காவலன் - விமர்சனம்

விஜய் பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டாமல் நடித்திருப்பது தான் காவலன் படத்தின் பெரிய பலம்! இளமை துள்ளும் விஜய்யை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு. வழக்கமான மசாலாக்களை விட்டு விட்டு நல்ல கதையை தேர்வு செய்ததற்கு விஜய்க்கு ஒரு பாராட்டு..
படத்தோட கதை என்னானா...

பிளாஷ்பக் கதையாக ஆரம்பமாகிறது...

அந்த ஏரியாவிலேயே ‌பெரிய மனிதர் ராஜ்கிரண். ஒருகாதலத்தில் அடிதடி வம்பு, வழக்கு என தாதாவாக வாழ்ந்த அவர், ஒரு நம்பி‌க்கை துரோகியை தீர்த்து கட்ட பக்கத்து ஊருக்கு வரும் பொழுது பிரசவலியால் துடிக்கும் ஒரு தாயையும், சேயையும் காபந்து செய்கிறார். அவராலேயே பெயர் சூட்டப்படும் அந்த சேய், வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜ்கிரணுக்‌கே காவலுக்கு போகிறான். ராஜ்கிரணோ அவரது மகள் அசினுக்கு அந்த வாலிபனை காவலாக்குகிறார்.

அந்த காவலனே அசினின் காதலன் ஆவதும், அந்த காவல், காதலால் எழும் விளைவுகளும் தான் "காவலன்" படத்தில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் மீதிக்கதை!
ஓபனிங்க் பாக்சிங்க பைட்டுக்கு பாங்காங் போகிற மாதிரி காட்டிவிட்டு, விஜய் கை பட்ட 'பைட்டர்' எல்லாம் கீழே விழுந்து தோற்று போவது போல கட்டுவது கொஞ்சம்............. ஓவரா இல்ல ?
எனக்கு பிடித்த சில...

விஜய் நீண்ட நாட்களுக்கு பின்பு அற்புதமான காதல் கதையில் நடித்துள்ளார். முகமறியாத தன் காதலியை சந்திக்க இடத்தில் அசினுடன் பேசும் இடம் அட அட!!!. சூப்பர் ஆக்டிங் விஜய். விஜய் பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளார். கொஞ்சம் சதை போட்டு மேலும் அழகாக தெரிகிறார். அதும் கிளைமாக்ஸ் ஹேர் ஸ்டைல் அட்டகாசம்.
சண்டை காட்சிகள் ஒன்றும் சொல்லிகொல்லும்படி இல்லை.

வழக்கமாக விஜய் படத்தில் இருக்கும் துள்ளல் டான்ஸ் இந்த படத்தில் மிஸ்ஸிங்க்...
ராஜ்கிரண் அசினின் அப்பா. மிரட்டலான நடிப்பில் மிரளவைக்கிறார். ராஜ்கிரணின் ஜோடி ரோஜாவும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார்.

அசினுக்கு வெயிட்டான ரோல். ஒரு புறம் காதலியாய் விஜயிடம் உருகி மறுபுறம் தான் யாரென்று சொல்ல முடியாமல் விஜய் படும் கஷ்டங்களைப் பார்த்து கலங்கி அழகாய் செய்திருக்கிறார். பல காட்சிகளில் ஒடுங்கிய கன்னங்களோடு வருகிறார். Why ?

அசினின் தோழியாக 'சூர்யன் சட்டக் கல்லூரி' நாயகி மித்ரா. கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அசினை காட்டிலும் இவள் மிக இயல்பாக நடிதிருகிறாள். விஜயை கைபிடிக்கும் இடம் கொஞ்சம் லாஜிக் மீறல். பட் ஓகே.
அம்மாவாசையாக வடிவேலு. அதற்கலம் பண்ணுகிறார். லேடீஸ் ஹாஸ்டலில் தான் அடிவாங்கிய சம்பவத்தை சொல்லும் இடத்தில் தியேடரே ஒரே சிரிப்போலிதான்.

தூங்கி வழியும் எம்.எஸ்.பாஸ்கர் உடல் மொழியால் சிரிக்கவைக்கிறார்.

வித்யாசாகரின் இசை + மெலடி பாடல்கள் ஓகே ரகம். யாரது யாரது சூப்பர் மெலோடி. ஸ்டெப் ஸ்டெப் பாடலும் & விண்ணைக்காப்பான் ஒருவன் பாடலும் தேவையில்லாத திணிப்புகள்.

நல்ல கதையை தேர்வு செய்துவிட்டு மோசமான திரைக்கதையில் சருக்கிவிட்டார் டைரக்டர் சித்திக். படத்தின் முதல் பாதியை கடக்க ரொம்பவும் பொறுமை தேவைப்படுகிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் அந்த குறையை போக்கி ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய செய்திருக்கிறார் இயக்குநர் சித்திக்.

காவலன் - வித்தியாசமான விஜயை காண பார்க்கலாம்.

பொங்கல் கரிநாள் அன்று நான் பார்த்த தியடரில் காத்து வாங்கியது. என் அக்கா & அண்ணன் குழந்தைகளுடன் சென்று பார்த்தேன். நூறுபேர் தான் என்னுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள். பாடல் வரும்போதெல்லாம் ரசிகர்கள் வெளியே சென்றதை பார்க்க பார்க்க நானும் பாடலை ரசிக்க முடியவில்லை.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



5 comments:

மதன்செந்தில் said...

அப்படியே நறுமுகை.காம் விமர்சனம் படிச்ச மாதிரி இருக்கே...

www.narumugai.comn

Philosophy Prabhakaran said...

நடிகைகளின் ஸ்டில் இணைத்திருக்கும் உங்களது ரசனை என்னுடயதோடு நன்றாக ஒத்துப்போகிறது...

Kolipaiyan said...

@Philosophy Prabhakaran


Thanks Philosophy Prabhakaran:)

puduvaisiva said...

Mithra picture so cute

thanks Kozhi

Muruganandan M.K. said...

சுருக்கமாகவும் சுவையாகவும் விமர்சித்திருக்கிறீர்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top