பிறந்த நாள் வாழ்த்துக்கள் சச்சின் !!!

கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 38-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நாட்டின் முக்கிய தலைர்களும், பிரபலங்களும் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நானும் அவரது ரசிகனாய் உங்களுடன் சேர்ந்து அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

ஹாப்பி பர்த்டே சச்சின்!!!

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1973 ம் ஆண்டு ஏப்ரல், 24-ம் தேதி மும்பையில் பிறந்தார்.

1989 ம் ஆண்டு அணியில் அறிமுகமான இவர், 22 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடுகிறார்.

பிறந்த நாள் அதுவுமாக தன்னுடையக் குடும்பத்தாரிடமிருந்து வந்த வாழ்த்துக்களை எண்ணி பூரித்துப் போகிறார் சச்சின். குறிப்பாக மனைவி அஞ்சலி மீதும் மகள் சாரா மீதும் சச்சின் காட்டும் அன்பு அலாதியானது. மனைவி சொல்லே மந்திரம் என்கிறார் சச்சின். அவளில்லையேல் அணுவும் அசையாது என்றும் சொல்கிறார் (ஆஹா என்ன அன்பு, எத்தனை அன்பு!).


நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சச்சின். மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோருடன் அமர்ந்திருந்த சச்சினை மேடைக்கு அழைத்தனர். மேடையில் ஏறி மைக் பிடித்த சச்சின், முன்வரிசையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த மனைவி அஞ்சலியைப் பார்த்து சிரித்தபடியே,
”வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். ஆனால், என்னைப் பொருத்த வரை, அவள் பின்னால் இல்லை எனக்கு முன்னால் இருக்கிறாள்” என்றாரே பார்க்கலாம்.

மனைவி குறித்த சச்சினின் இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.

அதேசமயம் சச்சின் தன்னுடைய வெற்றியின் பின்னால் மனைவி மட்டுல்லாமல் மற்றும் இரண்டு பெண்களுக்கு இடமுண்டு என்றார்.0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top