ஈரம் சொட்ட சொட்ட விமர்சனம்

ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, காதல், வெயில் வரிசையில் இப்பொழுது ஈரம்.

'ஈரம்' பட இயக்குனர் அறிவழகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சிறப்பான படம் பார்த்த திருப்தி எனக்கு. திறமைசாலிகலை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு தரும் டைரக்டர் சங்கர் அவர்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.

இனி கதைக்கு வருவோம்...

ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் மூணு சம்பவங்கள்...

நாயகி சிந்துமேனன் குடியிருக்கும் ஃப்ளாட்டிலிருந்து வழிகிற நீர், அந்த தளத்தை ஈரமாக்கி, பைப் வழிய... வாட்ச்மேன் பார்க்க... ஃப்ளாட்டிர்கு வந்து கதவை தட்டி...உடைத்து உள்ளே சென்று பார்த்தால் ...பிணமாக அவள்.

சிந்துமேனன் குடியிருக்கும் எதிர் ஃப்ளாட்டில் குடியிருக்கும் கல்யாணியம்மா, சமையல் பாத்திரம் கழுவ பைப்பைத் திறக்கிறார்... தண்ணீர் வரவில்லை. மாவு அரைக்க கிரைண்டரைப் போடுகிறார்... மின்சாரம் இல்லை... திடீரென்று தொலைபேசி மணி ஒலிக்கிறது... ஓடி சென்று போனை எடுத்து, பேசிக்கொண்டிருக்கும் போது ... தண்ணீர் கொட்டி... நிரம்பி வழிந்து ...சற்று நேரத்தில்... பிணமாக அவள்.

ஃப்ளாட்டில், வாக்கிங் செல்லும் தியாகராஜன்மேல், திடீரென காற்று வீசி... மழைத்துளி விழுந்தது ... குடையைத் திறக்க.... குடை, அவர் கையை விட்டுப் பறந்து... மீண்டும் ... அவரை நோக்கி.... பிணமாக அவர்.

இந்த சம்பவங்களை விசாரிக்க வரும் நம்ப கதாநாயகன், இந்த கொலைகளை செய்யும் நபரை பிடிக்க... அந்த தியேடர் வந்து.. டாய்லெட்டில் அவனை பயங்கரமா தாக்கி ...பிணமாக அவன். தாக்குவது யாரென்று பார்த்தால்.... ?!

இறுதியில் யார் இத்தனை செய்தது...? காரணம் என்ன ...? தியடரில் சென்று இந்த '?' விடையை காணலாம்.

  • ஆதி - நம்ப ஹீரோ. அசிஸ்டெண்ட் கமிஷனர். நடிப்பில் கலக்குகிறார். இவர் செய்யும் காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கு.
  • சிந்து மேனன் , சரண்யா மோகன் - சரியான பாத்திர படைப்புகள். இருவரும் கண்களிலேயே பல இடங்களில் நடித்துள்ளனர். சபாஸ்! சிந்து மேனன் - சந்தேகத்தின் பேரில் கொல்லப்படும்போது, மனசைப் பதற வைக்கிறார்
  • நந்தா - மனைவியை சந்தேகப்படுற சைக்கோவா நடிச்சிருக்காரு. இரண்டாம் பாதியில் இவர்தான் ஹீரோ.
  • ஸ்ரீநாத் - நந்தாவின் நண்பர். ஒரு விபத்துக்கு பின்னர், வீட்டுக்கு வரும் அவர், அவர் குழந்தை பண்ணும் சேட்டையை பார்த்து ...


  • மனோஜ் - கேமரா. கண்டிப்பா பாராட்டியே தீரனும். என்னமா ஒளிப்பதிவு செய்திருங்காங்க. சபாஸ். ஹோலிவூட் படம் மாதிரி ஒரு நேர்த்தி.
  • இசை - தமன் - படத்துக்கு பெரிய பலமா இருக்கு. பல இடங்களில் சாரலாய் நாமும் நனைகிறோம் தியேடரில்.
  • ஒவொரு காட்சியிலும் எதாவது ஒரு வகைளில் மழை/சாரல்/தண்ணீரையும் சேர்த்து நடிக்க வைத்து...புதுவிதமாக கதையை சொன்ன இயக்குனர் அறிவழகன் பாராட்டுக்குரியவர்.(இத்தனை பார்க்கும் போது சச்சின் படத்தில் வரும் பனி/புகை படர்ந்த இடங்களாக காட்டியது தான் நினைவுக்கு வந்தது)
  • டுயட் இல்லை... ரத்தம் இல்லை... ஆ..வீல்னு... சப்தம் இல்லை... காமடி இல்லை ... ஆனால் படம் ஒவ்வரு நிமிடமும் திகிலுடன்... மிரட்டியிருகார்கள்.
'ஈரம்' - ஒரு சிறப்பான த்ரில்லர் கதை.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top