இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

ஆக்ரோஷமான கதாநாயகன், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே படத்தில் ஒரு கதாநாயகி என இருந்த தமிழ் சினிமாவின் போக்கு சமீப காலமாக சற்று அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது.

வழக்கமான கதை, கதைக்களம், காட்சிகளை மறுத்து புது ரூட்டில் பயணிக்கும் இளைஞர்களை தமிழ் சினிமாவில் காணக்கூடியதாக உள்ளது.

தமிழில் தயாராகும் படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களின் படங்கள் மிக சொற்பம்தான். அட்டகத்தி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் சூதுகவ்வும், யாருடா மகேஷ் படங்கள் தயாராகியுள்ளன. அதே ப்ளேவரில் தயாராகும் இன்னொரு படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

விஜய் சேதுபதி தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். "சூது கவ்வும்" வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் 'ரௌத்திரம்' இயக்குனர் கோகுல் இயக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா".

நம் அன்றாட வாழ்வில் நிகழும் நகைச்சுவையின் பின் பலம் அதைவிட நகைச்சுவையானது. அதை முழு நீள நகைச்சுவையாக முன்னெடுக்கிறது இப்படம் என்றார் கோகுல்.

விஜய் சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுரம் ஸ்வாதியும், அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் நடிக்கிறார்.

'சுமார் மூஞ்சி குமார்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கும் பசுபதியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதாம்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைக்கிறார். நடனம் ராஜூசுந்தரம். மதன்கார்கி வசனம் எழுதுகிறார்.சென்னையின் இதயப்பகுதியான ஜெமினி பாலத்தின் கீழே, குதிரை பந்தயத்தை தமிழகத்தில் ஒழித்ததன் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் குதிரை சிலையில் நாயகன் ஹாயாக படுத்திருப்பது போன்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கே புன்னகையை வரவழைக்கிறது.

பாதி ஊரை கையாலே காலி செய்யும் சூப்பர் ஹீரோக்களுக்கு நடுவில் இப்படிப்பட்ட படங்கள் அமைந்தால் அது ஆரோக்கியமானதாக அமையும் என்பதே எனது(பலரின்) கருத்து.

இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி

இந்தப் படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களில் இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது இந்த டிரைலர்.

இரண்டு நாட்களில் இத்தனை ஹிட்ஸ்களை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா டிரைலர் அள்ளியிருபபது குறித்த செய்தியைக் கேட்ட விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம். இவரது படங்களில் இரண்டே நாளில் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்ட டிரைலர் இதுதான் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணமாம்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

இப்படத்தின் First Look Poster-களே வித்தியாசமாக இருந்த நேரத்தில், படத்தின் Teaser மற்றும் Pray Song வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது.Pray Song பாடல் வரிகள்:

ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டுப் போயிட்டா
அந்தப் பொண்ண வெறுப்பு ஏத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் PRAY பண்ணுங்கடா
அவ PARENTSக்காக PRAY பண்ணுங்க
ஏன், அவ புருஷன், புள்ளக்குட்டிங்களுக்கும் சேர்த்தே PRAY பண்ணுங்கடா… PRAY பண்ணுங்க…

ஏய் பொண்ணே உனக்காகத்தான்… தினம் PRAY பண்ணுவேன்…
ஓம் ஸ்வாகா, மாகா, உங்கக்கா மக்கா...
பொண்ணே உனக்காகத்தான் தினம் PRAY பண்ணுவேன்…

உன் செல்போனுல பேலன்ஸ் மறைஞ்சுடும்டி...
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நிறைஞ்சிடும்டி...
உன் ஏடிஎம் கார்ட் இரண்டும் தொலைஞ்சிடும்டி...
அது கிடைச்சாலும் PIN NUMBER மறந்திட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

காலேஜ் பசங்கல்லாம் AUNTYன்னு அழைக்க வேண்டி PRAY பண்ணுவேன்...
DRAINAGE குழில நீ விழுந்து குளிக்க தோண்டி PRAY பண்ணுவேன்...
தூங்கப் போனா தூங்க முடியாமத்தான் கொசு புடுங்கிட PRAY பண்ணுவேன்...
அதையும் மீறி நீயும் தூங்கப் போனா, பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

உன் பெஸ்ட் FRIENDக்கு அழகான புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
வழுக்கைத் தலயோட உனக்கொரு புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துப் போட நான் சத்தியமா PRAY பண்ணுவேன்...
அந்தப் பத்தும் லவ் பண்ணாமலே என்னைப் போல மாப்பிள்ளைய நீயும் தேட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… அங்கு PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

நீ BIKEல போனா போலீஸ் நிறுத்தணும்டி...
நீ ஜாகிங் போனா நாய் துரத்துணும்டி...
உன் GIRL FRIENDS எல்லாம் பேயா மாறணும்டி...
உன் BOY FRIENDS எல்லாம் GAY-ஆ மாறத்தான் PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!
Thanks : Yarlminnal0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top