சமையல் குறிப்பு : ஆரஞ்சு பாயசம்

இனி குழந்தைகளுக்கு விடுமுறை காலம் தான். அவர்களுக்கு பிடித்த ஆரஞ்சு பாயசம் செய்துவது பற்றி தான் இன்று சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம். கலர்ப்புல்லான இந்த பாயசம் குழந்தைகளை நன்கு கவரும். அவர்கள் மிகவும் விரும்பி அருந்துவார்கள்.


தேவையான பொருட்கள் :
பால் - 4 கப்
ஆரஞ்சு பழம் - 4 நன்கு சுவையானது
சர்க்கரை - 3\4 (முக்கால்) கப்

ஆரஞ்சு எசன்சு - சில துளிகள்
புட் கலர் ஆரஞ்சு பவுடர் - ஒரு சிட்டிகை
கண் டென்ச்டுமில்க் - 1\2 (அரை) கப்

செய்முறை :
  • பாலில் சர்க்கரையைத் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள்.

  • பிறகு, ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து பாலில் சேர்க்கவும்.

  • அதன் பிறகு, கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள்.

  • இது ஆறியதும் ஆரஞ்சு எசன்சு சேர்த்துக் குளிரவைக்கவும்.

  • ஆரஞ்சுப் பழத்தை தோலுரித்து விதை நீக்கி சிறு துண்டுகளாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனையும் சேர்த்து மேலும் குளிரவைக்கவும். இதோஆரஞ்சு பாயசம் ரெடி.
நன்றி : ராஜேஸ்வரி.

ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!5 comments:

S Maharajan said...

நல்லா இருக்கு பண்ணிருவோம்

Kolipaiyan said...

Maharajan sounds good. All the best.

Mrs.Menagasathia said...

nice payasam.soon will try it!!

நாமக்கல் சிபி said...

அருமை!

Deivasuganthi said...

Good one

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top