சிவகார்த்திகேயனை டம்மியாக்கிய விஜய் !

ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர், சினிமாவில் ஹீரோவான பிறகு அவரை அந்த தொலைக்காட்சி புரமோட் பண்ணுவதும்…

தனக்கு முதலில் மேடை அமைத்துக் கொடுத்த அந்தத் தொலைக்காட்சிக்கு, ஹீரோவான பிறகும் அவர் நன்றியோடு இருப்பதும்… ஆரோக்கியமான விஷயம்…!

இந்த ஒரு விஷயத்துக்காக அந்த தொலைக்காட்சியையும், அந்த ஹீரோவையும் முதலில் பாராட்டிவிடுகிறோம்.

அந்த ஹீரோ சிவகார்த்திகேயன்!

அந்த தொலைக்காட்சி விஜய் டி.வி.!அதற்காக, அந்த ஹீரோவின் இமேஜை பில்ட்அப் செய்வதற்காக, தமிழ்ப்பெண்களைப் பற்றி மற்றவர்கள் தரக்குறைவாக எண்ணும் அளவுக்கு, அருவறுப்பான, அசிங்கமான நிகழ்ச்சியை ஒளிபரப்பியதை வன்மையாக கண்டித்தே ஆக வேண்டும்.

இது நம் கருத்து மட்டுமல்ல, பொங்கல் அன்று விஜய் டி.வியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சியைப் பார்த்த பலரது மனக்குமுறலும் கூட…

சிவகார்த்திகேயனை வானத்திலிருந்து குதித்து வந்த தேவதூதனைப்போல் சித்தரிக்கும் முயற்சியாக, அவரது நட்பு வட்டத்தை வைத்து அவர் நல்லவர்..வல்லவர் என்று ‘வாசிக்க’ வைத்ததில் தப்பில்லை. அது வழக்கமாக எல்லா நிகழ்ச்சியிலும் நடக்கும் சடங்குதான்.

சிவகார்த்திகேயனின் ரசிகைகள் என்ற பெயரில் சில சிங்காரிகளை அழைத்து வந்து, அவர்களின் மூலம் நடத்தப்பட்ட அபத்தக்காட்சிகள் ஆபாசத்தின் உச்சம்.

சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெண் பொங்கல் ஊட்டிவிட்டுவிட்டு தனக்கும் ஊட்டிவிடச் சொல்லி அடம்பிடிக்கிறாள்
இன்னொரு பெண்ணோ, சிவகார்த்திகேயனுக்கு முறுக்கு மீசை வைத்துப் பார்க்கிறாள்.

மற்றொரு பெண்ணோ, சிவகார்த்திகேயனின் கன்னத்தைக் கிள்ள வேண்டும் என்று கிள்ளுகிறாள். என் கன்னத்தை நீங்கக் கிள்ளுங்க என்கிறாள். சிவகார்த்திகேயனும் அப்பாவிப் பையனாக அப்பெண்ணின் கன்னத்தைக் கிள்ளுகிறார்.ஒரு பெண் சிவகார்த்திகேயனிடம் கேவலமான ஒரு கேள்வியைக் கேட்கிறாள். அதற்கு சிவகார்த்திகேயன் சரியான பதிலைச் சொல்லவில்லை என்பதால், அதற்கு தண்டனையாக தன்னைத் தூக்கிக் கொண்டு சுற்றி வர வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். அதற்கு சிவகார்த்திகேயன் மறுக்க, ஒரு பனியனில் லிப்ஸ்டிக் உதடை பதிய வைத்து அதை அணிந்து கொள்ளச் சொல்கிறார்.

இப்படியாக பொங்கல் அன்று அபத்தமாக, ஆபாசமாக அரங்கேறியது – ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சி!

ஒருவேளை சிவகார்த்திகேயனுக்கே உடன்பாடில்லாமல், தன்னை வளர்த்த சேனல் என்ற நன்றி காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஒப்புக்கொண்டிருந்திருக்கலாம். ஆனாலும் ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சி குடும்பப்பெண்கள் மத்தியில் சிவகார்த்திகேயனை ச்சீய்கார்த்திகேயன் என வசைபொழிய வழிவகுத்துவிட்டது.

அதுமட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட, ஆபாசத்தை அரங்கேற்றிய அந்த சிங்காரிகள் உண்மையிலேயே காலேஜில் படிக்கும் பெண்கள்தானா?

அல்லது சினிமாவில் சின்னச்சின்ன காட்சிகளில் தலைகாட்டும் ரிச்கேர்ள்ஸ் என்கிற இளமையான துணை நடிகைகளா என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது.

வட இந்தியர்களின் ஆதிக்கத்தில் உள்ள விஜய் டி.வி. திட்டமிட்டே தமிழ்ப்பெண்களை தலைகுனிய வைக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வந்த கமலுக்கு முத்தமிட ஆசைப்பட்ட ஒரு தொகுப்பாளினியை கமலுக்குக் கூ…. இல்லை..இல்லை.. காட்டிக் கொடுத்து, அவரிடம் முத்தம் வாங்கிக் கொடுத்ததையும் மக்களுக்கு நினைவூட்டுகிறோம்.

விஜய் டி.வி. ஒரு அழகான வீடு. ஆனால், குப்பைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது... சீக்கிரம் சுத்தம் செய்யுங்கள்!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & TamilScreen.com6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் கேவலமான நிகழ்ச்சி...

Bagawanjee KA said...

நல்ல வேளை ,இந்த கண்றாவியை நான் பார்க்கவில்லை!
+1

கும்மாச்சி said...

நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. நம்மிடமும் சில குறைகள் இருக்கின்றன. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் இருந்து விட்டால் அவர்கள் டி,ஆர்,பி ரேட்டிங் இறங்கி அவர்களே நிறுத்திவிடுவார்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நானும் இந்நிகழ்ச்சியை பார்க்கவில்லை.நிச்சயம் கண்டிக்கத் தக்கது.

Arif .A said...

நாம் தான் இவர்களை தட்டி கேக்க வேண்டும்.வலைதளம் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்தியதிற்கு, விழிப்புணர்வு செய்தமைக்கு நன்றி

sandigital said...

intha tv thannoda t r p rating kaaga etha venum na kuda seiyum pola irukku....

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top