கோவா - திரைப்படபாடல் விமர்சனம்

கோவா. பேர கேட்டாவே சட்டுன்னு நம்ப மனசுல வருவது கண்ணுக்கு குளுற்சியா தெரியும் அதன் கடற்கரை அழகும் துள்ளி திரியும் பட்டாம்பூச்சி பெண்களும் அவர்களின் கிளுகிளுப்பும் தான். அந்த இடத்துல நம்ப சென்னை-28 பசங்க போயிசேர்ந்தால் எப்படி இருக்கும்... இரே கூத்தும் கும்மாளமும் தான்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட்பிரபு இயக்கிய "கோவா" திரைப்பட பாடல்களை நேற்று கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பற்றி தான் இந்த பதிவு.



1. பண்ணபுரம். ஒரு அழகான ஊரு. புழுதி மனமும் தெய்வீக மனம் வீசும் வெகுளி தனமான மக்களின் திருவிழா நேரத்தில் சந்தோஷ நிமிடங்களில் நம்ப ஹீரோ குடும்பம் பாடும் பாடல் இது.

இளையராஜா இசை குடுபத்தின் இசை வாரிசுகள் சேர்ந்து பாடி கலக்கியிருக்கும் ஒரு பாடல் தான் பின்னே வருவது. 90-களில் வந்த இளையராஜா பாடலை நினைவு படுத்துவது தவிற்க்க முடியா... பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரிணி, ப்ரேம்கி அமரன், யுவன் ஷங்கர் ராஜா.
ஏழேழு தலை முறைக்கும்
எங்க சாமி பக்கபலம் எடுத்து வந்தோம் ...

2. ராஜா பாடல் : இளையராஜா பாடும் மென்மையான சோககீதம் வாசிக்கும் பாடல் இது
ஒத்துமையா வாழ்ந்தா உறுத்தும் நாலுபேருக்கு
உருக்குளன்சு பார்த்தா அப்ப சந்தோசம் தான் ஊருக்கு

3. திருவிழா பாடல் : திருவிழா நேரத்தில் நண்பர்கள் சேர்ந்தால் திருவிழா கலை கட்டும். S.B.P.சரணும் யுகேந்திரனும் இணைந்து பாடிய கிராமத்து மனம் கமழும் திருவிழா பாடல்.
அடிடா நையாண்டிய தெற்கு திசை அதிர
எக்குதிசை உயர ஊரு ...

4. காதல் பாடல் : தன் காதல் நினைவுகளை விவரிக்கும் பாடல் இது. பாடியவர்கள் : அஜீஸ் & ஆண்ட்ரியா
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது ...

5.கவர்ச்சி பாடல் : பீச் + இளமை + கவர்ச்சி ததும்பும் பாடல் இது. பாடியவர்கள் : கிருஷ், ரஞ்சித், தன்வி, சுசித்ரா, சயனக் ஷோவ்டிமே, பாவ் புண்டி
கோவா அழகை ரசி
ஆகா பூசி ...

6. நட்பு பாடல் : மூன்று நண்பர்கள் பாடும் பாடல் போல இருக்கு. இளையராஜா, SBP, சித்ரா பாடிய அந்த பாடல் வரிகள் இதோ
வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி ....

7. யுவா பாடல் : யுவாவின் தனி முத்திரை பாடல் இது. மெல்லிய சோக பாடல்.
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது...

8. ஊடல் பாடல் : பென்னி + மம்தா இணைந்து பாடிய பாடல்.
இடை வழி ஒருமோதல் செய்
இடை வழி ஒரு ஊடல் செய்...

9. ரீமிக்ஸ் பாடல் :
கோவா கடற்கரையின் அழகிய வனப்பை காட்டும் போது ஒளிக்கும் பாடல் போல இருக்கு.
டூபிஸ் எல்லாம் தம்மடிக்கிற ஊர்தானே கோவா
டூபிஸ் எல்லாம் சுவிம்அடிக்கிற ஊர்தானே கோவா

பாடல் கேட்டும் போது சில பாடல்கள் கிராமத்து சூழலும் கோவாவின் அழகையும் பிரதிபளிபதாகவே அமைந்துள்ளது. முதல் முறை கேட்கும் போதே பாடல்கள் மனசுல நிக்குது.

ஆகா மொத்தம் இளையராஜா குடுபத்தில் கங்கை அமரன் மட்டும் இந்த "கோவா" படத்தில் பாடாதவர். ராஜா குடும்பமே சேர்ந்து பாடி கலக்கியிருக்காங்க.

"கோவா" பாடல் வெற்றி போலவே படமும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

பாடல்களை பதிவிறக்கம் செய்ய : Download

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்டா போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



6 comments:

seemajillary said...

waiting for this movie...

Raju said...

ரைட்டு அண்ணே.

சினிமா புலவன் said...

டவுன்லோடு செஞ்சி வச்சிருக்கேன்..இன்னும் கேக்கல

Kolipaiyan said...

சினிமா புலவன்,
என் வலை தளத்திற்கு வந்ததற்கு நன்றிகள். நல்ல டைம் பாஸ் பாடல்கள். சீக்கிரம் கேளுங்கள் நண்பரே.

Kolipaiyan said...

ராஜு - என் வலை தளத்திற்கு வந்ததற்கு நன்றிகள்.

Anonymous said...

2 songs from illaiyaraja... music panratha vittitu paada vanthudaaraa ?

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top