குரு சிஷ்யன் - படப்பாடல் அறிமுகம்

1990 - ஆம் ஆண்டு இளையாராஜா இசையில் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி + இளைய திலகம் பிரபு இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த படம் "குரு சிஷ்யன்". அதே பெயரில் இப்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் இணைத்து நடித்துள்ள படம் "குரு சிஷ்யன்".1. கிராமத்து பொண்ணு ஒன்னு நகரத்து பெண்ணின் நாகரீகத்திற்கு மாறும் போது நம்ப ஹீரோவும் ஹீரோயினும் பாடும் ஒரு கலாட்டா பாடல். பாடல் வரிகளில் கிராமத்து பெண்ணின் நாகரீகம் + நகரத்து பெண்ணின் நாகரீகம் இரண்டையும் சுட்டிக்காட்டி பாடும்ப்படி அமைத்திருப்பது அருமை.

இது ஒரு கலாட்டா பாடல். கேட்ட நல்லா இருக்கும். பழைய பாடல் மெட்டு. V.N.P.வெங்கட், ரீடா & தீனா குரல்களில் அந்த பாடல் ...
அடேக்கப்பா அடேக்கப்பா ஆளே மாறிடியே
தாவணிய கழட்டிப்போட்டு ஜீன்ச மாட்டிடயே
ஹேர் ஸ்டைல மாத்துறா லிப்டிக்க பூசுரா
லோஹிப்ப காட்டுரா ஹை ஹீல்ச மாட்டுரா
பட்டிக்காட்டு பொண்ணு ஒன்னு சிட்டி கேலா மாறிப்புட்டா
ஆட்டையா போடு நீ ஆட்டையா போடு...
2. மேலடிபாடல் இது. பாடல் வரிகள் மிக அருமை. காதல் ரசம் போங்க வரும் இந்த பாடம் நிச்சயம் சுந்தர் சி பாடுவது போலத்தான் இருக்கும். தீனாவின் பெயர் சொல்லும் பாடல் இது. ரீட்டாவின் பின்னணி ரீங்காரம் ரம்மியம். ரீட்டா , பல்லிராஜ் & தீனா குரல்களில் அந்த பாடல் ...
கதற கதற காதலிப்பேன்
சிறுக சிறுக சிறைப் பிடிப்பேன்
யானை காதில் எறுப்பைப் போல்
காதல் மெல்ல நுளைதிடுமே
3. "பத்திரகாளி" படத்தில் இடம் பெற்ற பாடல் இப்போது ரீமிக்ஸ் செய்து தந்திருக்கிறார் இசையமைப்பாளர் தீனா. பாடலில் அதிக இசை கருவிகள் பயன்படுத்தாமல் அமைத்த தீனாவுக்கு புண்ணியம் கிட்டட்டும். கதாநாயகி தனித்து பாடும் பாடல் இது. சுசித்ரா குரலில் இப்பாடல் கேட்டும்படி இருப்பது கூடுதல் சிறப்பு.
வாங்கோனா...
வாங்கோனா...
கேட்டேளே அங்கே அத பாத்தேலே இங்கே
4. ஓபனிங் பாடல் இல்லாமல் தமிழ் படம் இருக்க கூடாது என்ற நீதியை பின்பற்றி வரும் பாடல் இது. இது ஒருவகையில் தத்துவ பாடல் போலத்தான் இருக்கு. திப்புவின் குரலில் கேட்ட அருமையா இருக்கு.

"உயிரை கூட கொடுப்பேன்னு காதலிக்கிடே நடிக்கிறான்
சிலுமிசம் முடிந்தது சிம்கார்டை மாத்துறான் " - பாடல் வரிகள் என்னை கவர்ந்தவைகள்.
பழனி முருகனுக்கு மலை மேல வீடு
சபரிமல ஐயப்பனுக்கு காட்டுக்குள்ள வீடு
மதுர அழகருக்கு ஆத்துமேலவீடு
தம்முக்குள்ள கஞ்சாவ வஞ்சு இழுத்துபுட்டா உலகமே உன்வீடு

ஆண்டவா ஆண்டவா ஆறுபட ஆண்டவா
நாட்டுக்குள்ள எல்லோருமே நடிக்கிறாங்க ஆண்டவா
5. சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் சொந்த குரலில் பாடியிருக்கும் பாடல் இது. இருவரும் பாடி கலாய்ப்பது போல பாடல் வரிகள் இருக்கு. இடையில், "அடி ஆத்தாடி இவ மனசுல .." என்ற பாடலின் சில வரிகள் இடம்பெறுவது கூடுதல் சிறப்பு. சத்யராஜ், சுந்தர் சி & சின்னபொண்ணு குரல்களில் அந்த பாடல் ...
குருவுக்கும் சிஷ்யனுக்கும் போட்டி ஒன்னு நடக்குதுங்க
கேடிக்கும் கில்லாடிக்கும் வேஷ்டி இப்போ கிளியுதுங்க
லொள்ளா தில்லா பறிச்ச ஒன்னு நடக்குதுங்க
ஜெயிக்க போவது யாருங்கா ?

சுப்பையா சுப்பையா நீ செய்யறது தப்பையா
வட்டி மேல வட்டி வாங்கி வளந்துபோச்சு தொப்பையா
எப்பையா எப்பையா நீ திருந்தறது எப்பையா ?
இப்பயா இப்பயா ஒரு பதிலா சொல்லு இப்பயா..
மொத்தத்தில் 5 பாடல்கள் எல்லாமே மிக அருமையா இருக்கு + ஆட்டம் போட வைக்கிறது. இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே அணுகவும்
Download Here :

http://www.tamilentertainments.com/.../Guru-Sieshyan


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top