அழகோ அழகு... Six Useful Tips!

மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான். உடலிலும், உள்ளத்திலும் குறை ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும். இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.


1. முகம் பொலிவு பெற...
தேன் – 1 ஸ்பூன்
ஆரஞ்சு பழச்சாறு – 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.


2. அழகான உதடுகளுக்கு...

பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்.

வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால் வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும்.


3. வறண்ட சருமத்திற்கு...

வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.4. உதடுகள் பொலிவு பெற...

உதடுகள் கறுப்பாக இருப்பவர்கள் சிறிதளவு வெண்ணெயை உதட்டில் தினமும் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் உதட்டிலுள்ள கருமை நிங்க, இயற்கையான ரோஸ் நிறம் கிடைக்கும்.


5. கண்ணுக்குக் கீழ் உள்ள வீக்கம் குறைய...

கண்ணுக்குக் கீழ் உள்ள வீக்கம் குறைய - ஒரு டீஸ்பூன் பச்சை உருளைக் கிழங்கு சாறை அந்த இடத்தில் தடவவும். பத்து நிமிடம் வைத்திருந்து பின் கழுவவும்.


6. முகப்பரு நீங்க...
கொத்தமல்லி – 5 கிராம்
புதினா – 5 கிராம்
எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!3 comments:

THOPPITHOPPI said...

நன்றி

Philosophy Prabhakaran said...

அமலா பால் ஸ்டில் சூப்பர்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

Kolipaiyan said...

Thanks THOPPITHOPPI & Philosophy Prabhakaran :)

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top