கமலின் நான்கு புதிய படங்கள் - குஷியில் ரசிகர்கள்!

கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு புதிய ரீமேக் படங்களில் நடிக்கிறார்.

1. விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நாயகிகளாக நடித்துள்ளனர்.

சில பேட்ச் வேலைகள் மட்டுமே உள்ளன. தயாரிப்புக்கு பிந்தைய வேலைகளில் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் எந்த நேரமும் படம் வெளியாகலாம்.

உத்தம வில்லன் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் என கமல் ஹாஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

2. உத்தம வில்லன்

உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில், லிங்குசாமியின் தயாரிப்பில் திரைக்கு வெளிவரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம். இந்தப் படத்தில் முதன்முறையாக கமல் வித்தியாசமான வில்லன் வேடத்தில் வருகிறார். கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்திருக்கின்றனர். கூடவே இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

3. 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்

மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். தமிழில் திரிஷ்யம் ரீமேக்கில் கமல் மோகன்லால் வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் நடிகை மீனா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் நடிகை கவுதமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வளம்வரவுள்ளார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஜூலை 15 ந்தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தையும் இந்த ஆண்டே வெளியிட்டுவிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.

4. 'மனம்' தமிழ் ரீமேக்

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'மனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அப்படத்தை பார்த்து ரசித்த கமல், நாகேஸ்வரராவின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த அந்த படத்தை பார்த்து முடித்ததும், தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம் கமல்.

நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் கமல் நடிக்க, நாகார்ஜூனா வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அன்பே சிவம் மற்றும் மன்மதன் அம்பு படங்களில் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும், நாகசைதன்யா வேடத்துக்கு அப்படம் தொடங்கும் நேரத்தில் இன்னொரு இளவட்ட நடிகரிடமும் கால்சீட் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இரண்டு மாத இடைவெளியில் அடுத்து அடுத்து கமல் படங்கள் வெளிவருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & EniyaTamil0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top