அவன் இவன் - இசை விமர்சனம்

"நந்தா"-வுக்குப் பிறகு பாலாவும் யுவன் சங்கர் ராஜா உடன் பாடலாசிரியர் முத்துக்குமார் இணைந்து பணிபுரிந்திருக்கும் நகைச்சுவை கலந்த படம் "அவன் இவன்". இதில் விஷால் திருநங்கையாகவும் விஷாலின் சகோதராக ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.

ஒரு அண்ணன் தனது தம்பி ஆரவாணி என தெரியும் பட்சத்தில் எப்படி தன் தம்பியுடன் சகோதரத்தன்மையை பேணுவான் என்பதைத்தான் பாலா தனது ஸ்டைலில் காண்பித்திருக்கிறாராம் இந்த "அவன் இவன்" திரைப்படத்தின் மூலமாக.
புதிய பரிமாணம் என்றதும் மேற்கத்தைய இசை இல்லாமல் நம்மவூர் கிராமிய இசை கருவிகளை கொண்டு சும்மா பட்டையை கிளபியிருகிறார் யுவன். இப்படி ஒரு வித்தியாசமான இசையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கிரேட்!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

1. அவனும் சரியில்ல இவனும் சரியில்ல
எவன்தான் நான் இப்போ பாடபோறான்...
என தொடங்கும் இந்த பாடலை

T.L. மகாராஜா & சத்யன் இருவரும் போட்டிப்போட்டு பாடும் பாடல் இது. மெதுவாக ஆரமித்து சும்மா பட்டையை கிளப்பும் நம் கிராமத்து மனம் வீசும் ஒரு கும்மக்குத்து பாடல். இந்த பாடலில் இடம் பெரும் இசைக்கருவிகள் பழம்பெரும் கிராமங்களில் மட்டும் கேட்டகூடியவைகள். பாடல் வரிகள் அனைவரையும் கவரும்.


2. ஹே அடி ஏ
டியா டியா டோலே...
என தொடங்கும் இந்த பாடலை

சுசித்ரா பாடியுள்ளார். பாடல் வரிகள் இல்லாமல் வெறும் ஒரு சில வார்த்தைகளை கொண்டு வடிவமைக்கப் பட்ட பாடல்.

தார, தப்பட்ட, நாதஸ்வரம், சலங்கை, சண்ட மேல இசையும் உடுக்கை ஓசையுடன் கலந்து வரும் இந்த பாடல் சும்மா மிரட்டியுள்ளது. பலரது செல்போன்களில் இந்த பாடல் ரிங்-டன்னாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.3. ஒரு மலை ஓரம் அங்கு கொஞ்ச மேகம்
அந்த அடிவாரம் ஒரு வீடு...
என தொடங்கும் இந்த பாடலை

விஜய் யேசுதாஸ், பேபி பிரியங்கா, பேபி ஸ்ரீனிஷா & பேபி நித்யஸ்ரீ இணைந்து பாடிய ஒரு
சுகமான மெலடி பாடல் இது. கிட்டார் மெல்லிசையுடன் புல்லாங்குழலும் கரைவது கேட்க கேட்க சுகம்.


4. முதல் முறை என் வாழ்வில்
மரணத்தை பார்கிறேன்...
என தொடங்கும் இந்த பாடலை

விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். ஒரு சிறு சோகப்பாடல். இந்த பாடலை காட்சிகளும் காணும் போது இதன் சிறப்பு இன்னும் கூடும் என்பதில் ஐயமில்லை.5. காட்டு சிரிக்கியே காட்டு சிரிக்கியே
காத்து கெடக்கரன் வாடி...
என தொடங்கும் இந்த பாடலை

ஹரிசரண் பாடியுள்ளார். இது ஒரு ரொமாண்டிக் பாடல். இந்த பாடல் இரண்டு பாடல்களை நம் நினைவுக்கு கொண்டுவரும்.
1. காட்டுசிருக்கி பாடல்
2. கண்ணுக்குள் நூறு நிலவா பாடல்
எங்கள்வூர் திருவிழாவில் வாசிக்கப்படும் சில இசை கருவிகளின் இசையை இந்த பாடல்களில் கேட்டதும் என்னக்குள் ஒரு வித சிலிர்ப்புவந்ததை மறுக்கமுடியாது.

கோவா, பையா, நான் மகான் அல்ல, பாஸ்(எ)பாஸ்கரன் என்றவாறு தொடர்ந்து
வெற்றிப்பயணத்தில் சென்று கொண்டிருக்கும் யுவனின் அடுத்த படைப்பாக அமைய இருப்பது தான் "அவன் இவன்".

எனக்கு ரொம்ப பிடித்த பாடல் : அவனும் சரியில்ல இவனும் சரியில்ல

நல்ல இசையை நாம் ரசிப்பதுடன் நில்லாமல் பிறருக்கும் அறிமுகம் செய்வது நன்று.
கிராமியமணத்துடன் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது ஞாபகம் இருக்கலாம். அந்த வரிசையில் மேலும் ஒரு படம் இந்த
"அவன் இவன்" - கிராமத்து இசை திருவிழா!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!5 comments:

cheena (சீனா) said...

அன்பின் கோழி பையன்

அருமையான பாடல் விமர்சனம் - ஒரு படப் பாடல்கள் அனைத்தையுமே - இசை உட்பட இரசித்து - விமரிசித்தது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Kolipaiyan said...

Cheena, Thanks for your visit and comment.

KK said...

ஒரு மலை ஓரம் அங்கு கொஞ்ச மேகம்
அந்த அடிவாரம் ஒரு வீடு.. Song of the year.

வேங்கை said...

பாடல்களை நானும் கேட்டேன் ... ரொம்ப புடிச்சு இருக்குங்க ..

Kolipaiyan said...

@KK &
@வேங்கை,
உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top