சமையல் குறிப்பு : முருங்கைகீரை கஞ்சி

இரும்பு சத்து நிறைந்த முருங்கைகீரை + புரத சத்து நிறைந்த பச்சைப் பயிரை + வாயுவை நீக்கும் சுக்கை கொண்டு மிகவும் வித்தியாசமான முருங்கைகீரை கஞ்சி செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :

பச்சரிசி நொய் - 1 கப்
பச்சைப் பயிறு (முழுப் பயிறு) - 1 கப்
முருங்கைக்கீரை - தேவையான அளவு
சுக்கு - 1 துண்டு
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
  1. பச்சைப் பயிரை அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கவும்.
  2. கழுவி சுத்தம் செய்யப்பட்ட அரிசியை எட்டுக் கப் தண்ணீரில் நன்கு வேகவையுங்கள்.
  3. இதனுடன் ஊறவைத்த பச்சை பயிரையும் சேர்த்து வேகவையுங்கள்.
  4. சுக்கை நன்கு அரைத்து / பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. அரிசி நன்கு வெந்தப்பின் முருங்கைகீரை + உப்பு + சுக்கை சேருங்கள்.
  6. பச்சைப் பயிறு நன்கு வெடித்து மலரும் வரை வேகவிடுங்கள் + அரிசியும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து பின்பு இறக்குங்கள்.

குறிப்பு :-
பச்சரிசி பயன் படுத்தாதவர்கள் புழுங்கலரிசி பயன்படுத்துகள். வாரத்திற்கு ஒரு நாள் இதனை செய்து சாப்பிடலாம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!5 comments:

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

thanks

Kolipaiyan said...

நன்றி தமிழன்.

Satya Santhose said...

Nice.

Jayadeva said...

குக்கர்ல பன்னனுனா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு வேக வச்சிடனுமா, இல்ல எப்படி?

Kolipaiyan said...

Yes. you are correct. Do the same, Jayadeva.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top