மெட்ராஸ் (2014) – இசை விமர்சனம்

வட சென்னை கதைக்களத்தினை தாங்கிவரும் ‘மெட்ராஸ்’ படத்தில் நாயகனாக கார்த்தி, நாயகியாக கத்ரினா தெரேசா நடிக்கின்றனர். இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்க ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்குகிறார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்துவந்த கார்த்திக்கு சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்கள் ஏறுமுகத்தில் அமையவில்லை. எனினும் 'பிரியாணி' ஓரளவுக்கு பரவாயில்லை ரகம். கார்த்தி இப்போது எதிர்பார்ப்பது ஒரு உடனடி வெற்றி அதனால் - ‘மெட்ராஸ்’!

சந்தோஷ் நாராயணன் ‘குக்கூ’ ஆல்பத்தில் பெருமான்மை மக்களை ஈர்த்த இசையமைப்பாளர். அவருடைய அடுத்த ஆல்பமாக, ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. அதே வேகத்தில் சூப்பர் ஹிட் பட்டியலிலும் சேர்ந்துள்ளன.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.

1. சென்னை வட சென்னை...

கபிலன் எழுதிய பாடல். ஹரிஹர சுதன், மீனாக்ஷி ஐயர் கூட்டணி எக்ஸ்ட்ரா எனர்ஜி சேர்க்க முதல் முறை கேட்கும் போதே மனதில் ஒட்டிக் கொள்ளும் ஒரிஜினல் ‘சென்னை ஆந்தம்’. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.

சென்னையில் வாழ்வோரும் சரி, அங்கே பிழைக்க வருவோரும் சரி, விரும்பி ரசிக்கக்கூடிய வரிகள். ‘எங்க ஊரு மெட்ராஸ், இதுக்கு நாங்க தான அட்ரஸ்’ துவக்கத்திலேயே சென்னை கெத்தாக தொடங்கும் பாடல் ‘முள்ளுத் தச்சக் கூட்டுக்குள்ள, காக்கா குஞ்சா வாழ்ந்தாக் கூட’ என சென்னை பூர்வ குடிகளின் சோகத்தை கூட ஜாலியாய் சொல்லி செல்கிறது.


2. ஆகாயம் தீப்பிடிச்சா...

கபிலன் எழுதிய பாடல். பிரதீப்குமார் இதனைப் பாடியுள்ளார். இந்த பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா’ என குறும்பு கற்பனையாய் தொடங்கும் பாடல் ‘வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும்’ என சீரியஸ் ஆகிறது. கபிலன் வரிகளுக்கு பிரதீப்குமாரின் குரல் மற்றும் கிட்டார் இனிமைக் கூட்ட ஆல்பத்தின் காதல் கீதமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

அழகான மெட்டுடன் நல்ல வரிகள் சேர்ந்துகொள்ள, வித்தியாசமான இசைக் கோப்பினால் தன்னுடைய பாணி தனியானது என்று நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சபாஸ்!!!


3. நான் நீ...

இந்தப் பாடலை உமா தேவி என்பவர் எழுதியுள்ளார். ஏற்கெனவே பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்த குரலுக்குச் சொந்தக்காரரான சக்திஸ்ரீயுடன் தீஷிதா இணைந்து பாடியுள்ளார்.

‘நான் பறவையின் வானம், பழகிட வா, வா நீயும்’ என்று பெண் மனதின் மென்மையை தூவுகிறது உமா தேவியின் வரிகள்.


4. காகித கப்பல்..

சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றால், கானா பாலா இல்லாமல் எப்படி? அவருடைய தனித்துவமான குரலில் அக்மார்க் சென்னை ஸ்லாங்கில் அமைந்த பாடல்.

எப்போதும் கேட்கும் கானா பாடல் போலத் தோன்றினாலும் ‘காசு கையில் வந்தாலும், கஷ்டத்துல வாழ்ந்தாலும், போக மாட்டோம் மண்ண விட்டு’ என உரிமைக் குரல் ஒலிக்கிறது. சென்னை வாழ்க்கையை விவரிக்கும் வித்தியாசமான வரிகள் மக்களைச் சட்டென்று கவர்ந்துகொள்ளும்வகையில் இந்தப் பாடலில் பதிவாகியுள்ளன.5. இறந்திடவா நீ பிறந்தாய்...

இதுவும் கானா பாலா பாடல்தான். அவரது வழக்கமான பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு அமைந்துள்ள இந்தப் பாடல் தத்துவார்த்தமான பல விஷயங்களை எளிமையாகச் சொல்லிச் செல்கிறது. இதற்கும் சந்தோஷ் நாராயணனின் இசை இதமான சுகம் தரும்வகையில் அமைந்துள்ளது.

ஒப்பாரி பாடல் தொனியில் ஆரம்பமாகும் பாடல் இல்லாமையை அழுத்தமாய் பதிவு செய்கிறது. இடையில் ஒலிக்கும் ‘தப்பு சத்தம்’ எனர்ஜிக் கொடுத்தாலும் தினம் கடந்துப் போகும் பாடல் போல் இருப்பது சோர்வு தருகிறது.


5. தீம் மியூசிக்... - 2

‘காளி லவ்’ & ‘சுவர்’ என வரும் இரண்டு ‘தீம்’களும் ஆல்பத்துக்கு கூடுதல் பலம்.பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'மெட்ராஸ்' பாடல்கள் ரசிக்கும்படி இருக்கு!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images, Vuin.com & Ottran.in0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top