பிரஞ்சு மொழியில் 2004-இல் வெளிவந்த திரில்லர் கம் அதிரடி ஆக்சன் திரைப்படம் 'District B13'. அதன் ஆங்கில மொழி ரீமேக்கில் வெர்சன் தான் 'Brick Mansions 2014'(பிரிக்ஸ் மேன்சன்ஸ்).
இந்த புதிய வெர்சனில் பால் வாக்கர், டேவிட் பெல்லி, ரஸா, கத்தாலினா டெனிஸ், ஆயிஷா இஸ்ஸா & கார்லோ ரோடா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் 'Camille Delamarre'. இந்த படம் தான் 'பால் வாக்கர்' நடித்த கடைசிப்படம். இந்த படத்திற்கு பிறகு தான் விபத்தில் பால் வாக்கர் பலியானார்.
'District B13' படத்தோடு ஒப்பிடும்போது 'Brick Mansions' ஒரு நல்ல படமே! இந்த படம் தமிழில் 'செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்' என டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
இந்நிலையில், பிரிக் மேன்சன் பகுதியில் இருக்கும் போதைக் கும்பலை ஒழிக்க அதே ஊரில் வசிக்கும் டேவிட் பெல்லி முயற்சி செய்கிறார். அவர்களிடமிருந்து போதை பொருளை திருடி, அதை அழிக்கிறான். இதனால், அந்த போதை பொருள் கடத்தல் கும்பல் இவனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. பெல்லியை பிடிப்பதற்காக அவனது காதலியை கடத்திவந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.
அவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்பல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.
போலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர்.
அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா? பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.
படத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம்.
கத்தாலினா டெனிஸ்
டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
ரஸா
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதுமாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.
கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் 'Brick Mansions' - ஆக்ரோஷம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com
இந்த புதிய வெர்சனில் பால் வாக்கர், டேவிட் பெல்லி, ரஸா, கத்தாலினா டெனிஸ், ஆயிஷா இஸ்ஸா & கார்லோ ரோடா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் 'Camille Delamarre'. இந்த படம் தான் 'பால் வாக்கர்' நடித்த கடைசிப்படம். இந்த படத்திற்கு பிறகு தான் விபத்தில் பால் வாக்கர் பலியானார்.
'District B13' படத்தோடு ஒப்பிடும்போது 'Brick Mansions' ஒரு நல்ல படமே! இந்த படம் தமிழில் 'செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்' என டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
படத்தோட கதை என்னனா ...
'பிரிக் மேன்சஸ்' பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர் முடிவெடுக்கிறார்.இந்நிலையில், பிரிக் மேன்சன் பகுதியில் இருக்கும் போதைக் கும்பலை ஒழிக்க அதே ஊரில் வசிக்கும் டேவிட் பெல்லி முயற்சி செய்கிறார். அவர்களிடமிருந்து போதை பொருளை திருடி, அதை அழிக்கிறான். இதனால், அந்த போதை பொருள் கடத்தல் கும்பல் இவனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. பெல்லியை பிடிப்பதற்காக அவனது காதலியை கடத்திவந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.
அவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்பல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.
போலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர்.
அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா? பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.
படத்துல எனக்கு பிடித்த சில ....
பால்வாக்கர் & டேவிட் பெல்லிபடத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம்.
கத்தாலினா டெனிஸ்
டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
ரஸா
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதுமாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.
கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் 'Brick Mansions' - ஆக்ரோஷம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com
0 comments:
Post a Comment