மூவரும் ரயில் மூலம் தப்பித்து வந்து தனுஷின் சொந்த ஊருக்கு வர -

அடுத்தநாள், சமீர் இவளிடம் சொல்லாமல் சென்றுவிட - தனுஷின் நிலைமையை - அவனின் உதவியை - காதலை உணர ஆரம்பிக்கிறாள். அதனை சொல்லு நேரத்தில், சமீர் தன் தந்தை சம்மதத்துடன் அவளை திருமணம்செய்ய அழைக்க - குழம்பிய நிலையில் சிரேயா அவர்களுடன் செல்கிறாள். பிறகு ஷிரேயா சமீர் திருமணம் எப்படி நடக்குது ? தனுசின் நிலை என்ன ?மீதியை வெண்திரையில் காண்க.



படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

கேமெரா மிக அழகா படம் பிடித்திருக்கு. சபாஸ். பாலு சார்.

ஜவகர் - தன் முந்தைய 'யாரடி நீ மோகினி' படத்தில் வைத்த அதே போர்முலாவை தான் பயன்படுத்தி இயக்கிருக்கார். முதல் பாதி ஓகே ராகம் + டைமிங் காமெடி படத்துக்கு கூடுதல் பலம். இரண்டாம் பாதி இழுவை.

தனுசின் நடிப்பு அருமை. சில இடங்களின் தன்னையே தாழ்த்தி பேசி நடித்திருக்கிறார். வழக்கமான அறிமுக பாடலை தவிர்த்திருக்கலாம். படத்தில் ஒட்டவில்லை. இறுதி காட்சிகளால் இவரின் நடிப்பு அருமை.

சிரேயாவின் தோழியாக வரும் மேக்னா நாயுடு சும்மா கும்முன்னு இருங்காங்க. பேசாமல் இவளை ஹீரோயினா போட்டிருக்கலாம்.

இசை : தேவி ஸ்ரீ பிரசாத் - சச்சின் படத்தில் இடம்பெற்ற அதே பின்னணி இசை பட இடங்களில் ...+ ஏற்கனவே கேட்ட மேட்டில் பாடல் என்பதால் அவை சுமார் ராகம். "கண்ணு ரெண்டும் ரங்கா... " & "யாரோ என நெஞ்சை ..." என்ற இரு பாடல் முனுமுனுக்கும் ரகம்.



சிரேயா - டயலாக் கொஞ்சம் கம்மி தான். அவளின் முகபாவனை அருமை. கொஞ்சம் அழகாக தன் தெரியறாங்க. இவளின் டிரஸ் + மேகப் ஒரு பிளஸ் பாயிண்ட்.

மயில்சாமி + ஆர்த்தி பங்கு அருமை.

குட்டி - கல்லூரி காதல். ஒருமுறை பார்க்கலாம் முடிந்தால்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



19 comments:

angel said...

nice review

angel said...

ohh i m the first

Kolipaiyan said...

Thanks Angel. Happy Pongal.

Arun said...

ஓகே. நம் பட்டியலில் இருந்து ஒரு படம் drop. நல்ல விமர்சனம்.

Kolipaiyan said...

அருண் - வருகைக்கு நன்றி

puduvaisiva said...

Hi kozhi Happy pongal

I saw that movie in Telugu very nice...

Kolipaiyan said...

நன்றி புதுவை சிவா. உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!

வெற்றி said...

அருமையான விமர்சனம்..

நீர்ப்புலி said...

கண்டேன் காதலை மாதிரி இருக்கு...

-தினா

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...........

Karthik said...

Innumaaa daaa unna intha ulagam nambuthu...
Ayyo Kadavulee...
Dai Kozhi idhellaaam over daa........

Karthik said...

1000 la 1 eppo daaaa vimarsanam. Adhaiyum padichu tholaikkanume.. nee kalakkudaaa maaaple..

uma ramesh said...

sreya looking so sweeth

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி தினா. கண்டேன் காதலை இதனுடன் ஒப்பிட முடியாது. அவை இரண்டும் இரண்டு வித்தியாசமான கதைகலன் கொண்டவை.

Kolipaiyan said...

வெற்றி - வருகைக்கு மிக்க நன்றிகள்.

Kolipaiyan said...

நன்றி கார்த்தி. கோழியின் 'தல பொங்கல்' வாழ்த்துக்கள்.

Kolipaiyan said...

உமா, நீங்கள் சொன்னது உண்மை. சமீப போடங்களில் சிரேயாவின் முக வசீகரம் இந்த படத்தில் இருப்பது போல் இல்லை. மிக அழகாக இருக்கிறார்.

இன்னும் சொல்லபோனால், இவர் கோபப்படும் (அ) அழும் காட்சிகளை கழுத்து நரம்பு புடைக்க நடித்திருப்பார். அதிகம் பேசாமல் தன் நடிப்பால் நம்மை கவர்கிறார் என்றேசொல்லலாம்.

உமா ரமேஷ் - உங்களின் வருக்கைக்கும் உங்களின் கருத்துரைக்கும் நன்றி.

Satya Santhose said...

College part is OK in the first half movie.

Kolipaiyan said...

After longdays, I have seen you here. Thanks Satya.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top