கோ - திரைப்பட விமர்சனம்

'கனா கண்டேன்', 'அயன்' படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் மூன்றாவது படம் 'கோ'.
சட்டத் துறை, ஆட்சித்துறை, நீதித் துறை இவைகள்தான் ஒரு தேசத்தின் மூன்று முக்கிய தூண்கள். இதில் எந்த துறை தவறு செய்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் கொண்ட நான்காவது துறைதான் பத்திரிகைத் துறை. அதனால்தான் இத்துறையை தேசத்தின் நான்காவது தூண் (Fourth pillor of the state) என்பார்கள்.
இந்த நான்காவது தூணை மையப்படுத்தி பத்திரிகையாளர்களின் வாழ்வையும், சவால்களையும் எடுத்துக்காட்டியிருக்கும் முன்னாள் பத்திரிகையாளரும், இன்றைய இயக்குனருமான கே.வி.ஆனந்த் அவர்களுக்கு முதலில் ஒரு சபாஷ் போட வேண்டும்.


படத்தோட கதை என்னானா...

முகமூடி அணிந்த சிலர் வங்கி ஒன்றைக்கொள்ளையடிக்கிறார்கள். அதைவிரட்டி புகைப்படம் எடுத்து கொள்ளையடித்தவர்களில் சிலர் பிடிபடக்காரணமாக இருக்கிறார் ஜீவா.இந்தகாட்சியுடன் துவங்குகிற படத்தில் தொடர்ந்து விறுவிறுப்பு.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் வாசகர்களுக்கு உண்மையாக இருக்க முயலும் நாளிதழ் அலுவலகம், அங்கு நேரடியாக வந்து மிரட்டும் எதிர்க்கட்சித் தலைவர்.

இந்த அரசியல் போட்டிக்கிடையில் நியாயமான மக்கள் குரலாக இளைஞர்கள் தலைமையில் முன்னேறத்துடித்துக்கொண்டிருக்கும் இளம்தலைவராக அஜ்மல், தேர்தலில் விளையாடும் பணம், வன்முறைக்கு மத்தியில் வெடிகுண்டு வெடித்துப் பல உயிர்கள் பறிபோய் அந்த அனுதாப இடைவெளியில் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப்பிடிக்கிற அஜ்மல் உண்மையில் யார் என்பதை இறுதிக்காட்சியில் சஸ்பென்சாகச் சொல்கிறார்கள்.


எனக்கு பிடித்த சில...

படம் பார்க்கும் போது ஏதோ நாவலை படித்த ஒரு பீலிங்!

எந்நேரமும் பரபரப்பான காரெக்டரில் ஜீவா பொருத்தமாக இருக்கிறார்.

ரேணுகாவாக வரும் கார்த்திகா, பெண் பத்திரிகையாளர் வேடத்தில் அசத்தியிருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். கார்த்திகாவுக்கு இது முதல் படமென்பதால் ஓகே.


சரோ எனும் சரோஜாவாக வரும் ஃபியா முத்திரை பதிக்கிறார். ஃபியாவுக்கு அழகுக் காரெக்டர். ஜீவா கார்த்திகாவைக் காதலிப்பதை அறியும் ஹோட்டல் சீனில் கலக்கி விடுகிறார். படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது ஃபியா தான். செம ஜாலிப் பட்டாசு! ஆனால் அரசியல் பிடியில் அவர் இறந்துபோவது தனி சோகம்.

வசந்தன் பெருமாளாக வரும் அஜ்மல் நிறைவான நடிப்பு. ஊழல் மிகுந்த அரசியலை எதிர்க்கும் இளைஞராக வருகிறார்.

கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ்-க்கு நடிக்க அவ்வளவாக வாய்ப்பு இல்லை. பிரகாஷ் ராஜ் ஆட்களுக்கும் நடக்கும் கார், பைக் சேஸ் சீன்கள் ஆங்கில படத்துக்கு இணையான விறுவிறுப்பு.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் 6 பாடல்கள்கள். 'அமளி துமளி' பாடலை மிகவும் வித்யாசமான வெளிநாட்டு லொக்கேசன்களில் படம் ஆக்கி உள்ளனர். இதமான பாட்டுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சைனாவின் அழகான இயற்கை லோகேஷன்கள்!

‘வெண்பனியே’ பாடல் தேவையில்லாத இடை சொருகல். கதையின் வேகத்தை அது பாதிக்கிறது.

கிளைமாக்ஸ் சண்டை காட்சியின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம்.
ஒரு நேர்மையான பத்திரிகை, துணிச்சலான அதன் எடிட்டர், ஒரு போட்டோகிராஃபர், இரண்டு பெண் நிருபர்கள் ஆகியோருடன் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக களைகட்டுகிறது "கோ".

‘கோ’ வை ஒரு முறை பார்க்கலாம்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!4 comments:

cheena (சீனா) said...

நல்லதொரு பட விமர்சனம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Shiva sky said...

innaikey pakka poren..........

யாவரும் கேளிர் said...

நிறைவான விமர்சன கருத்துக்கு வாழ்த்துக்கள்!.
எப்பொழுதும் நேர்மறையான ஹீரோயிசத்தை படமெடுக்கும் கே.வி.ஆனந்த் படங்களை திரையரங்கில் சென்று காண்பதே என் வழக்கம். இம்முறையும் அப்படித்தான்...

Kolipaiyan said...

@cheena (சீனா),
@Shiva sky &
@யாவரும் கேளிர் ,
உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top