நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!

வாய்ப்புகள் இரண்டுவகை.
1. மீண்டும் வாக்கும் வாய்ப்பு.
2. ஒரே ஒரு முறை மட்டும் வாய்க்கும் வாய்ப்பு.

வாய்ப்புகளை இப்படி பிரித்து அறிந்து இனம் காணத் தெரியாதவர்கள் எல்லாவற்றையும் ஓன்று போல எண்ணி, அரிய வாய்ப்பினை நழுவவிட்டுப் பின்னர் வருத்தப்படுகிறார்கள்.

விடியற்காலை எழவேண்டிய அவசியம் சில தினங்களில் நமக்கு ஏற்படுவது உண்டு. ரயில் பிடிக்க, முதல் முகூர்த்ததில் கலந்து கொள்ள, தேர்வுக்கு படிக்க என்று பலருக்கும் அவசியங்கள் பல விதம்.

இவற்றுள் பெருபாலானவை மறுபடி வைக்காத வாய்ப்புகள். விட்டால் கை விட்டது தான் என்ற ரகங்கள்.

அலாரம் வைத்து எழ நினைக்கிறவர்கள், அலாரம் அடித்ததும் அதன் தலைமேல் ஏதோ நம்மீது உட்கார்ந்த கொசுவைத் தூக்கத்தில் அடிப்பது போல பட்டெண்டு அடித்துவிட்டு மறுபடி தூங்க ஆரமித்து விடுகிறார்கள்.


அலாரத்தை படுக்கை அறையின் வெகுமூலை வையுங்கள். அலாரம் அடிப்பதை உணர்த்து சோம்பல் முறித்து, தட்டுத் தடுமாறி எழுந்து, நடந்து பொய் அதை அணைக்க ஆகும் கால இடைவெளி சுமார் ஓர் நிமிடம். இந்த ஒரு நிமிடம் மிக முக்கியமானது. மனதை உடல் கெஞ்சும். படிப்பாவது கிடிப்பாவது ? கடைமையாவது மண்ணாவது ? எல்லாமே தூக்க அரக்கனின் அடிமைகள்.

மறுபடி வந்து படுத்து, "இதோ! ஒரு நிமிடத்தில் எழுதுடறேன்!" என்று உடல் + மனமும் இதற்கு உடன்படும். ஒரு நிமிடமாவது.. ? கண் திறந்தால், வழக்கமான நேரத்தை விடத் தாமதமான கண் விழிப்பு. "ஐயோ!, பல மணி நேரம் போச்சே! போச்சே!" என்று மனம் பதிக்க வேண்டியது தான்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஓன்று தான். இரவில் என்ன நோக்கத்திற்காக அலாரம் வைக்கிறோமோ அதனால் ஏற்படும் பலன்களை பற்றி கற்பனை செய்துவிட்டு, அலாரம் நேரம் எழுந்தே தீருவேன் என்று மனதில் பதிக்கவேண்டும்.

இரவு நேர வைராக்கியத்தால் உடலை முறுக்கேற்ற வேண்டும். உலகை வெல்லும் முனைப்பில் இருப்பதால்ம் தூக்க அரக்கனே! உனக்கு நான் மசிய மாட்டேன். கண்ணில் கண்ட காட்சிகளை கையகப் படுத்துவேன் என்று மனத்திற்குள் உறுதி பூண வேண்டும். இந்த ஒரு நிமிட உறுதி தான் உங்கள் வெற்றியின் விலாசங்களை அடியாளம் காட்டப் போகிறது.

இனி நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!

நன்றி :லேனா

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



4 comments:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நல்லபதிவு அபி பகிர்வுக்கு நன்றி
நான் காலையில் நாலு மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்றால் இரவு படுக்கும் போது கடிகாரத்தை ஒருநிமிடம் உற்று பார்ப்பேன்.அதில் நாலு மணிக்கு முட்கள் இருக்கும் நிலையை கற்பனை செய்துபார்த்து கண்களை முடி கொள்வேன்.காலையில் கண்விழிக்கும் போது சரியாக மணி நாலாக இருக்கும்.அலாரமெல்லாம் வைக்கமாட்டேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

ம் நல்ல பதிவு..

தூங்கம் போது படுக்கை ஒரு பூக்காடு என்றும்
எழும் போது படுக்கை ஒரு இடுகாடு என்றும் எண்ணிக்கொள்ள வேண்டுமாம்..


எங்கோ படித்தது..

Kolipaiyan said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) & முனைவர்.இரா.குணசீலன் - வருகைக்கும் உங்கள் கருத்துரைக்கும் நன்றிகள்

Siraju said...

உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ரசிக்கும்படியாக உள்ளது நண்பரே !

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top