சரக்கு + பஸ் = எங்கே போகிறோம் ?

பதிவர்கள்/ வாசர்கர்களே, கீழ்வரும் நான்கு சம்பவங்களை பாருங்கள். அது போல நீங்கள்/உங்களால் மற்றவர் செய்யாமல் இருக்க வேண்டுகிறேன்.

சம்பவம் 1 :

ஞாயிறுகிழமை, ஒரு ஸ்கூல் படிக்கும் பையன், காக்கி டவுசரும் வெளிர் மஞ்சள் டிசைன் ஷர்ட் என் பார்க்க நன்றாக இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தவன் நைசாக அரசாங்க மதுபான கடைக்கு வந்து, எதோ ஒரு சரக்கு ( பிராண்ட் ) பெயரை சொல்லி வாங்கியவன் திடீரென தன் கால்சட்டையில் ... அட போங்க சொல்லவே வெட்கமா இருக்கு...!



ஏன்பா தம்பி சரக்கு வைக்கிற இடமா அது...? சரக்கு உனக்கா? இல்லை உன்னை அனுப்பிய ஐந்தறிவு ஜீவனுக்கா? இது தான் பிஞ்சிலேயே பழுத்ததுன்னு சொல்றதோ?



சம்பவம் 2

ஒரு உயிரை படைத்து கண்ணும் கருத்துமாய் வளர்த்து பெரிய ஆளாக்கி பார்க்க நினைத்துகொண்டிருக்கும் இதயங்கள் இந்த நாட்டில் எத்தனை எத்தனை...! அவர்களின் நினைவுகளை சில நொடிகளில் தவிடு பொடியாக்க நினைக்கும் பள்ளி மாணவர்களை என்ன சொல்லவது ? அவர்களுக்கு தெரிந்தே அந்த விபரீத முயற்சிகளில் இறங்குவது ஏனோ? ஒரு சிலர் புகழ்ந்து பேசுவார்கள் என்ற நினைப்பில் இப்படி பஸ்ஸில் பயணிப்பது ஏனோ? நீங்களே படத்தை பாருங்க....


உங்க கூட பிறந்தவர்கள் தெரிந்தவர்கள் எவரேனும் இப்படி பயணித்தால் கண்டுயுங்கள். மனித உயிர் விலை பதிக்க முடியாதவைகள். இங்கே பாருங்கள், ஒரு சிறுவன், நம்பர் பிளாட் இருக்கும் இடத்தில் காலைவைத்து பயணிக்கிறான். என்ன நேரத்திலும் அது கீழே விழலாம். அப்படி சென்று அவன் சாதிப்பது சாதித்தது தான் என்ன? இப்படி ஒரு பயணம் தேவைதானா? சிந்தியுங்கள்.



சம்பவம் 3

தெரிந்தே மரணத்தை நோக்கி ஒரு பயணம். சின்னவர்கள் தான் அப்படி என்றால் இங்கே ஒரு வளர்ந்த சிறுவனின் செயலை பாருங்கள்.



ரயில் ட்ராக்கில் சைக்கிள் தள்ளிக்கிட்டு போறதற்கு... நடந்தே போலாமே? திடீரெண்டு அந்த ட்ராக்கில் ரயில் வந்தால் என்னசெய்ய முடியும்? யோசிக்க மாட்டார்களா இவர்கள்?



சம்பவம் 4

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நச்சுன்னு சொல்வார்கள். இங்கே ஒரு ஆட்டோகாரர் படும் பாட்டை பாருங்கள்.



உதவிக்கு ஆள் இருக்கவும் ஏதோ அந்த ஆடோக்கார் சமாளித்தார். இல்லை எனில் அவரது நிலைமை என்னவாகியிருக்கும் ?

ஏதோ என் மனசுக்கு பட்டதை எழுதிவிட்டேன். யார் மனதையும் புண்படுத்த அல்ல. அவரவர் திருந்தினால் தான் உண்டு. No Advice.

நம் பதிவர்களும் வாககர்களும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இது போல எந்த ஒரு தவறையும் செய்ய மாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் உங்களிடம் இருந்து விடைவெறுகிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

இந்த புகைப்படங்களை தந்த தினமலருக்கு நன்றி.



14 comments:

நாமக்கல் சிபி said...

//நம் பதிவர்களும் வாககர்களும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இது போல எந்த ஒரு தவறையும் செய்ய மாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் உங்களிடம் இருந்து விடைவெறுகிறேன். //

அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க!
சத்தியமா நீங்க சொன்ன மாதிரியே தப்பு நடக்காம பார்த்துக்குறோம்! தயவு செய்து எழுதுறத நிறுத்திடாதீங்க! தொடர்ந்து எழுதுங்க!

சின்னப் புள்ளத்தனமா கோவிச்சிகிட்டு/கவலைப் பட்டுகிட்டு விடை பெறுகிறேன்னு போட்டுட்டீங்களே!

எனக்கு அழுகை அழுகையா வருது!

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி சிபியாரே

ரெட்மகி said...

Nice Photos..!

These daredevils need to think about them-self.

Sankar said...

kanna..

Dont be so emotional after seeing these.. just take it as easy.. u will get heart attack if look politicians activities very closely.. its our faith that this country is cursed by politicians.. thats why these type of mistaken activities r happening very casually and they r not worried about the rules, law and etc. in this country..

நாமக்கல் சிபி said...

ஓட்டு போடுற லிங்க் 8 மட்டும்தான் வெச்சிருக்கீங்க! போதுமா?

Unknown said...

முதல் படம் கொஞ்சம் ஆபத்தானது

நன்றி பகிர்வுக்கு

Kolipaiyan said...

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்

Kolipaiyan said...

தலைப்பின் கீழ் வரும் லிங்கை பார்க்க வில்லையா சிபி ? அதிலே இன்னும் நிறைய இருக்கு. அவரவர் விரும்பும் வலைக்கு வோட்டை போடலாம் இல்லையா.. அதனால தான் இவ்வளவு லிங்க்ஸ்.... எப்புடி !

Senthil said...

நண்பரே உங்கள் தொலைநோக்கு பார்வை நன்றாக தெரிகிறது

Kolipaiyan said...

செந்தில் இதில் எதோ உன்குத்து இருப்பதுபோல தெரிகிறதே ...! அப்படியா ...?

பொன் மாலை பொழுது said...

இதில் காணப்படும் அணைவரும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே செய்யும் இயல்பு
உள்ளவர்கள்தான். அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு. இதில் மற்றவர்கள் கவலைப்படவோ அதிர்ச்சி அடையவோ இடமில்லை. அவர்களுக்கு வேண்டியர்களே சொன்னால் கூட இந்த வகை நபர்கள் அதனை அலட்சியம் செய்யும் இயல்பு உடையவர்கள்.இதுபோல தினசரி சென்னையில் மட்டும் நிறைய காணலாம் கோழி.

ஆர்வா said...

என்ன கொடுமை சார் இது???.. ஃபுட் போர்ட்'ல தொங்கறது எல்லாம் பார்த்து நானும் நெறைய வாட்டி வேதனைப்பட்டிருக்கேன்.ரயில்வே டிராக் இமேஜ் ரொம்ப ஓவர்.. நம்ம மக்கள் எப்போத்தான் திருந்தப்போறாங்களோ?

Kannan said...

No way to change their attitude until otherwise they will punish heavily.

cheena (சீனா) said...

அன்பின் கோழி பையன்

ஆதங்கம் புரிகிறது - தவறு தான் - திருந்த வேண்டும் - திருந்துவார்கள் - கவலை வேண்டாம்

நல்வாழ்த்துகள் கோழி பையன்
நட்புடன் சீனா

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top