ரம்மி (2014) - பாடல் விமர்சனம்

தொடர் வெற்றிப் படங்களின் கலக்கல் நாயகன் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மியமான படத்தின் பாடல்களுக்கு D.இமான் இசையமைத்திருந்தார். காயத்ரி, ஐசுவர்யா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை க.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். மேலும் 'பீட்சா' படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன், இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ரம்மி படத்தின் இசைப் பற்றி, இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கும் யுகபாரதி பெருமிதத்துடன் கருத்து சொல்லியிருக்கிறார். "வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் ரம்மி திரைப்படத்தின் பாடல்களும் மண்மணம் கமழும் விதத்தில் அமைந்திருப்பதற்கு இயக்குநர் பாலகிருஷ்ணனின் ரசனையே காரணம். அனைத்துப் பாடல்களும் அருமையாக அமைவது ஒருகாலத்தில் வரம்போல இருந்தது. இப்போது அதனை வெகு இயல்பாக செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரிகள் புரிகின்றன. இசை தமிழ் அடையாளத்தோடு இருக்கிறது. அசல் தமிழ் இசையின் திசை நோக்கி நானும் இமானும் பயணிக்க நீங்கள் காட்டிவரும் ஆதரவும் அன்பும் நெகிழ்வடையச் செய்கிறது.ஏனைய படங்களிலும் இம்மாதிரியான இசை வரவை எதிர்பார்ப்போமாக." என்று உற்சாகப்படுகிறார் யுகபாரதி.
காதலும், சீட்டாட்டமும் ஒன்றுதான். மூன்று இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஒன்றாக பழகுகின்றனர். அவர்களின் காதல், நட்பு, குடும்ப செண்டிமென்ட், போராட்டங்களே படத்தின் கதை. இப்படம் தனியார் கல்லூரிகள் உருவாகாத 80-ம் ஆண்டு நடக்கிற கதை.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

மொத்தம் 8 பாடல்கள். அதில் 4 பாடல்கள், 3 கரோக்கி, ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் ட்ராக். எக்ஸ்குளூஸிவ் பாடல்கள் ரிவ்யூ இதோ…

1. அடியே என்ன ராகம் நீ பாடுற.. (அபே ஜோ பர்துகர், பூர்னிமா சதீஷ்)

யுக பாரதி எழுதிய இப்பாடல்.. காதல் கொண்ட ஒரு ஆணின் தவிப்பு பற்றி பேசுகிறது.. ‘இதுவரை இப்படி இல்ல.. கொடுக்கற தொல்ல.. எதுக்கு நீ பொறந்த தெரியல… எதுக்கு வளர்ந்த தெரியல… ‘என வரிகள் ஓகே ரகம். ஆனால் கவனயீர்ப்பு மிஸ்ஸிங்! இசையும் ஜஸ்ட் பாஸ்…

2. கூடமேல கூடவெச்சி.. கூடனூரு போறவளே..(வி.வி.பிரசன்னா, வந்தனா ஸ்ரீநிவாசன்)

டூயட் பாடல். ‘ஒரு பாதி கதவு நீயடி..’ பாடல் பாடிய வந்தனா ஸ்ரீநிவாசன் பாடியதாலோ என்னவோ..அந்த பாடலை கேக்கறது போலவே ஒரு ஃபீல்.. தேறாதா இசை.. சுமாரான வரிகள்.. ஹ்ம்ம்… ஜஸ்ட் ஓகே…

3. ஒரு நொடி பிரியவும்… (டி.இமான், திவ்யா ரமணி)

மற்றுமொரு டூயட். திவ்யா ரமணி.. வார்ம் வெல்கம். அழகான குரல்.(ஸ்ரேயா கோஷலை இமிட்டேட் பண்ணாமல் பாடுங்க.. சூப்பரா இருக்கும் திவ்யா.) இந்த பாடல் மெட்டில் ஒரு தொகை பாடல்கள் மனசுக்கு வந்து போகிறது. எங்கயோ கேட்டமாதிரி இருக்கே… எங்கற மாதிரி இல்லாம.. அட.. இந்த பாட்டுதான்யா அது.. என வகை தொகையாக பல பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.

4. எதுக்காக என்னை நீயும் பாத்த.. ( பூஜா எ.வி, சந்தோஷ் ஹரிஹரன்)

டூயட் பாடல். கும்கி படத்தில் ’வயலின்’ பாடல் போல்.. இந்த பாடலிலும் வயலின் அட்டகாசப்படுத்துகிறது. வரிகளும், இசையும் சுமார் ரகம் தான்.

மேலும், மேல இருக்கற 4 பாடல்களின் கரோக்கிகளும் சீ.டியில் அடக்கம்.!

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் ரம்மி ரசிக்கும்படி இருக்கு!


பொதுவாகவே விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Tamilss.com



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top