'கடவுள்... என் மதிப்புக்குரிய எதிரி!'

கே.எஸ்.நரசிங்க சாமின்னு ஒரு கன்னடக் கவினர் கடவுள்கிட்டே கவிதை மூலமா பேசுவார்.

"ஆகாயம் உன்னுடையது, பூமி உன்னுடையது என்கிறார்கள். நீ மிகப் பெரியவன் என்கிறார்கள். அப்படியே இருந்தாலும், நீ என்னுடைய மதிப்பிற்குரிய எதிரி. உன் சிம்மாசனத்தில் என்னை உட்கார வைக்காதே!. என் கிரீடம் எனக்கு வேண்டவே வேண்டாம்.

என் அப்பாவும் அம்மாவும் தோளோடு தோள் உரசிக்கொண்ட தருணத்தில் வெளியான காம வெப்பத்துக்குப் பிறந்த குழந்தை நான்.

ஒரு பெண் வயிற்றில் இருந்து இந்த உலகத்துக்குப் பிறந்து வந்தேன். இறக்கும் போது பூமி என்கிற இன்னொரு பெண்ணின் வயிறுக்குள் போகிறேன். இடையில் நீ, நட்சத்திரமாக இருக்கலாம். நட்சத்திரங்களால் ஆன மாலை என்றாலும், அந்தப் பாரத்தை என்னால் துக்கித் சுமக்க முடியாது.

கடவுளின் மகிமையைப் பற்றி என் பிள்ளைகளுக்குப் போதிப்பதை விட, சக மனிதனை எப்படி நேசிப்பதுனு அவங்களுக்கு கத்துக் கொடுத்தா போதுங்கிற கட்சி நான்".

நம்பிக்கை இல்லாத ஒரு விசயத்துல வேஷம் போடுறதைவிட, உண்மையா இருக்கிறதைத்தான் கடவுளும் விரும்புவார்.... ஒருவேளை அப்படின்னு ஒருவர் இருந்தா.!


இந்த தகவலை நம்ப 'செல்லம் புகழ்' பிரகாஷ்ராஜ் தனது "சொல்லாததும் உண்மை" என்ற தொடரில் எழுதியது.

என்ன நண்பரே உங்களுக்கு இந்த தகவல் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு என்னக்காக போடுங்கள். நன்றி மீண்டும் சிந்திப்போம்.



5 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி சசிகுமார்.

விக்னேஷ்வரி said...

வாசித்திருக்கிறேன் அவர் புத்தகத்திலேயே.

Kolipaiyan said...

Vicneswari.... Thanks for your visit and comments. He shared a lot in the same book.

virutcham said...

எல்லாம் சரி தான். ஆனா இப்படி சொல்லறவங்க பலரும் தன் மனைவியை தவிரே எல்லோரிடமும் அன்பு காட்டுவது தான் புரிய மாட்டேங்குது.

http://www.virutcham.com

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top