வைவேர்ன் (Wyvern) - விமர்சனம்

முதன் முறையாக ஹோலிவூட் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுது உட்கார்ந்தேன். ஏனோ தமிழ் படத்திற்கு விமர்சனம் எழுவது போல ஈஸியா எழுதமுடியல. ஹோலிவூட் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் ஏனைய மூத்த அண்ணன்மார்களுக்கு என் வாழ்த்துகள். என் விமர்சனத்தை படித்துவிட்டு நீங்கள் விமர்சனம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்....

டிராகன் போன்ற பட வரிசையில் இந்த வைவேர்ன் - படமும் ஒரு வகை சயின்ஸ் படம். இயக்கியது ஸ்டீவன் (Steven). வழக்கமா டிராகன்னாவே நெருப்பை கக்கும் மாதிரியான படத்தை பார்த்த நமக்கு (?) இந்த படம் ஒரு வித்தியாசமான படமே. நீங்க வாளுடன் பறக்கும் டிராகன் தான் இந்த வைவேர்ன்.

இனி கதைக்கு வருவோம்....

சூரியன் தலை காட்ட வெட்கப்படும் அலாஸ்காவின் ஒரு சிறு நகரம் பீவர் மில்ஸ் (Beaver Mills). பனி பாறைகள் உடைந்து விழும்போது, அதில் இருந்த டிராகனின் கண்...அப்போது ஆற்றங்கரையில் தூண்டிலில் மீன் பிடித்துகொண்டிருங்கும் ஒருவர் அந்த இடத்தில் எதோ ஒருவித அசம்பாவிதம் நடப்பது போல உணரும் முன்னர்... டிராகன் அவரை சுவாகா செய்துவிடுகிறது. பின்னர் படம் சூடு பிடிக்கிறது.

அதன் பின்னர் அந்த டிராகன் பற்றிய செய்திகள் அந்த நகருக்கு பரவ... டிராகன் பீவர் நகருக்கு அடிக்கடி வந்து நகர மக்களை கொல்கிறது. அதனை எப்படி சாமளித்தார்கள் ? டிராகன் என்ன ஆகிறது ? என்பது தன் கதை.

அலாஸ்காவின் அழகை மிக அழகாக பதிவு செய்திருப்பது அழகு.

படத்தின் இறுதி காட்சிகளை பயங்கர விறுவிறுப்பாக இருக்கு. போலீஸ் ஆபீஸ் ஒருவர் டிராகன்னிடம் மாட்டும் காட்சிகள் அற்புதம்.


  • நிக் சின்ளுந்து(Nick Chinlund) - ஹீரோ. படம் முழுவது இவரது நடிப்பு அருமை. படந்தின் இறுதியில் இவர் அந்த டிராகன்னிடம் இருந்து எஸ்கேப் ஆகும் காட்சியில் பின்னியிருபார் நடிப்பை.
  • பார்ரி கார்பின்(Barry Corbin) - கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு. டிராகனை அழிக்க இவர் செய்யும் முயற்சிகள் அருமை.
  • எரின் கர்ப்லுக் (Erin Karpluk) - படத்தில் அழகான ராட்சசி. இவருன் தம் பங்குக்கு சிறப்பான அழகை காட்டி நடித்துள்ளார்.
  • எலைன் மில்ஸ் (Elaine Miles) - ஒரு பெண் போலீஸ். இவரது உருவமும் அவர் வேளையில் இருக்கும் போது நிறைய சாப்பிடுவிட்டு காரில் தூங்குவது, டிராகன் இவரை கொள்ளும் காட்சிகளில் மிரட்சி.
வைவேர்ன் - மிரட்டவில்லை. சுமார் ரகம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.1 comments:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top