என்னமோ ஏதோ (2014) – பாடல் விமர்சனம்

கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரபலமான சினிமா பாடல்களைத் தந்து வரும் டீ.இமானின் அடுத்த படம் ‘என்னமோ ஏதோ’. கோ படத்தில் வரும் பாடலின் முதல்வரியே படத்தின் தலைப்பாகி விட்டது. கெளதம் கார்த்திக்கின் இரண்டாவது படம்.


சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் தெலுங்கில் ஹிட்டான "அலா மொதலயிந்தி" என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறது. கௌதம் கார்த்திக் ஹீரோ, அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள். இருவருமே தமிழுக்கு புதுசு என்றாலும் தெலுங்கு தேசத்தில் பாப்புலர் ஆனவர்கள்.

பிரபு, ரேணுகா முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். இப்படத்தை ரவி தியாகராஜன் இயக்குகிறார். இசை: இமான், ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன் பாடல்: மதன் கார்க்கி.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

மொத்தம் 8 பாடல்கள். அதில் 5 பாடல்கள், 2 கரோக்கி, ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் ட்ராக்.பார்க்கலாம் எப்படி பாடல்கள் வந்திருக்கிறதென!

1. மொசலே.. மொசலே.. : தீபக், ஏ.வி.பூஜா.

டி.இமான் கிடார் பயன் படுத்துவது மிகவும் குறைவு. இப்பாடலில் கிடாரும், நாதஸ்வரமும் சேர்ந்து கலக்கியிருக்கிறார் மனுஷன். நல்லதொரு பெப்பி நம்பர். தீபக் குரலும், பூஜாவின் குரலும் வெஸ்ட்டேர்ன் பாடலுக்கு நச் செலெக்‌ஷன்! அக்மார்க் டி.இமான் பாடல்! பாடல் போகப் போகப் பிடிக்கலாம்.

2. முட்டாளாய்.. முட்டாளாய்.. : டி.இமான், மரியா ரா வின்செண்ட்.

ஹிட் ஆகக் கூடிய அதிரடி மெட்டும் மென்இசையும் கலந்த பாடல்.


‘மாற்றங்கள் எனக்குள் ஆராய்கிறேன்.. சத்தியமாய் இது பூமி இல்லை.. ’ என காதல் படுத்தும் பாட்டைபாடலாக்கியிருக்கிறார்கள். பாடலில் டி.இமான் குரல் அவ்வளவு பொருத்தம். மரியா ராப் நச் நச் நச்!! கடவுளே.. கடவுளே.. பாடலை ஞாபகப்படுத்துகிறதே இமான் சார்??

3. நீயென்ன அப்பாட்டக்கரா.. : அனிருத், ஹர்ஷிதா க்ரிஷான்.

சந்தானத்தின் பிரபல வசனமான ‘அப்பாடக்கரை’ வைத்தே ஒரு பாட்டை எழுதிவிட்டார்கள்.

‘ நீ அப்பிடி பண்ணுற.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..?’ என காதலன் காதலி இருவரும் மாத்தி மாத்தி கேட்டுக்கிட்டா அது இப்பாடல்! அனிருத்தின் குரல் செம… கேஷுவலாக பாடுவதே இவரின் பெரிய ப்ளஸ். ஹர்ஷிதா குரலும் பாஸ் மார்க். ‘உன்னோட பேரை பாஸ்வேர்ட்டாக வைத்திருந்தேன்.. நீ போனால் வேறு பேரா இல்லை..?’ என வரிகளும் ரசிக்க வைக்கிறது.

அந்தப் பாடலில் அசத்தலாக ஸ்கோர் செய்திருப்பவர் பாடகி ஹர்ஷிதா தான்.


4. புதிய உலகை.. : வைக்கோம் விஜயலட்சுமி.

கும்கி படத்தில் வரும் ‘ஒண்ணும் புரியல..’ பாடலையும் கொஞ்சம் ’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை..’ பாடலையும் மிக்ஸ் செய்தால் இப்பாடல் ரெடி! ஜஸ்ட் பாஸ்!

மயக்கும் குரலைக்கொண்ட வைக்கம் விஜயலட்சுமியை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார் இமான். விஜயலட்சுமியின் காந்தக் குரலுக்காகவே அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

5. ஷட் அப் யுவர் மெளத் : ஷ்ருதி ஹாசன், தீபக்.

பாடலின் முதல் வரியை பார்த்ததுமே தெரிந்திருக்கும் எப்படிப்பட்ட பாடல் என்று. ஷ்ருதியின் குரல் வாவ்வ்வ்வ்……!!!!!! தீபக்கின் குரலும் பாடலுக்கு அத்தனை பொருத்தம்! சூப்பர் ஹிட் அடிக்கும் இப்பாடல்!

இதை விட ஒரு இன்ஸ்ட்ரூமெண்டலும், ’புதிய உலகை’ பாடலுக்கும், ’ நீயென்ன பெரிய..’ பாடலுக்கும் கரோக்கிகள் இருக்கின்றன ஆல்பத்தில்!


கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் என்னமோ ஏதோ சுமாரா தான் இருக்கு !

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Tamilss.com0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top